ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கிய இந்திய நிறுவனத்தின் புதிய நிமோ ஸ்மார்ட் கிளாஸ்!

|

நிமோ பிளானட் நிறுவனம் சில காலமாக ஸ்மார்ட் கிளாஸ் சாதனங்களை உருவாக்கி வருகிறது. நிமோ பிளானட் கேரளாவைச் சேர்ந்த இந்திய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கிளாஸ்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஜியோ கிளாஸுடன் நேரடி போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் மற்றும் விலை விபரங்களைப் பார்க்கலாம்.

நிமோ பிளானட் ஸ்மார்ட் கிளாஸ்

நிமோ பிளானட் ஸ்மார்ட் கிளாஸ்

நிமோ பிளானட் ஸ்மார்ட் கிளாஸ்கள் தற்பொழுது அதன் இணையதளத்தில் முன்கூட்டியே ஆர்டர் செய்ய கிடைக்கிறது. நிமோ பிளானட் ஸ்மார்ட் கிளாஸ்கள் நீங்கள் விரும்பும் வேலையை எங்கிருந்தும் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கிளாஸ்கள் தனிப்பயன் அடிப்படையிலான பிளானட் ஓஎஸ் என்ற ஆண்ட்ராய்டு இயக்க முறைமையுடன் வந்துள்ளது. இது மல்டி ஸ்கிரீன் பயன்பாட்டை வழங்குகிறது.

மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட் எக்செல், வேர்ட், பவர்பாயிண்ட், அவுட்லுக் மற்றும் பல பயன்பாடுகளை நீங்கள் இந்த ஸ்மார்ட் கிளாஸ் மூலம் இயக்கலாம். பல சாளரங்களிலும் ஒரு பயன்பாட்டைத் திறக்கலாம். அதனுடன், ஒரே நேரத்தில் பல பயன்பாடுகளை இயக்க முடியும். வலதுபுறத்தில், நீங்கள் YouTube இயக்கலாம் மற்றும் இடதுபுறத்தில், நீங்கள் இணையம் வழியாக உலாவலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ஒரு நற்செய்தி: கொரோனாவைக் கொல்லும் கருவி கண்டுபிடிப்பு: இனி எல்லா இடத்துலயும் இதான்!ஒரு நற்செய்தி: கொரோனாவைக் கொல்லும் கருவி கண்டுபிடிப்பு: இனி எல்லா இடத்துலயும் இதான்!

மல்டி ஸ்கிரீன் அம்சம்

மல்டி ஸ்கிரீன் அம்சம் 2 திரைகளுக்கு என்ற கட்டுப்பாட்டுடன் இல்லாமல், நீங்கள் உண்மையில் ஒரே நேரத்தில் 6 திரைகளைத் திறக்கலாம், அனைத்து 6 திரைகளும் நிஜ உலகில் உங்களுக்கு முன்னால் மிதக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நிமோ பிளானட் ஸ்மார்ட் கிளாஸ்கள் புளூடூத் கீபோர்டு மற்றும் மவுஸுடன் இணைக்க அனுமதி வழங்குகிறது. உங்கள் ஐபோன், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் மூலம் நிமோ பிளானட் ஸ்மார்ட் கிளாஸை பயன்படுத்தலாம்.

 4 ஜிபி ரேம்,

நிமோ பிளானட் ஸ்மார்ட் கிளாஸ்கள் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், குவால்காம் பிராசஸர், வைஃபை, வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவு மற்றும் யூ.எஸ்.பி-சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட் கிளாஸ்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் இயக்க முடியும். நிமோ ஸ்மார்ட் கிளாஸின் முதல் வேரியண்ட் மாடல் $ 699 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு சலுகையாக 50% தள்ளுபடியுடன் இப்பொழுது வெறும் 349 டாலர் விலையில் கிடைக்கிறது.

Jio பயனர்கள் குஷி! ஜியோ தனது 5ஜி சேவையை சத்தமில்லாமல் துவங்க தயாராகிவிட்டது!Jio பயனர்கள் குஷி! ஜியோ தனது 5ஜி சேவையை சத்தமில்லாமல் துவங்க தயாராகிவிட்டது!

விலை

ஸ்மார்ட் கிளாஸின் இரண்டாவது வேரியண்ட் நிமோ ஸ்மார்ட் கிளாஸ் $ 699 என்ற விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இது தற்பொழுது 40% தள்ளுபடியில் வெறும் 419 டாலர் விலையில் கிடைக்கிறது. ஷிப்பிங் கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது. முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் வெறும் 29 டாலர் செலுத்தினால் போதுமானது, பின்னர் மீதமுள்ள 390 டாலர் கட்டணத்தை ஸ்மார்ட் கிளாஸைப் பெரும் நேரத்தில் செலுத்திடலாம்.

Best Mobiles in India

English summary
Nimo Planet Everyday Productivity Smart Glasses Available for Pre-Order Now : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X