ஆளுக்கு 2 வாங்கும் விலை.. ஹைபிரிட் ANC, 50 மணிநேரம் பேட்டரி.. நச்சுனு ஒரு புதிய Noise பட்ஸ் அறிமுகம்!
நாய்ஸ் (Noise) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் இயர்பட்ஸ் மாடல் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ 6 (Noise Air Buds Pro 6) மாடல் ஆகும். இது 12.4மிமீ டிரைவர்ஸ் (12.4mm drivers), டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி (Dual device connectivity), 49dB வரை ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid active noise cancellation), 50 மணி நேரம் மொத்த பேட்டரி லைஃப் (50 Hours Total Battery Life) உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களுடன் வருகிறது.
மேலும் நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ 6 மாடல் ஆனது ஸ்பேஷியல் ஆடியோ (Spatial audio), கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair), இன்-இயர் டிடெக்ஷன் (in-ear detection) மற்றும் 50ms வரை லோ லேட்டன்சி (Low latency) ஆகியவைகளையும் ஆதரிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 (Noise Air Buds 6) மாடல் உடன் இணையும் இந்த ப்ரோ மாடல், வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? என்ன ஆபர்? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

இந்தியாவில் நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ 6 மாடலின் விலை, ஆபர் மற்றும் விற்பனை (Noise Air Buds Pro 6 Price in India, Offer, Sale Details): இந்தியாவில் நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ 6 மாடலின் விலை ரூ.3,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் அமேசான் மற்றும் நாய்ஸ் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும். விற்பனை நாளுக்கு முன்பு ரூ.499 மதிப்புள்ள ப்ரீ-ஆர்டர் பாஸை பெறும் வாடிக்கையாளர்கள் ரூ.999 மதிப்புள்ள கூப்பனை பெறலாம்.
இதன் கீழ் ரூ.2,500 என்கிற ஆபர் விலையின் கீழ் இந்த TWS ஹெட்செட்களை வாங்க முடியும். தள்ளுபடி கூப்பனை தவிரத்து, ப்ரீ-ஆர்டர் பாஸ் ()வைத்திருப்பவர்கள் ரூ.1,000 மதிப்புள்ள கூடுதல் சலுகைகளையும் பெறலாம். இதில் திவா 2 ஸ்மார்ட் வாட்சில் (Diva 2 smartwatch) ரூ.700 தள்ளுபடியும் அடங்கும்.
நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ 6 மாடலின் விரிவான அம்சங்கள் (Noise Air Buds Pro 6 Full Specifications, Features): இது என்52 நியோடைமியம் மேக்னட் மற்றும் காப்பர் காயில்கள் உள்ளிட்ட 12.4மிமீ டைனமிக் டைட்டானியம் ட்ரைவர்களை கொண்டுள்ளது. மேலும் இது தெளிவான கால்களுக்கு 49dB வரை ஹைப்ரிட் ANC மற்றும் குவாட் மைக் சிஸ்டம்-சப்போர்ட் என்விராய்ன்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC) ஆகியவற்றையும் ஆதரிக்கிறது
இதன் கேஸ் - மெட்டலைஸ் செய்யப்பட்ட பெயிண்ட் பினிஷ் உடன் வருகிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் IPX5 நீர்-ரெசிஸ்டன்ட் ரேட்டிங்கை வழங்குகின்றன. மேலும் இது ப்ளூடூத் 5.3 மற்றும் டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி மற்றும் ஹை ரெசல்யூஷன், லாஸ்லேஸ் LHDC ஆடியோ கோடெக்கை ஆதரிக்கிறது. இந்த இயர்பட்ஸ் - கூகுள் ஃபாஸ்ட் பேர், இன்-இயர் டிடெக்ஷன் அம்சம் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோவையும் ஆதரிக்கின்றன.
மேலும் இந்த இயர்பட்ஸ் 50ms வரை லோ லேடன்சியை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. பேட்டரியை பொறுத்தவரை இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஏழு மணிநேரம் வரை நீடிக்கும் என்றும், கேஸுடன் 43 மணிநேரம் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக இதன் மொத்த பேட்டரி லைஃப் 50 மணிநேரம் வரை இருக்கும். 10 நிமிட குவிக் சார்ஜ் செய்தால் 150 நிமிடங்கள் வரை பிளேபேக் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications