ரூ.799 கொடுத்தால் இப்படி ஒரு சூப்பர் TWS இயர்பட்ஸ் வாங்கலாமா? உண்மையாவா?
நாய்ஸ் (Noise) நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் புதிதாக ஒரு TWS இயர்பட்ஸ் சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதை நிறுவனம் நாய்ஸ் பட்ஸ் ஏரோ (Noise Buds Aero) என்ற பெயருடன் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது.
மலிவு விலை என்று சொன்னதும், என்ன ஒரு ஆயிரம் ரூபாய் இருக்குமா? என்று சிலர் இப்போதே கெஸ் செய்ய துவங்கி இருப்பீர்கள். ஆனால், இதன் விலை ரூபாய் ஆயிரத்தையும் விட மிகவும் குறைவு. இதுவரை எந்த நிறுவனமும் அறிமுகம் செய்யாத அம்சத்துடன், நம்ப முடியாத விலையில் நாய்ஸ் நிறுவனம் இந்த சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை பற்றி அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Noise அதன் TWS இயர்பட்ஸ் வரிசையில் ஒரு புதிய கூடுதலாக, Noise Buds Aero சாதனத்தை தற்போது மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நேர்த்தியான மேட் பினிஷ் மற்றும் குரோம் வடிவமைப்புடன் இந்த இயர்பட்ஸ் சாதனத்தை நிறுவனம், உயர் செயல்திறன் கொண்ட ஆடியோ அம்சத்துடன், அதிநவீன தோற்றத்தையும் கலந்து அட்டகாசமான ஒரு தயாரிப்பாக உருவாக்கியுள்ளது.
ஆடியோ பிரியர்கள், ஸ்போர்ட்ஸ்மென் என்று பலதரப்பட்ட மக்களை மலிவு விலையில் கவரும் படி, இந்த Noise Buds Aero இயர்பட்ஸ் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரத்யேகமான கேமிங் மோட் உடன் 50ms லோ-லேடன்சி அம்சத்தையும் இந்த இயர்பட்ஸ் சாதனம் கொண்டுள்ளது. இது 45 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளுடன், இந்த இயர்பட்கள் நீட்டிக்கப்பட்ட பயன்பாட்டை உறுதி செய்கின்றன.
கூடுதலாக, இவை 13mm டிரைவர் உடன் தடையற்ற இணைப்புக்காக புளூடூத் v5.3 உடன் வருகின்றன. HyperSync தொழில்நுட்பமானது, சார்ஜிங் கேஸ் திறக்கப்பட்டவுடன் சிரமமின்றி இணைவதை செயல்படுத்துகிறது. அதே நேரத்தில் சுற்றுச்சூழல் ஒலி குறைப்பு தொழில்நுட்பம் கவனச்சிதறல்களைத் தடுக்க உதவுகிறது. மேலும், IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் இது வருகிறது. இது AAC ஆதரவுடன் 13mm டிரைவர் உடன் வருகிறது.

இதில் ESR - சுற்றுச்சூழல் ஒலி குறைப்பு அம்சம் உள்ளது. இது 45 மணிநேர பிளே பேக் நேரத்தை வழங்குகிறது. வெறும் 10 நிமிட சார்ஜ் இல் 120 நிமிட பிளே பேக் நேரத்தை வழங்குகிறது. இது USB டைப் C சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. இதில் இன்ஸ்டாசார்ஜ் அம்சமும் உள்ளது. இது 1 வருட உத்தரவாதத்துடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய Noise Buds Aero இயர்பட்ஸ் விலை வெறும் ரூ. 799 மட்டுமே.
இது ஜூலை 1, 2023 அன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். இவை Myntra மற்றும் gonoise.com இல் வாங்குவதற்குக் கிடைக்கும். இது சார்கோல் பிளாக் மற்றும் ஸ்னோ ஒயிட் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








