Home
Gadgets

எல்லா TWS Earbuds-ஐயும் ஓரங்கட்டும் பட்ஜெட் விலை.. Google Fast Pair ஆதரவுடன் Redmi பட்ஸ் 4 ஆக்டிவ் அறிமுகம்!

சியோமி நிறுவனம் அதன் லேட்டஸ்ட் டேப்லெட் ஆன சியோமி பேட் 6 (Xiaomi Pad 6) உடன் சேர்த்து, அதன் புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் (Redmi Buds 4 Active) இயர்பட்ஸையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸின் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

கவனிக்கப்பட வேண்டிய 2 முக்கிய அம்சங்கள்: மிகவும் மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது கூகுள் ஃபாஸ்ட் பேர் ஆதரவுடன் (Google fast pair support) வருகின்றன; மேலும் சார்ஜிங் கேஸுடன் சேர்த்து 30 மணிநேர மொத்த பேட்டரி பேக்கப்பை (30 hours of total battery backup) வழங்குவதாகவும் உறுதியளிக்கின்றன.

Google Fast Pair ஆதரவுடன் Redmi பட்ஸ் 4 ஆக்டிவ் அறிமுகம்!

ரெட்மி பட்ஸ் ஆக்டிவ் 4 விரிவான அம்சங்கள்: ரெட்மியின் இந்த புதிய ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் ஆனது கூகுள் ஃபாஸ்ட் பேர் ஆதரவுடன் சேர்த்து ப்ளூடூத் வெர்ஷன் 5.3-ஐ ஆதரிக்கிறது. இந்த இரண்டின் வழியாக, வெறுமனே சார்ஜிங் கேஸின் ஃபிளாப்பை திறப்பதன் மூலம் உங்கள் இயர்பட்ஸ் உடன் நீங்கள் எளிதாக கனெக்ட் ஆக முடியும்.

மேலும் ரெட்மியின் இந்த மலிவு விலை இயர்பட்ஸ் ஆனது 12மிமீ ட்ரைவர் யூனிட்டுடன் வருகிறது, இது அதிவேகமான பாஸ் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது இஎன்சி (ENC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental noise cancellation) உடன் வருகிறது.

அறியாதோர்களுக்கு இஎன்சி என்பது உங்களை சுற்றியுள்ள இரைச்சலால் நீங்கள் திசை திருப்பப்படாமல் இசையை ரசிக்க அல்லது அழைப்பில் பேச அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். மேலும் இந்த ரெட்மி பட்ஸ் ஆக்டிவ் 4 ஆனது லோ லேடன்சி கேமிங் மோட் (Low-latency gaming mode) உடன் வருகிறது மற்றும் எளிதான டச் கண்ட்ரோல்களையும் (Touch Controls) வழங்குகிறது.

வாய்ஸ் அசிஸ்டென்ட் (Voice Assistant) ஆதரவுடன் வரும் இந்த ரெட்மி இயர்பட்ஸ் ஆனது இது ஸ்பிளஷ் ரெசிஸ்டண்ட்டிற்கான ஐபிஎக்ஸ்4 ரேட்டிங்கையும் (IPX4 Rating) பெற்றுள்ளன. சார்ஜிங்கை பொறுத்தவரை, இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 5 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப்பை வழங்கும்.

மேலும் சார்ஜிங் கேஸுடன் சேர்த்து 30 மணிநேர மொத்த பேட்டரி பேக்கப்பை வழங்கும். சுவாரசியமாக ரெட்மி பட்ஸ் ஆக்டிவ் 4 இயர்பட்ஸ் ஆனது ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) ஆதரவுடன் வருகின்றன. இதை வெறுமனே 10 நிமிடங்கள் சார்ஜ் செய்வதன் மூலம் 90 நிமிட மியூசிக் பிளேபேக்கை அனுபவிக்க முடியும்.

விலை மற்றும் விற்பனை: ரெட்மி பட்ஸ் ஆக்டிவ் 4 இயர்பட்ஸின் அசல் விலை ரூ.1,399 ஆகும். இருப்பினும் இதை அறிமுக சலுகையின் கீழ் இது ரூ.1,199 க்கு வாங்க கிடைக்கிறது. இது அமேசான் இந்தியா வலைத்தளம் (Amazon.in), ஷாவ்மீயின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (mi.com) மற்றும் நாட்டில் உள்ள ஷாவ்மீ ரீடெய்ல் ஸ்டோர்களில் ஏர் ஒயிட் மற்றும் பாஸ் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New TWS Earbuds Redmi Buds Active 4 with Google fast pair launched in India Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X