சவுண்ட் கூடவே பிரீமியம் லுக்.. 50 மணிநேர பிளேபேக் உடன் பட்ஜெட்ல புது Noise Air Buds 6.. என்ன விலை தெரியுமா?
நாய்ஸ் (Noise) நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 இயர்பட்ஸ் (Noise Air Buds 6 Earbuds) என்ற TWS இயர்பட்ஸ் (Noise TWS Earbuds) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாதனத்தை நாய்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இதன் தோற்றம் பிரீமியம் தரத்தில் தாறுமாறாக இருக்கிறது. இன்று முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கும் இந்த புதிய இயர்பட்ஸ் சாதனத்தின் விலை என்ன? இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.
நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 TWS இயர்பட்ஸ் (Noise Air Buds 6 TWS Earbuds) சாதனம் பிராகி (Bragi) உடன் கூட்டு சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நாய்ஸ் இயர்பட்ஸ் (Noise Earbuds) சாதனம் 12.4mm டிரைவர் (drivers) ஆதரவுடன் 32dB ANC அம்சத்துடன் வருகிறது. இது கிரிஸ்டல் கிளியர் ஆடியோவுடன் மிகவும் அடர்த்தியான டீப் பாஸ் (Deep BASS) அனுபவத்தை வழங்குகிறது.

சவுண்ட் கூடவே பிரீமியம் லுக்கில் Noise Air Buds 6:
இதில் குவாட் மைக் ENC ஆதரவுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 இயர்பட்ஸ் (Noise Air Buds 6 Earbuds) சாதனம் இன்-இயர் டிடெக்ஷன் (in-ear detection), வாய்ஸ் மற்றும் டச் கண்ட்ரோல் (voice and touch control) போன்ற ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இந்த இயர்பட்ஸ் சாதனம் பிராகி (Bragi) அம்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்துடன் Noise Air Buds 6 இயர்பட்ஸ் டிவைஸை பாஸ்ட் மியூட் (Fast mute), மல்டிபாயிண்ட் கனெக்டிவிட்டி (Multipoint connectivity), பேட்டரி ப்ரெடிக்ஷன் (Battery prediction), ஸ்மால் கால்ஸ் (Small Calls), மற்றும் இகியூ கஸ்டமைஸ் (customizable EQ) அம்சங்களை நாய்ஸ் பட்ஸ் லிங்க் ஆப் (Noise BudsLink App) மூலம் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 இயர்பட்ஸ் (Noise Air Buds 6 Earbuds):
இந்த நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 இயர்பட்ஸ் சாதனம் கூகுள் பாஸ்ட் பேரிங் (Google Fast Pairing) அம்சத்துடன் உடனுக்குடன் உங்கள் ஸ்மார்ட்போன் (Smartphone), மொபைல் (Mobile), லேப்டாப் (Laptop), ஸ்மார்ட் டிவி (Smart TV), கம்ப்யூட்டர் (Computer) மற்றும் மற்ற ஸ்மார்ட் கேட்ஜெட்களுடன் (Smart Gadgets) இணைகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் 50 மணி நேரம் இயங்கும் பிளேடைம் நேரத்தை வழங்குகிறது.
பட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் 50 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்கும் பெஸ்ட் இயர்பட்ஸ் சாதனமாக Noise Air Buds 6 சாதனம் இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் இன்ஸ்டாசார்ஜ் (Instacharge) பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் (fast charging technology) வருகிறது. இதன் மூலம் வெறும் 10 நிமிட சார்ஜிங் நேரத்துடன் உங்களால் 150 நிமிடங்களுக்கு தடையில்லதாக பிளேடைம் நேரத்தை அனுபவிக்க முடியும்.
நாய்ஸ் ஏர் பட்ஸ் 6 TWS இயர்பட்ஸ் விலை (Noise Air Buds 6 TWS Earbuds Price):
இந்த இயர்பட்ஸ் சாதனம் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் வருகிறது. Noise Air Buds 6 சாதனம் இந்திய சந்தையில் ரூ. 2,999 என்ற அறிமுக சலுகை விலையுடன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த Noise Air Buds 6 Earbuds சாதனம் பெபிள் க்ரேய் (Pebble Grey), சேஜ் ப்ளூ (Sage Blue), மற்றும் சார்கோல் பிளாக் (Charcoal Black) ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
இவற்றை நீங்கள் gonoise.com, Amazon.in, Flipkart.com. வழியாக வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








