Home
Gadgets

இந்தியா: ரூ.6,799-விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மலிவு விலையில் பல ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன,அந்த வரிசையில் நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ள, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா: ரூ.6,799-விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

மேலும் அன்மையில் சியோமி நிறுவனம் அதன் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவித்தது,தொடர்ந்து அடுத்த மாதம் மலிவு விலையில் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 24-இன்ச் மற்றும் 32-இன்ச்

24-இன்ச் மற்றும் 32-இன்ச்

நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இப்போது 24-இன்ச் மற்றும் 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 24-இன்ச் ஸ்மார்ட் டிவி

24-இன்ச் ஸ்மார்ட் டிவி

நோபில் ஸ்கியோடோ 24-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக 1366x768 பிக்சல் திர்மானம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பில்ட்-இன் கேம்

பில்ட்-இன் கேம்

நோபில் ஸ்கியோடோ 24-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.6,799-ஆக உள்ளது, பின்பு இந்த சாதனத்தில் எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள இன்-பில்ட் ஸபீக்கர்கள் 20வாட் திறன் கொண்டிருக்கிறது. குறிப்பாக பில்ட்-இன் கேம் மற்றும் பல்வேறு செயலிகளை இந்த சாதனத்தில் பயன்படுத்த முடியும்.

ரூ.3000-வரை தள்ளுபடி

ரூ.3000-வரை தள்ளுபடி

பிளிப்கார்ட் தளத்தில் இந்த நோபிளஸ் 24-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை வாங்குவோருக்கு மாதம் 186 விலையில் 36மாதங்களுக்கு மாத தவனை முறை வசதியும் வழங்கப்படுகிறது. பின்பு தங்களின் பழைய டிவியை கொடுத்து அதிகபட்சம் ரூ.3000-வரை தள்ளுபடி பெற முடியும்.

32-இன்ச் (NB32R01) ஸ்மார்ட் டிவி

32-இன்ச் (NB32R01) ஸ்மார்ட் டிவி

நோபில் ஸ்கியோடோ நிறுவனம் அறிமுகம் செய்த 32-இன்ச் (NB32R01) ஸ்மார்ட் டிவி 1366x768 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட் வசதிகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் பில்ட்-இன் கேம் மற்றும் பல்வேறு செயலிகளை பயன்படுத்த முடியும்.

ரூ. 4000 எக்சேஞ் சலுகை

ரூ. 4000 எக்சேஞ் சலுகை

நோபில் ஸ்கியோடோ 32-இன்ச் ஸ்மார்ட் டிவி விலையைப் பொறுத்தவரை 8,499-ஆக உள்ளது, பின்பு இந்த டிவி-யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 237 விலையில் மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 4000 எக்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Noble Skiodo launches 2 HD Ready TVs in India, price starts at Rs 6,799 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X