Home
Gadgets

கேமிங் சாம்ராஜ்யமே ஆடிப்போச்சு.. ஹைபிரிட் கன்சோல்.. TV கனெக்டிவிட்டி.. 7.9 இன்ச் டிஸ்பிளே.. 2 கன்ட்ரோலர்கள்!

ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களையும் தட்டித் தூக்கும்படி நிண்டெண்டோ ஸ்விட்ச் 2 (Nintendo Switch 2) என்னும் ஹைபிரிட் போர்டபிள் கேமிங் கன்சோல் களமிறங்கி இருக்கிறது. 1 டிஸ்பிளே யூனிட், 2 கன்ட்ரோலர்கள், 1 டாக் யூனிட் என்று போர்டபிள் கேமிங் பிரியர்களுக்கும், டிவியின் கனெக்ட் செய்து பயன்படுத்தும் கேமிங் பிரியர்களுக்கும் ஏற்ப பீச்சர்களை கொடுத்துள்ளது. இந்த நிண்டெண்டோ ஸ்விட்ச் 2 மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நிண்டெண்டோ ஸ்விட்ச் 2 அம்சங்கள் (Nintendo Switch 2 Specifications): இந்த போர்டபிள் கேமிங் கன்சோலில் 7.9 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் கிடைக்கிறது. ஜாய்-கான் கன்ட்ரோலர்களை அட்டாச் செய்தால், 10.7 இன்ச் பாடி கிடைக்கும்.

கேமிங் சாம்ராஜ்யமே ஆடிப்போச்சு.. ஹைபிரிட் கன்சோல்.. TV கனெக்டிவிட்டி!

என்விடியா ஜிபியு (NVIDIA GPU) கிடைப்பதால், கிராபிக்ஸ் அவுட்புட் பிரீமியமாக எதிர்பார்க்கலாம். 256 ஜிபி ஸ்டோரேஜ் சப்போர்ட் உள்ளது. கனெக்டிவிட்டியை பார்க்கையில் வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் (Bulethooth) மற்றும் டிவி மோட் (TV Mode) வருகிறது. இந்த டிவி மோடில் வயர்டு எல்ஏஎன் போர்ட் (Wired LAN Port) கனெக்டிவிட்டி தேவைப்படுகிறது.

இந்த கேமிங் கன்சோல் டிஸ்பிளே அல்லாமல், டிவியில் கனெக்ட் செய்து பயன்படுத்தும்போது, கூடுதல் அவுட்புட் கிடைக்கிறது. ஆகவே, எச்டிஎம்ஐ மூலம் டிவியில் நிண்டெண்டோ ஸ்விட்ச் 2 டாக்கை (Nintendo Switch 2 Dock) கனெக்ட் செய்து, 4K ரெசொலூஷனில் டிவியில் கேம் விளையாடலாம். 120FPS மற்றும் எச்டிஆர்10 சப்போர்ட் வருகிறது. 5.1 சேனல் ஆடியோ அவுட் கிடைக்கிறது.

மேலும், ஸ்டீரியோ (Stereo) அவுட்புட் எதிர்பார்க்கலாம். பில்ட்-இன் ஸ்பீக்கர் (Built-in Speaker) அல்லது ஹெட்போன்களில் (Headphone) இந்த ஆடியோ அவுட்புட்டை பெற்று கொள்ளலாம். ஸ்பீக்கர் வருவதால், பில்ட்-இன் மைக்ரோபோன் (Built-in Microphone) கிடைக்கிறது. இதில் நாய்ஸ் கேன்சலேஷன் (Noise cancellation), எக்கோ கேன்சலேஷன் (Echo Cancellation) சப்போர்ட் வருகிறது.

கேமிங் சாம்ராஜ்யமே ஆடிப்போச்சு.. ஹைபிரிட் கன்சோல்.. TV கனெக்டிவிட்டி!

மேலும், ஆட்டோ கெயின் கன்ட்ரோல் (Auto Gain Control) கன்ட்ரோல் கிடைக்கிறது. இந்த பாடியில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் இடம்பெற்றுள்ளது. 2 யுஎஸ்பி-டைப் சி போர்ட்கள் இருக்கின்றன. இதில் ஒர போர்ட் சார்ஜிங் செய்யவும் மற்றொரு போர்ட் நிண்டெண்டோ ஸ்விட்ச் 2 டாக்குடன் கனெக்ட் செய்து கொள்ளவும் கொடுக்கப்பட்டுள்ளது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் 2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. இந்த நிண்டெண்டோ ஸ்விட்ச் 2 மாடலில் 5220mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி மூலம் 6.5 மணி நேரங்களுக்கு கேம்பிளே கிடைக்கும். ஸ்லீம் மோடில் சார்ஜ் செய்தால் ஃபுல் சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் தேவைப்படும்.

பிரைட்னஸ் சென்சார், கன்ட்ரோல்களை லேகேட் செய்யும் மவுஸ் சென்சார், கைரோஸ்கோப் போன்ற சென்சார்கள் கிடைக்கின்றன. இந்த டிஸ்பிளே கன்சோலில் மட்டுமே இருக்கும் பீச்சர்களாகும். இதை டிவியில் கனெக்ட் செய்ய வேண்டுமானால், நிண்டெண்டோ ஸ்விட்ச் 2 டாக்கில் அட்டாச் செய்ய வேண்டும். அந்த டாக்கில் என்னென்ன பீச்சர்கள் இருக்கிறது.

நிண்டெண்டோ ஸ்விட்ச் 2 டாக் அம்சங்கள் (Nintendo Switch 2 Dock Specifications): இந்த டாக் 4.5 இன்ச் உயரம், 2 இன்ச் தடிமன் மற்றும் 7.9 இன்ச் அகலம் இருக்கிறது. இதில் 2 யுஎஸ்பி போர்ட், ஏசி அடாப்டர் போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் எல்ஏஎன் போர்ட் கிடைக்கிறது. இப்போது, டிஸ்பிளே கன்சோலுக்கு இரு புறமும் இருக்கும் கன்ட்ரோலர்களை பற்றி பார்ப்போம்.

ஜாய்-கான் 2 கன்ட்ரோலர்கள் அம்சங்கள் (Joy-Con 2 Controllers Specifications): இதில் லெப்ட் (L) மற்றும் ரைட் (R) என்று கன்ட்ரோலர்கள் கிடைக்கிறது. கேமிங் பிரியர்கள் வழக்கமாக பயன்படுத்தும்படி அப்/டவுன்/லெப்ட்/ரைட் பட்டன்கள் உள்ளன. அதேபோல கேப்ச்சர் பட்டன், ரிலீஸ் பட்டன், சிங்க் பட்டன்கள் இருக்கின்றன. இவை லெப்ட் கன்ட்ரோலரில் இருக்கிறது.

ஆகவே, ரைட் கன்ட்ரோலரில் ரைட் ஸ்டிக் பட்டன், ஏ/பி/எக்ஸ்/ஒய்/ஆர்/இசட் போன்ற பட்டன்கள் கிடைக்கிறது. மேலும், சி பட்டன், ரிலீஸ் பட்டன் மற்றும் சிங்க் பட்டன் உள்ளது. இரண்டிலும் ப்ளூடூத் 3.0 (Bluetooth 3.0) கனெக்டிவிட்டி வருகிறது. இவை அட்டாச் செய்யக்கூடியதாக இருப்பதால், 500mAh பேட்டரி கொண்டிருக்கிறது. ஆகவே, இதையும் சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.

இவை 20 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும். இந்த ஜாய்-கான் 2 கன்ட்ரோலர்களை டிவியில் பயன்படுத்தும்போது அதில் அட்டாச் செய்து கொள்ள ஜாய்-கான் 2 கிரிப் (Joy-Con 2 Grip) கிடைக்கிறது. இது வழக்கமாக டிவியில் பயன்படுத்தும் ஜாய்ஸ்டிக் போல தோன்றும். ஆனால், அட்டாச் செய்ய வேண்டும். முதலில் அமெரிக்காவில் கிடைக்க இருக்கிறது.

ஜூன் 5ஆம் தேதி முதல் எதிர்பார்க்கலாம். ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. இந்த ப்ரீ-ஆர்டர் வட அமெரிக்காவில் மட்டுமே தொடங்குகிறது. குளோபல் வெளியீட்டுக்கு பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எதிர்பார்க்கலாம். இந்த நிண்டெண்டோ ஸ்விட்ச் 2 கேமிங் கன்சோலின் விலை ரூ.42,765ஆக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nintendo Switch 2 With Joy Con 2 Controllers 256GB Storage Revealed Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X