இப்படி ஒரு வித்தியாசமான கீபோர்ட் டிவைஸா? அல்ட்ரா காம்பெக்ட் சைசில் தி ஷ்ரிம்ப் Keyboard அறிமுகம்.!

|

கீபோர்டு (Keyboard) என்பது ஒரு பிளாட்டான பலகையில் அல்பாபெட் எழுத்துக்கள், எண்கள் உடன் கூடிய சில சிம்பாலிக் சிம்பல்கள் மற்றும் ஃபங்க்ஷன் கீஸ்களால் பொருத்தப்பட்ட 101 கீஸ் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பான சாதனமாகும். இந்த சாதனத்தின் உதவியுடன் தான் மனிதர்கள் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களுடன் கம்யூனிகேட் செய்ய முடிகிறது. இப்போது முற்றிலும் வித்தியாசமான The Shrimp என்ற கீபோர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

The Shrimp அல்ட்ரா காம்பெக்ட் கேமிங் கீபோர்ட்

The Shrimp அல்ட்ரா காம்பெக்ட் கேமிங் கீபோர்ட்

இதுவரைக்கும் இப்படியொரு வித்தியாசமான கீபோர்ட் டிவைஸை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்று தான் கூற வேண்டும். சில ஹை-டெக் கேட்ஜெட் பிரியர்களுக்கு இந்த கீபோர்ட் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த வித்தியாசமான கீபோர்ட் சாதனம், 'தி ஷ்ரிம்ப் அல்ட்ரா காம்பெக்ட் மெக்கானிக்கல் கேமிங் கீபோர்ட்' (The Shrimp ultra-compact mechanical gaming keyboard) என்று அழைக்கப்படுகிறது. இது பெரிய கீபோர்ட் டிவைஸிற்கு ஆல்ட்டர்னேட்டிவாக செயல்படுகிறது.

பெரிய கீபோர்ட் சாதனங்களுக்கு மாற்றான புதிய டிவைஸா இது?

பெரிய கீபோர்ட் சாதனங்களுக்கு மாற்றான புதிய டிவைஸா இது?

நோர்டிக் கேம் சப்ளை (NGS) என்ற நிறுவனம் தான் இந்த அல்ட்ரா காம்பெக்ட் கீபோர்ட் டிவைஸை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இது கேமிங் போது லேப்டாப்புடன் இணைந்து பயன்படுத்த அனுமதிக்கிறது. ஷ்ரிம்ப் அல்ட்ரா காம்பெக்ட் மெக்கானிக்கல் கேமிங் கீபோர்ட் சாதனம் சாதாரண பெரிய கீபோர்ட் சாதனங்களுக்கு மாற்றாக உள்ளது. பாரம்பரியமான ஸ்டாண்டர்ட் தோற்றமுடைய கீபோர்ட்களில் இருந்து எளிமையான செயல்பாட்டை இந்த டிவைஸ் கொண்டுள்ளது.

இனி 101 கீஸ் தேவையில்லை.. இதில் எத்தனை கீஸ் இருக்கு தெரியுமா?

இனி 101 கீஸ் தேவையில்லை.. இதில் எத்தனை கீஸ் இருக்கு தெரியுமா?

உண்மையிலேயே, இதன் காம்பெக்ட் டிசைன் நம்மை ஈர்க்கிறது. பெரிய கீபோர்ட் சாதனம் போல இதில் 101 கீஸ்கள் எல்லாம் இல்லை. இந்த காம்பெக்ட் கேமிங் கீபோர்டில் வெறும் 25 கீஸ்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கீபோர்டை உங்கள் லேப்டாப் உடன் இணைத்துப் பயன்படுத்த எந்தவித சாப்ட்வேரும் உங்களுக்கு தேவையில்லை. கடினமான இன்ஸ்டால் செட்டப் கூட தேவையில்லை என்கிறது நிறுவனம்.

மிரட்டலான டிஸைனுடன் அட்டச்மெண்ட் ரிஸ்ட் ரெஸ்டர் கூட இதில் இருக்கா?

மிரட்டலான டிஸைனுடன் அட்டச்மெண்ட் ரிஸ்ட் ரெஸ்டர் கூட இதில் இருக்கா?

இந்த ஷ்ரிம்ப் கீபோர்ட் டிவைஸ் கேடரோன் ஜி ப்ரோ (Gateron G Pro) சுவிட்சுகள் மற்றும் நேர்த்தியான நோர்டிக் (Nordic) டிசைன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த கீபோர்ட் சாதனத்தின் மூலம் எழும் ஒலியைக் குறைக்கக்கூடிய அம்சங்கள் கூட இதில் உள்ளது. பயனர்களின் அதிக வசதிக்காக இதில் ரிஸ்ட் ரெஸ்டர் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. இது ஈசியாக பிரித்தெடுக்கக் கூடிய மேக்னெட்டிக் அட்டாச் அம்சத்துடன் வருகிறது. பயனரின் மணிக்கட்டு ஓய்வு பெற மென்மையான குஷன் கூட வழங்கப்பட்டுள்ளது.

RGB லைட்டிங் உடன் இதை எந்த டிவைஸ்களுடன் இணைக்கலாம்?

RGB லைட்டிங் உடன் இதை எந்த டிவைஸ்களுடன் இணைக்கலாம்?

இந்த ஷ்ரிம்ப் கீபோர்டில் மேம்பட்ட RGB லைட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கீஸ்கள் பெரிய எழுத்துக்களைக் கொண்டுள்ளன. இது கிளாசிக் செர்ரி ப்ரொபைலைக் கொண்டுள்ளது. இதன் உயரம் மற்றும் வடிவமைப்பு பெரும்பாலான தொழில்துறை கீபோர்ட்களை விடச் சிறந்த வடிவத்தில் உள்ளது. டெஸ்க்டாப், கேமிங் லேப்டாப், எச்ஐடி-இணக்கமான USB சாதனங்கள் மற்றும் கேம்ஸ் கன்சோல்களுக்கான இணக்கத்துடன் இது வருகிறது.

எப்போது இந்த ஷ்ரிம்ப் கீபோர்ட் டிவைஸ் விற்பனைக்கு கிடைக்கும்?

எப்போது இந்த ஷ்ரிம்ப் கீபோர்ட் டிவைஸ் விற்பனைக்கு கிடைக்கும்?

ஷ்ரிம்ப் எப்போது விற்பனைக்குக் கிடைக்கும் என்று NGS இடம் கேட்டபோது, இதன் வளர்ச்சி சிறந்த நிலையை அடைந்தவுடன் சந்தைகளில் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. NGS நிறுவனம் எந்த ஒரு குறிப்பிட்ட தேதியையும் முன் வைக்கவில்லை. ஆனால், இந்த வித்தியாசமான கீபோர்ட் டிவைஸை நிறுவனம் முடிந்த வரை விரைவில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயமாக இப்படி ஒரு கூலான கேட்ஜெட் நம்மிடம் இருக்க வேண்டும் என்று தான் மனம் ஆசைப்படுகிறது. சரி, கொஞ்சம் காத்திருப்போம்.

Best Mobiles in India

English summary
NGS Launches New The Shrimp Ultra Compact Mechanical Gaming Keyboard With 25 Keys

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X