Home
Gadgets

சும்மா கிழி.. 43 ஹவர்ஸ் பிளேபேக்.. ஹைப்பர் சிங்க் டெக்னாலஜி.. குவாட் மைக்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட குவாட் மைக், ஸ்பாஷியல் ஆடியோ கொண்ட டைட்டானியம் டிரைவர்கள், ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பேட்டரி சிஸ்டம் போன்ற பீச்சர்கள் மட்டுல்லாமல், ஹைப்பர் சிங் டெக்னாலஜி, லோவ் லேட்டன்சி, ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற பட்டையை கிளப்பும் ஆடியோ பீச்சர்களுடன் நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ 6 (Noise Air Buds Pro 6) இந்திய மார்கட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த ப்ரோ இயர்பட்ஸின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஆடியோ பிரியர்களுக்கும், கேமிங் பிரியர்களுக்கும், வாய்ஸ் கால்கள் பிரியர்களுக்கும் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி இந்த நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ 6 அறிமுகமாகி இருக்கிறது. ப்ரீ-ஆர்டர் தொடங்கி இருப்பதால், ரூ.999 கூப்பன் கிடைக்கிறது. ஆகவே, ஓப்பன் சேல் தொடங்குவதற்கு முன்பு ஆர்டர் செய்தால், இந்த கூப்பனை பெற்று கொள்ளலாம். முதலில் பீச்சர்களை பார்ப்போம்.

நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ 6 அம்சங்கள் (Noise Air Buds Pro 6 Specifications): பிரீமியம் மெட்டாலிக் டிசைனில் சார்ஜிங் கேஸ் கொண்ட ஸ்லேட் பிளாக் (Slate Black), நிம்பஸ் கிரே (Nimbus Grey), பெடல் பிங்க் (Petal Pink) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. ஆகவே, பிரீமியம் டிசைனை பட்ஜெட்டில் விரும்பும் ஆடியோ பிரியர்களுக்கு இந்த நாய்ஸ் மாடல் பக்காவாக இருக்கும்.

சும்மா கிழி.. 43 ஹவர்ஸ் பிளேபேக்.. ஹைப்பர் சிங்க் டெக்னாலஜி.. குவாட்!

49dB ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid Active Noise Cancellation) மற்றும் ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட் கொண்ட 12.4 எம்எம் டைட்டானியம் டிரைவர்கள் (Titanium Drivers) கிடைக்கின்றன. ஆகவே, ஸ்டீரியோ மற்றும் இன்ட்ரூமெண்ட்ஸ் வேரியேஷன் பட்டையை கிளப்பும்படி இருக்கும். மியூசிக்கை போல வாய்ஸ் கால்களுக்கும் டெக்னாலஜிகள் இருக்கிறது.

ஆகவே, என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) டெக்னாலஜி கொண்ட குவாட் மைக் (Quad Mic) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, நாய்ஸ் அதிகமாக இருக்கும் அவுட்டோர்களிலும் வாய்ஸ் கால்கள் கிரிஸ்டல் கிளியராக கேட்கும். இன்-இயர் டிடெக்சன் (In-ear Detection) சப்போர்ட் கொண்ட இயர்பட்கள் கிடைக்கின்றன.

இந்த ஆடியோவுக்கு எல்எச்டிசி கோடக் (LHDC Codec) சப்போர்ட் கிடைக்கிறது. கால் கன்ட்ரோல் மற்றும் வால்யூம் கன்ட்ரோல்களுக்கு டச் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ 6 மாடலின் பேட்டரி சிஸ்டம் மிரளவிடுகிறது. ஃபுல் சார்ஜ் செய்தால், சார்ஜிங் கேஸில் 43 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கிறது.

அதுவே, இயர்பட்களில் 7 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கிறது. இதுபோக ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 150 நிமிடங்களுக்கு பிளேபேக் கொடுக்கிறது. இந்த சார்ஜிங் கேஸில் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கும் பீச்சர்கள் இருக்கிறது.

ஆகவே, 50ms லோவ் லேட்டன்சி மோடை பயன்படுத்தி கொள்ளலாம். சைக்கிளிங், ஜாக்கிங் செல்லும் நபர்களுக்காக IPX5 ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், பிரீமியம் இயர்பட்ஸ்களில் கிடைக்கும் டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி (Dual Device Connectivity) மற்றும் கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) சப்போர்ட் கிடைக்கிறது.

இதுபோக பிரத்யேக ஹப்பர் சிங்க் டெக்னாலஜி (Hyper Sync Technology) கிடைக்கிறது. இந்த நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ 6 மாடலின் விலை ரூ.3499ஆக இருக்கிறது. ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. இதன் விலை ரூ.3,499ஆக இருக்கிறது. ரூ.499 செலுத்தி இப்போது ப்ரீ-ஆர்டர் செய்யலாம். இவர்களுக்கு ரூ.999 மதிப்பில் கூப்பன் சலுகை கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Noise Air Buds Pro 6 With Hyper Sync Technology Launched Sale From April 9 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X