86-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Xiaomi: விலை எவ்வளவு தெரியுமா?
சியோமி நிறுவனம் சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் உடன் சியோமி மாஸ்டர் மினி எல்இடி 86-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது ஒரு தியேட்டர் அனுபவத்தைத் தரும் என சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இப்போது சீனாவில் மட்டுமே இந்த சியோமி மாஸ்டர் மினி எல்இடி 86-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி மாஸ்டர் மினி எல்இடி டிவி 86-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே மினி எல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 3840 × 2160 பிக்சல்ஸ், 178-degree viewing angle, டால்பி விஷன், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ்,10-பிட் கலர் டெப்த் எனப் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அதேபோல் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ73 மீடியாடெக் பிராசஸர் உடன் Mali-G52 MC1 GPU ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சியோமி ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக MIUI TV இயங்குதளத்தை அடிப்பiயாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி மாஸ்டர் மினி எல்இடி 86-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் Dolby Vision IQ, IMAX மற்றும் மாஸ்டர் இமேஜ் எஞ்சின் தொழில்நுட்ப வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. இது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி அட்மோஸ் மற்றும் DTS-Xஆதரவு கொண்ட 70 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த சியோமி மாஸ்டர் மினி எல்இடி டிவி 86-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் கேமிங் செயலி உட்பட அனைத்து செயலிகளையும் பயன்படுத்த முடியும்.
வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல், ஈதர்நெட் மற்றும் பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சியோமி மாஸ்டர் மினி எல்இடி 86-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி லோக்கல் டிம்மிங் அல்காரிதம் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.

சியோமி மாஸ்டர் மினி எல்இடி டிவி 86-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது சீனாவில் வரும் ஏப்ரல் 20-ம் தேதி விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விலை CNY 14,999(இந்திய மதிப்பில் ரூ.1,78,840) ஆக உள்ளது. விரைவில் இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








