ரூ.999 விலையில் 45 மணி நேர பேக்கப்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. ஹைப்பர் சின்க்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
மலிவான பட்ஜெட்டில் 45 மணி நேரம் பேட்டரி பேக்கப், ஹைப்பர் சின்க் மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் டெக்னாலஜி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, வட்டர் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் என்று அட்டகாசமான அம்சங்களுடன் நாய்ஸ் (Noise) ஏர் பட்ஸ் மினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப்போது மார்க்கெட்டில் வரும் இயர்பட்ஸ்களில், சின்க் பிரச்சனைகள் அதிகம் பார்க்க முடிகிறது. அதாவது ப்ளூடூத் ஆன் செய்த பின்பு, இயர்பட்ஸ் போன் உடன் கனெக்ட் ஆவதற்கு சில நொடிகளே போதும். ஆனால், பல இயர்பட்ஸ்கள் கனெக்ட் ஆவதற்கு பல நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. இதனால், சில நேரங்களில் பலர் கடுப்பாகி விடுவார்கள்.

இதுமட்டுமல்லாமல், போனில் கனெக்ட்டான பின்பு, வீடியோவுக்கும் ஆடியோவுக்கும் சின்க் ஆகமலும் இருந்திருக்கும். இதுவும் எரிச்சலை உண்டாக்கும் வகையில் இருக்கும். இதனை தவிர்க்கவே, புது மாடல் இயர்பட்ஸ்களில் ஹைப்பர் சிங்க் மற்றும் லோவ் லேட்டன்சி மோட் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த டெக்னாலஜி கொண்ட இயர்பட்ஸ்களின் ஆரம்ப விலையே ரூ.2,500க்கும் மேல் இருக்கும். ஆனால், நாய்ஸ் நிறுவனம் அறிமுக சலுகையுடன் வெறும் ரூ.999 பட்ஜெட்டில் நாய்ஸ் ஏர் பட்ஸ் மினி 2 (Noise Air Buds Mini 2) இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதை எங்கு வாங்கலாம்? மற்ற அம்சங்கள் எப்படி? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.
நாய்ஸ் ஏர் பட்ஸ் மினி 2 அம்சங்கள் (Noise Air Buds Mini 2 Specifications): இந்த மினி 2 பட்ஸ் 13மிமீ டிரைவர்கள் கொண்டுள்ளது. V5.3 ப்ளூடூத் கனெக்டிவிட்டி வருகிறது. வல்யூம் மற்றும் கால்களுக்கு டச் கன்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.
நாய்ஸ் கேன்சலேஷன் டெக்னாலஜி (Noise Cancellation Technology) கொண்ட குவாட் மைக் (Quad Mic) வருகிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 45 மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 120 நிமிடங்கள் பேக்கப் கிடைக்கும்.
50எம்எஸ் லோவ் லேடன்சி கொடுக்கப்பட்டுள்ளது. போன்கள், டேப்லெட்களுடன் நொடியில் கனெக்ட் செய்வதற்காக ஹைப்பர் சின்க் டெக்னாலஜி (Hyper Sync Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. IPX5 தர வாட்டர் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வருட வாரண்டி வருகிறது.
இந்த இயர்பட்ஸ் ஜெட் பிளாக் (Jet Black), ஸ்னோ வைட் (Snow White), கால்ம் பெய்ஜ் (Calm Beige) மற்றும் ஸ்பேஸ் ப்ளூ ( Space Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த நாய்ஸ் ஏர் பட்ஸ் மினி 2 மலிவான விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை அறிமுக சலுகை மட்டுமே. அடுத்த சில வாரங்களில் அதிகரிப்படலாம்.
ரூ.999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நாய்ஸ் வெப்சைட் மற்றும் பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்துகொள்ளலாம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








