கம்மி விலையில் தாறுமாறான ஆடியோ.! 40 மணி நேர நான்ஸ்டாப் பிளேபேக்.! யோசிக்காம வாங்கிடுங்க.!

|

நாய்ஸ் (Noise) நிறுவனம் அதன் புதிய Noise Air Buds 2 என்ற TWS வயர்லெஸ் இயர்போன்ஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், Noise இரண்டு புதிய ஹெட்ஃபோன் மாடல்களை வெளியிட்டது. இந்திய நிறுவனமான Noise இன் புதிய TWS ஹெட்செட் இப்போது தரமான அம்சங்களை பட்ஜெட் விலையில் வழங்கி அசத்தியுள்ளது.

புதிய Noise Air Buds 2 TWS இயர்பட்ஸ்

புதிய Noise Air Buds 2 TWS இயர்பட்ஸ்

இந்த புதிய Noise Air Buds 2 TWS இயர்பட்ஸ் அழைப்புத் தரத்தை மேம்படுத்தவும், புளூடூத் 5.3 இணைப்புக்கான ஆதரவையும் கொண்டு. பட்ஜெட் விலையில் சூப்பரான ஆடியோ தரத்தை வழங்கியுள்ளது. இந்த புதிய Noise Air Buds 2 வயர்லெஸ் இயர்போன்கள், Realme, OnePlus மற்றும் Boat போன்ற நிறுவனங்களிடமிருந்து வரும் பெஸ்ட் இயர்போன்களுடன் கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றன.

உங்கள் காதிற்கு ஏற்ற கச்சிதமான பொருத்தம்.!

உங்கள் காதிற்கு ஏற்ற கச்சிதமான பொருத்தம்.!

சரி, இப்போது இந்த புதிய Noise Air Buds 2 இயர்போன்களின் அம்சங்கள் மற்றும் விலையைப் பற்றி பார்ப்போம். புதிய Noise Air Buds 2 TWS இயர்போன்கள் மிகவும் பொதுவான இன்-கேனல் பொருத்தத்துடன் வருகிறது. Noise Air Buds 2 ட்ரூலி வயர்லெஸ் ஹெட்செட் வெளிப்புற காது பொருத்தத்தை வழங்குகிறது. இது உண்மையிலேயே பலருக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

உங்க WhatsApp-ல் இருந்து இனி 24 மணி நேரத்தில் இதுவும் மறஞ்சுடும்.! புதுசா வரப்போகும் அம்சம்.!உங்க WhatsApp-ல் இருந்து இனி 24 மணி நேரத்தில் இதுவும் மறஞ்சுடும்.! புதுசா வரப்போகும் அம்சம்.!

பட்ஜெட் விலையில் டீசெண்டான அம்சத்தை கொண்டுள்ளதா Noise Air Buds 2?

பட்ஜெட் விலையில் டீசெண்டான அம்சத்தை கொண்டுள்ளதா Noise Air Buds 2?

காதுகளில் இயர்பட்ஸ்களின் பொருத்தத்தைப் பற்றிப் பேசுகையில், இது சிறப்பாகப் பொருந்துகிறது. இது அதிக பேஸிவ் நாய்ஸ் ஐசோலேஷன் தனிமைப்படுத்தலை வழங்கவில்லை என்றாலும், இது உங்கள் சுற்றுப்புறத்தைப் பற்றி ஓரளவு அறிந்திருக்க உங்களை அனுமதிக்கிறது. பட்ஜெட் விலையில் இந்த அம்சம் ஓரளவிற்கு டீசெண்டான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த சாயல் எங்கிருந்தோ வந்த மாதிரி இருக்கே.! நத்திங் தானோ?

இந்த சாயல் எங்கிருந்தோ வந்த மாதிரி இருக்கே.! நத்திங் தானோ?

நத்திங் பிராண்டில் இருந்து சார்ஜிங் கேஸ் மூடியை மட்டும் நாய்ஸ் நிறுவனம் எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது. காரணம், இந்த Noise Air Buds 2 சார்ஜிங் கேஸ் மூடி டிரான்ஸ்பரென்ட் வடிவமைப்புடன் வருகிறது. சார்ஜிங் கேஸின் கீழே பேரிங் பட்டன் மற்றும் சார்ஜ் செய்வதற்கான USB Type-C இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜிங் கேஸ் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது.

லட்ச ரூபாய் போனில் கூட இது இன்னும் கிடைக்கல.! ரூ.10,000-தில் பட்டைய கிளப்பும் Lava 5ஜி போன்.!லட்ச ரூபாய் போனில் கூட இது இன்னும் கிடைக்கல.! ரூ.10,000-தில் பட்டைய கிளப்பும் Lava 5ஜி போன்.!

40 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள்

40 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள்

இதனால், உங்கள் Noise Air Buds 2 இயர்பட்ஸ்களை வேகமாக சார்ஜ் செய்கிறது. Noise Air Buds 2 இயர்போன்ஸ் சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 40 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. Noise Air Buds 2 புளூடூத் 5.3 மூலம் தொடர்பு கொள்கிறது. Noise Air Buds 2 ஹெட்செட்டில் 13மிமீ டைனமிக் டிரைவர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தாறுமாறான அம்சத்துடன் Noise Air Buds 2

தாறுமாறான அம்சத்துடன் Noise Air Buds 2

மற்ற அம்சங்கள் பற்றி பேசுகையில், இது டச் கண்ட்ரோல் உடன், IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ஸ், வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவு மற்றும் அழைப்புகளுக்கான சுற்றுச்சூழல் நாய்ஸ் குறைப்பு அம்சம் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது. சரி, இப்போது இந்த Noise Air Buds 2 சாதனத்தின் விலை மற்றும் விற்பனை தகவலைப் பற்றிப் பார்க்கலாம்.

வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இலவச விமான டிக்கெட்.! இந்த ஆப்ஸை நோட் பண்ணுங்க.!வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இலவச விமான டிக்கெட்.! இந்த ஆப்ஸை நோட் பண்ணுங்க.!

Noise Air Buds 2 விலை மற்றும் விற்பனை

Noise Air Buds 2 விலை மற்றும் விற்பனை

Noise Air Buds 2 சாதனம் இந்தியாவில் ரூ.1,799 விலையில் தற்போது Amazon மற்றும் Noise நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கிறது. இந்த Noise Air Buds 2 TWS ஹெட்செட் இரண்டு வண்ணங்களில் வருகிறது. இது க்ளியர் பிளாக் கருப்பு மற்றும் க்ளியர் வைட் நிறங்களில் வருகிறது.

Noise Air Buds 2 சாதனத்தை நம்பி வாங்கலாமா?

Noise Air Buds 2 சாதனத்தை நம்பி வாங்கலாமா?

பட்ஜெட் விலையில் இப்போது வாங்க கிடைக்கும் பெஸ்டான இயர்பட்ஸ்களுடன் இது நேரடியாகப் போட்டியிடுவதால், தாராளமாக இதை வாங்கலாம். நாய்ஸ் ஏற்கனவே இந்தியாவில் ஒரு நம்பகமான பிராண்டாக மாறியுள்ளதனால், இந்த பிராண்டில் இருந்து கிடைக்கும் Noise Air Buds 2 இயர்போன்ஸை நீங்கள் தாராளமாக நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Noise Air Buds 2 TWS Earbuds Launched With 40 Hours Battery Life Now On Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X