Home
Gadgets

பட்ஜெட்ல பிரீமியம் ஹெட்போன்ஸ்.. 80 மணிநேர பிளேநேரம்.. Noise Airwave Max 5 விலை என்ன பாருங்க.. சவுண்ட் அலறுது..

நாய்ஸ் (Noise) நிறுவனம் தற்போது அதன் ஆடியோ தயாரிப்பு சாதனங்களின் வரிசையில் புதிய சேர்ப்பாக நாய்ஸ் ஏர்வேவ் மேக்ஸ் 5 ஹெட்போன்ஸ் (Noise Airwave Max 5 Headphones) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது நாய்ஸ் பிராண்டின் முந்தைய மாடலான நாய்ஸ் ஏர்வேவ் மேக்ஸ் 4 ஹெட்போன்ஸின் (Noise Airwave Max 4) வெற்றியை தொடர்ந்து இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஹெட்போன்ஸ் சாதனத்தின் விலை என்ன? இதில் என்னென்ன அம்சங்களை நாய்ஸ் நிறுவனம் பேக் செய்துள்ளது என்பது போன்ற தெளிவான விபரங்களை பார்க்கலாம்.

பட்ஜெட் விலையில் பவர்புல் ஆடியோ சாதனங்களை விற்பனை செய்யும் நம்பகமான நிறுவனமாக நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் திகழ்ந்து வருகிறது. எப்படி பிரீமியம் ஆடியோ சாதனங்கள் என்றால் நாம் சோனி நிறுவனத்தை குறிப்பிடுகிறோமோ, அதேபோல் பட்ஜெட்டில் பெஸ்ட் ஆடியோ சாதனங்களை வழங்கும் நிறுவனம் என்றால் அது நாய்ஸ் தான் என்று கூறும் அளவிற்கு நாய்ஸ் பிராண்ட் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது.

பட்ஜெட்ல பிரீமியம் ஹெட்போன்ஸ்.. 80 மணிநேர பிளேநேரம்.. Noise Airwave..

பட்ஜெட்ல பிரீமியம் Noise Airwave Max 5 ஹெட்போன்ஸ்.. 80 மணிநேர பிளேநேரம்:

நாய்ஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய ஹெட்போன்ஸ் மாடலான நாய்ஸ் ஏர்வேவ் மேக்ஸ் 5 சாதனத்தின் சிறப்பம்ச விபரங்களை பற்றி இப்போது பார்க்கலாம். இந்த சாதனம் சோனி ஹெட்போன்ஸ் போன்ற பிரீமியம் தோற்றத்தை பட்ஜெட் விலையில் வழங்கியுள்ளது. இது 40mm HiFi ஆடியோ டிரைவர்ஸ் உடன் வருகிறது. இது 3D ஸ்பிட்ஷியல் ஆடியோ அம்சத்துடன் ப்ளூடூத் 5.4 இணைப்புடன் இயங்குகிறது.

இது அடாப்டிவ் ANC உடன் 50dB வரையிலான தரத்தில் இயங்குகிறது. இந்த புதிய நாய்ஸ் ஏர்வேவ் மேக்ஸ் 5 ஹெட்போன்ஸ் (Noise Airwave Max 5 Headphones) சாதனம் குவாட் மைக் உடன் ENC ஆதரவையும் பெறுகிறது. இதனால், Noise Airwave Max 5 Headphones சாதனம் மிகவும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை எந்தவித தடையுமின்றி, நாய்ஸ் இரைச்சல் எதுவுமின்றி சுத்தமான கிளாரிட்டி உடன் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாய்ஸ் ஏர்வேவ் மேக்ஸ் 5 ஹெட்போன்ஸ் (Noise Airwave Max 5 Headphones):

இந்த புதிய நாய்ஸ் ஏர்வேவ் மேக்ஸ் 5 ஹெட்போன்ஸ் (Noise Airwave Max 5 Headphones) சாதனம் 30ms வரையிலான அல்ட்ரா லோ-லேடன்சி ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த ஹெட்போன்ஸ் சாதனம் 80 மணி நேரம் வரையிலான பேட்டரி நேரத்தை வழங்குகிறது. இது 1.5 மணி நேரம் சார்ஜிங் நேரத்தை கொண்டுள்ளது. இது Type-C சார்ஜிங் போர்ட் உடன் சார்ஜிங் இண்டிகேட்டர் லைட்டையும் கொண்டுள்ளது.

நாய்ஸ் ஏர்வேவ் மேக்ஸ் 5 ஹெட்போன்ஸ் (Noise Airwave Max 5 Headphones) சாதனம் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் Siri போன்ற வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவையும் ஆதரிக்கிறது. டூயல் டிவைஸ் பேரிங் அம்சமத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹெட்போன் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் மிகவும் உறுதியான வடிவமைப்பை பெற்றுள்ளது.

நாய்ஸ் ஏர்வேவ் மேக்ஸ் 5 ஹெட்போன்ஸ் விலை (Noise Airwave Max 5 Headphones Price):

இந்த புதிய நாய்ஸ் ஏர்வேவ் மேக்ஸ் 5 ஹெட்போன்ஸ் (Noise Airwave Max 5 Headphones) சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது இந்திய சந்தையில் ரூ. 4999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது கார்பன் பிளாக் (Carbob Black), கால்ம் வைட் (Calm White) மற்றும் கால்ம் பெய்ஜ் (Calm Beige) ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இதன் தற்போதைய சலுகை விலை ரூ. 4699 மட்டுமே. இது gonoise.com மற்றும் பிளிப்கார்ட் தளம் வழியாக விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise Airwave Max 5 Headphones With 80 Hour Playback Time Launched Check Price and Offers Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X