Home
Gadgets

ஆடியோ சும்மா கிழிதான்.. 12எம்எம் டிரைவர்கள்.. ஏர்வேவ் டெக்னாலஜி.. 40 மணி நேர பேக்கப்.. IPX5 ரேட்டிங்.. மாடல்?

பிரீமியம் இயர்பட்களில் கிடைக்கும் ஓப்பன் பீம் டிசைனை (Open Beam Design) பட்ஜெட்டில் கொடுத்தது மட்டுமல்லாமல், நாய்ஸ் ஏர்வேவ் டெக்னாலஜி, ஹைப்பர் சின்க் கனெக்டிவிட்டி, லோவ் லேட்டன்சி மோட், 40 மணி நேர பேக்கப் போன்ற பீச்சர்களுடன் நாய்ஸ் ஏர் கிளிப்ஸ் 2 (Noise Air Clips 2) இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இதுபோக ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்வெட்ரெசிஸ்டன்ஸ், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த நாய்ஸ் ஏர் கிளிப்ஸ் 2 மாடலின் விவரங்கள் இதோ.

இந்திய மார்கெட்டில் ஓப்பன்-இயர்பட்ஸ் மாடல்கள் குறிப்பிட்ட பிராண்ட்களில் மட்டுமே கிடைக்கின்றன. இந்த டிசைன் கொண்ட மாடல்களின் விலையும் அதிகாக இருக்கும். ஆனால், நாய்ஸ் நிறுவனமானது, அந்த டிசைனை பிரீமியம் மாடல்களுடன் ஒப்பிடுகையில் பட்ஜெட் விலையில் கொடுத்து இருக்கிறது. கம்மி பட்ஜெட்டில் ஓப்பன் இயர் மாடல்களை தேடுவோருக்கு இது பக்கா ஆப்ஷனாக இருக்கப் போகிறது.

ஆடியோ சும்மா கிழிதான்.. 12எம்எம் டிரைவர்கள்.. ஏர்வேவ் டெக்னாலஜி!

இந்த நாய்ஸ் மாடலில் ஓப்பன் பீம் டிசைன் ஜென் 2 (Open Beam Design Gen 2) கிடைக்கிறது. குரோம் பினிஷிங்கில் மெட்டாலிக் லுக் பாடி கொடுக்கிறது. கிட்டத்தட்ட கிளிப் போலவே டிசைன் இருப்பதால், எளிதாக காதுகளில் பொருத்தி கொள்ளலாம். கிரிப் மற்றும் கம்போர்ட் கொடுக்கும். ஆகவே, ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு இந்த நாய்ஸ் ஏர் கிளிப்ஸ் 2 மாடல் பக்கா பொருத்தமாக இருக்கும். முழு பீச்சர்கள் எப்படி?

நாய்ஸ் ஏர் கிளிப்ஸ் 2 அம்சங்கள் (Noise Air Clips 2 Specifications): இந்த கிளிப்ஸ் 2 மாடலில் நாய்ஸ் ஏர்வேவ் டெக்னாலஜி (Noise AirWave Technology) டெக்னாலஜி கொண்ட 12 எம்எம் டிரைவர்கள் கிடைக்கின்றன. இதில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஹைப்பர் சின்ங் (Hyper Sync) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆகவே, டிவைஸ் டூ இயர்பட்ஸ் கனெக்டிவிட்டி பக்காவாக இருக்கும்.

நொடியில் சின்ங் செய்து கொள்ளலாம். கேமிங் பிரியர்களுக்காக ஆடியோ மற்றும வீடியோ சின்க் கொடுக்க லோவ் லேட்டன்சி மோட் (Low Latency Mode) கிடைக்கிறது. இந்த நாய்ஸ் ஏர் கிளிப்ஸ் 2 மாடலில் வழக்கமாக கிடைக்கும் டூயல் டிவைஸ் பேரிங் (Dual Device Pairing) கிடைக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டின் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

ஆடியோ சும்மா கிழிதான்.. 12எம்எம் டிரைவர்கள்.. ஏர்வேவ் டெக்னாலஜி!

ஆனால், ஒரு நேரத்தில் ஒரு டிவைஸில் மட்டுமே ஆடியோ அவுட் எடுக்க முடியும். இருப்பினும், தொடர்ந்து கனெக்டிவிட்டியில் இருக்கும். இந்த நாய்ஸ் ஏர் கிளிப்ஸ் 2 மாடலை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 40 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்ய 6.5 மணி நேரங்கள் தேவைப்படும். டைப் சி போர்ட் (Type C Port) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இன்ஸ்டன்ட் சார்ஜ் சப்போர்ட் உள்ளது. ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலும், 150 நிமிடங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கான மாடலாக இருப்பதால், IPX5 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. 1 வருட வாரண்டியில் வாங்கி கொள்ளலாம். இப்போது, இந்த நாய்ஸ் ஏர் கிளிப்ஸ் 2 மாடலின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

நாய்ஸ் ஏர் கிளிப்ஸ் 2 விலை (Noise Air Clips 2 Price): இந்த ஓப்பன் இயர் டிசைன் மாடலின் விலை ரூ.2,999ஆக இருக்கிறது. கிரீன் (Green), பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு வர இருக்கிறது. அமேசான் (Amazon) மற்றும் நாய்ஸ் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் ஜூலை 29ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise Air Clips 2 With AirWave Technology Launched India Sale From July 29 Here Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X