Home
Gadgets

சவுண்ட் சும்மா கிழி.. சிங்கிள் சார்ஜில் 120 மணி நேர பேக்கப்.. டூயல் டிரைவர்கள்.. 45dB ஏஎன்சி.. எந்த ஹெட்போன்?

இந்திய மார்கெட்டில் நாய்ஸ் நிறுவனத்தின் நாய்ஸ் ஏர்வேவ் மேக்ஸ் 6 (Noise Airwave Max 6) ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. டூயல் டிரைவர்கள் வருவதால், பிரீமியம் பேஸ், பேலன்ஸ்டு அவுட்புட் கிடைக்கிறது. சிங்கிள் சார்ஜில் 120 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கிறது. இந்த நாய்ஸ் ஏர்வேவ் மேக்ஸ் 6 ஹெட்போன் மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் பீச்சர்களை பட்ஜெட் விலையில் இந்த நாய்ஸ் ஏர்வேவ் மேக்ஸ் 6 கொடுத்து இருக்கிறது. ஏனென்றால், இந்த விலைக்கு சிங்கிள் டிரைவர்கள் கிடைக்கும். ஆனால், இதில் கோஆக்சியல் டூயல் டிரைவர் சிஸ்டம் (Coaxial Dual Driver System) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ஆடியோ வேரியேஷன் மட்டுமல்லாமல், பிரீமியம் அவுட்புட் கிடைக்கும்.

சவுண்ட் சும்மா கிழி.. சிங்கிள் சார்ஜில் 120 மணி நேர பேக்கப்.. மாடல்?

நாய்ஸ் ஏர்வேர் மேக்ஸ் 6 அம்சங்கள் (Noise Airwave Max 6 Specifications): கோஆக்சியல் டூயல் டிரைவர் கொண்டுள்ளது. ஆகவே, 40 எம்எம் டிரைவர் மற்றும் 12 எம்எம் டிரைவர்கள் கிடைத்துள்ளது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் எல்டிஏசி (LDAC) சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்மார்ட் அடாப்டிவ் ஹைபிரிட் ஏஎன்சி (Smart Adaptive Hybrid ANC) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, 45dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கொடுக்கப்பட்டு உள்ளது. 5 மைக்ரோபோன் அரேய் ( 5 Microphone Array) கொண்ட மாடலாக இந்த நாய்ஸ் ஏர்வேர் மேக்ஸ் 6 ஹெட்போன் இருக்கிறது. மேலும், விண்ட் நாய்ஸ் கேன்சலேஷன் (Wind Noise Cancellation) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, டிராவல் செய்யும் ஆடியோ பிரியர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) மற்றும் 3டி ஆடியோ (3D Audio) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த நாய்ஸ் ஏர்வேர் மேக்ஸ் 6 உள்ளது. ஆகவே, 360 டிகிரி ஆடியோ அவுட்புட் விரும்பும் ஆடியோ பிரியர்களுக்கு பக்காவான ஆப்ஷனாகவும் இந்த நாய்ஸ் ஏர்வேர் மேக்ஸ் 6 இருக்கும். ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) கனெக்டிவிட்டியை கொடுத்து இருக்கிறது. அதிக பேட்டரி கொடுக்கிறது.

அதாவது, ஹெட்போன் மாடலாக இருப்பதால், சிங்கிள் சார்ஜில் 120 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுத்து உள்ளது. மேலும், ஏஎன்சி மோட் (ANC Mode) ஆன் செய்யப்பட்டு இருந்தால், 80 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த நாய்ஸ் ஏர்வேர் மேக்ஸ் 6 ஹெட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 15 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். சாலிட் ஸ்டீல் ஹெட்பேண்ட் கொண்டுள்ளது. இருப்பினும், பிரசர் இல்லாமல், மாட்டி கொள்ள முடியும். கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair), 80 எம்எஸ் லோவ் லேட்டன்சி கொண்ட மாடலாக இந்த நாய்ஸ் ஏர்வேர் மேக்ஸ் 6 ஹெட்போன் கிடைக்க உள்ளது.

டியூன் ஒயிட் (Dune White), கோபால்ட் ப்ளூ (Cobalt Blue), ப்ராஸ்ட் கிரீன் (Forest Green) மற்றும் கார்பன் பிளாக் (Carbon Black) ஆகிய கலர்களில் இந்த நாய்ஸ் ஏர்வேர் மேக்ஸ் 6 ஹெட்போன் கிடைக்கிறது. ரூ.6,999 விலையில் ஆர்டர் செய்து கொள்ளலாம். கோநாய்ஸ் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Noise Airwave Max 6 With 120h Playback Launched in India Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X