இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க.. பக்கா பட்ஜெட்டில் புதுசா ANC பட்ஸ்.. 100W சார்ஜிங் போன்.. Realme ரெடி!
ரியல்மி நிறுவனம் வருகிற மே 22 ஆம் தேதியன்று 2 புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது - ஒரு புதிய ஸ்மார்ட்போனுடன் சேர்த்து புதிய இயர்பட்ஸ் ஒன்றையும் வெளியிடவுள்ளது. அதென்ன மாடல்கள்? அவைகள் என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:
புதிய இயர்பட்ஸை பொறுத்தவரை, மே 22 ஆம் தேதியன்று ரியல்மி பட்ஸ் ஏர் 6 (Realme Buds Air 6) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களாகும். மேலும் இது கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மற்றும் ரியல்மி பட்ஸ் ஏர் 5 க்கு பின் இந்தியாவிற்கு வரும் மாடலாகும்.

இருப்பினும் ரியல்மி பட்ஸ் ஏர் 6 ப்ரோ (Realme Buds Air 6 Pro) அறிமுகம் குறித்த இதுவரை எந்த அறிகுறியும் இல்லை. ஆகையால் மே 22 அன்று ரியல்மி பட்ஸ் ஏர் 6 மட்டுமே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரசியமாக ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) ஸ்மார்ட்போனும் கூட அதே தேதியில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இவ்விரு தயாரிப்புகளும் (அதாவது ரியல்மி பட்ஸ் ஏர் 6 மற்றும் ரியல்மி ஜிடி 6டி) வருகிற மே 22 அன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது. அறிமுகத்திற்கு பின்னர் புதிய இயர்பட்ஸ் ஆனது ரியல்மி இந்தியா வலைத்தளம், அமேசான் இந்தியா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளின் வழியாக வாங்க கிடைக்கும்.
ரியல்மி பட்ஸ் ஏர் 6-ன் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஒயிட் கலர் ஆப்ஷனில் டீஸ் செய்யப்படுகிறது. சார்ஜிங் கேஸின் வடிவமைப்பு அதன் முந்தைய மாடலை போலவே உள்ளது. இந்த இயர்போன்கள் எல்எச்டிசி 5.0 கோடெக் ஆதரவுடன் ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழுடன் வருவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
என்ன விலைக்கு வரும்? ரியல்மி பட்ஸ் ஏர் 6 ஆனது 50dB வரை ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷனை (active noise cancellation - ANC) ஆதரிப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் ஆனது 12.4 மிமீ ட்ரைவர்களை கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த அம்சம் இந்த பிரிவில் "மிகப்பெரியது" என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த பட்ஸின் விலை அல்லது விலை வரம்பை ரியல்மி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. பழைய ரியல்மி பட்ஸ் ஏர் 5 ஆனது ரூ.3,699 க்கு அறிமுகமானதால், அதே வரம்பை ரியல்மி பட்ஸ் ஏர் 6 மாடலிலும் நாம் எதிர்பார்க்கலாம்.
ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7+ Gen 3 SoC) மூலம் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 6,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் (1264 x 2780 பிக்சல்ஸ்) 8டி எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது. இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜை பேக் செய்கிறது. கடைசியாக 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.
என்ன விலைக்கு வரும்? ரியல்மி ஜிடி 6டி மாடலானது ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் இதன் விலை நிர்ணயம் ரூ.20,000 க்குள் தான் இருக்கும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,000-ஐ சுற்றிய விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








