32-இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்குற ஐடியா இருக்கா? அப்போ இந்த புதிய Xiaomi டிவி பாருங்க.. தூள் கிளப்பும் அம்சங்கள்!
சியோமி நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவி மாடலுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி எப்2 ஃபயர் 32-இன்ச் டிவி (Xiaomi F2 Fire 32 inch Smart TV ) மாடலை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த புதிய 32-இனச் சியோமி ஸ்மார்ட் டிவி சர்வதேச சந்தையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட் டிவி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய சியோமி டிவி எப்2 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி டிவி எப்2 32-இன்ச் மாடல் ஆனது எச்டி-ரெடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1366×768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178-degree viewing angle மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக் ஏ35 பிராசஸர் வசதி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் Mali-G31 MP2 GPUவசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 1.5ஜி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சியோமி டிவி எப்2 32-இன்ச் மாடல். எனவே ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஃபையர் ஓஎஸ் 7 மூலம் இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி இயங்குகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
அலெக்ஸாவுடன் 360° புளூடூத் மற்றும் ஐஆர் வாய்ஸ் ரிமோட்கண்ட்ரோல் வசதியுடன் இந்த புதிய சியோமி டிவி எப்2 32-இன்ச் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு அமேசான் பிரைம் வீடீயொ, நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மியூசிக் உள்ளிட்ட பல செயலிகளை இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.
டால்பி ஆடியோ, டிடிஎஸ்-எச்டி, எடிஎஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய ஸமார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.

அதேபோல் புளூடூத் 5.0, டூயல்-பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி. ஆனால் இந்த புதிய சியோமி டிவி எப்2 32-இன்ச் மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை சியோமி நிறுவனம்.


Click it and Unblock the Notifications








