65-இன்ச் ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.! விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட் டிவிகளுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் பிரபலமான தாம்சன் நிறுவனம் புதிய 65-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது தாம்சன் நிறுவனம் இந்தியாவில் 65-இன்ச் OATHPRO சீரிஸ் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய 65-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது புதிய 65-இன்ச் OATHPRO சீரிஸ் டிவி மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது தாம்சன் 65-இன்ச் OATHPRO சீரிஸ் டிவி ஆனது 4கே டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3840 × 2160 பிக்சல்ஸ், டால்பி விஷன் ஆதரவு, 550 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய தாம்சன் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் (ஏ53) பிராசஸர் வசதியுடன் Mali-450 GPU ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய தாம்சன் 65-இன்ச் OATHPRO சீரிஸ் டிவி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கூகுள் டிவி ஓஎஸ் (இயங்குதளம்) வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு தாம்சன் 65-இன்ச் OATHPRO சீரிஸ் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிசைன் மற்றும் மெட்டாலிக் ஸ்டாண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் இதில் டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு இருப்பதால் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும். பின்பு நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.
அதேபோல் இந்த தாம்சன் 65-இன்ச் OATHPRO சீரிஸ் ஸ்மார்ட் டிவியின் ரிமோட்டில் நெட்ஃபிக்ஸ், பிரைம், யூடியூப் போன்றவற்றிக்கான பிரத்யே ஷார்ட்கட் கீ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. எனவே நீங்கள் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இந்த ஸ்மார்ட் டிவியை இயக்க முடியும்.

குறிப்பாக டிடிஎஸ்,டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ் ஆதரவுகளுடன் கூடிய 40 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டு இந்த தாம்சன் 65-இன்ச் OATHPRO சீரிஸ் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது ஒரு தியேட்டர் அனுபவத்தைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிவி தனித்துவமான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன்புட், ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான தாம்சன் 65-இன்ச் OATHPRO சீரிஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த 65-இன்ச் டிவியின் விலை ரூ.43,999-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 13-ம் தேதி முதல் இந்த டிவி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








