சும்மா கிழி.. வாய்ஸ் கன்ட்ரோல்.. 50 மணி நேரம் பேக்கப்.. மல்டி கனெக்டிவிட்டி.. ஆப் சப்போர்ட்.. எந்த மாடல்?
பிரீமியம் டிசைன் மற்றும் பீச்சர்களை கொண்ட டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் வாங்க திட்டமிட்ட மியூசிக் பிரியர்களுக்கு பக்கா பட்ஜெட்டில் நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 (Noise Air Buds 6) மாடலானது, இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன், குவாட் மைக், டிரான்பரன்சி மோட், லோவ் லேட்டன்சி மோட், 50 மணி நேரத்துக்கு பிளேடைம், கூகுள் ஃபாஸ்ட் ஃபேரிங், மல்டி பாய்ன்ட் கனெக்டிவிட்டி, IPX5 ரெசிஸ்டன்ட், வாய்ஸ் மற்றும் டச் கன்ட்ரோல் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களுடன் அமேசான் (Amazon) தளத்தில் கிடைக்க இருக்கிறது.
டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் மாடல்களில் இப்போது, புதுப்புது டெக்னாலஜிகள் வந்துவிட்டன. மியூசிக் அனுபவத்தை பிரீமியமாக கொடுக்கின்றன. இதில் கம்மி பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் நாய்ஸ் நிறுவனம் கஸ்டமர்களை கவர்ந்து வருகிறது. இப்போது, ஆப் சப்போர்ட் கொண்ட நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 மாடலை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது.

நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 அம்சங்கள் (Noise Air Buds 6 Specifications): டிசைன், கனெக்டிவிட்டி, மியூசிக் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் இந்த நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 மாடல் பட்டையை கிளப்பி இருக்கிறது. 12.4 மிமீ டிரைவர்கள் கிடைக்கின்றன. குவாலிட்டியான ஆடியோ அனுபவத்துக்கு 32dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது.
டிரான்ஸ்பரன்ஸி மோடுடன் (Transparency Mode) சூப்பர் இயரிங் (Super Hearing) சப்போர்ட் கிடைக்கிறது. ஆடியோவுக்கு மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களுக்கும் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) சப்போர்ட கொண்ட குவாட் மைக் (Quad Mic) கிடைக்கிறது. வாய்ஸ் கன்ட்ரோல் (Voice Control) இருக்கிறது.
ஆகவே, மியூசிக் வால்யூம், பிளேலிஸ்ட் சேஞ்ச் மற்றும் கால் கன்ட்ரோல்கள் வாய்ஸ் மூலம் செய்து கொள்ளலாம். இதுபோக டச் கன்ட்ரோலையும் இந்த நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 மாடல் கொடுக்கிறது. அதேபோல வாய்ஸ் கால்கள் வரும் நேரத்தில் ஆட்டோமேட்டிக் வால்யூம் அட்ஜட்ஸ்மெண்ட் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்களும் இதில் இருக்கின்றன.
50ms லோவ் லேட்டன்சி மோட் (Low Latency Mode) கிடைக்கிறது. மொபைல், டேப்லெட், லேப்டாப் போன்ற மல்டி டிவைஸ் கனெக்டிவிட்டி இருக்கிறது. இதுபோக ஒரே நேரத்தில் மல்டிபிள் டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளும்படி மல்டிபாய்ன்ட் கனெக்டிவிட்டி (Multipoint Connectivity) சப்போர்ட் கிடைக்கிறது. இன்-இயர் டிடெக்சன் (in-ear Detection) சப்போர்ட் உள்ளது.
லாக்-ப்ரீ கனெக்டிவிட்டி கொடுக்க கூகுள் ஃபாஸ்ட் ஃபேரிங் (Google Fast Pairing) வருகிறது. நாய்ஸ் பட்ஸ்லிங்க் ஆப் (Noise BudsLink App) சப்போர்ட் கொடுக்கிறது. இந்த ஆப் மூலம் ஈகியூ செட்டிங், டச் கன்ட்ரோல், வாய்ஸ் கன்ட்ரோல், வால்யூம் கன்ட்ரோல் போன்றவற்றை செய்து கொள்ளலாம். ஃபாஸ்ட் மியூட் (Fast Mute), கஸ்டமைசபிள் ஈகியூ (Customizable EQ) கிடைக்கிறது.
இந்த நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 மாடலில் IPX5 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இப்போது பேட்டரி பீச்சர்களுக்கு வருவோம். இந்த மாடல் மூலம் ஃபுல் சார்ஜ் செய்த பிறகு 50 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 150 நிமிடங்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி இன்ஸ்டாசார்ஜ் (Instacharge) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மார்கெட்டில் வெளியாகி விற்பனைக்கு வந்துவிட்டது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் நாய்ஸ் (Noise) ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் டிசைனில் பெபல் கிரே (Pebble Grey), சேஜ் ப்ளூ (Sage Blue) மற்றும் சார்கோல் பிளாக் (Charcoal Black) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இப்போது, விலையை பார்ப்போம்.
நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 விலை (Noise Air Buds 6 Price): இந்த மாடலின் விலை ரூ.2,999ஆக இருக்கிறது. கம்மி பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், வாய்ஸ் கன்ட்ரோல், டச் கன்ட்ரோல், ஆப் கன்ட்ரோல் போன்ற பீச்சர்களையும் கொடுக்கும் இயர்பட்ஸ் வாங்க திட்டமிட்டால், இந்த நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 மாடலை மியூசிக் பிரியர்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








