இது வெறும் ஸ்மார்ட் டிவி இல்ல ஒரு மினி தியேட்டர்: 4 டிவிகளை அறிமுகம் செய்து தரமான சம்பவம் செய்த Sony.!
இந்தியாவில் சியோமி, ஒன்பிளஸ் நிறுனவங்கள் இப்போது அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகின்றன. ஆனாலும் மக்கள் இந்த சியோமி, ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளை விட சோனி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளை வாங்கத் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்
காரணம் என்னவென்றால் சிறந்த தரம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கிறது சோனி நிறுவனம். ஆனால் சோனி நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் டிவிகள் சற்று உயர்வான விலையில் வெளிவருகின்றன. இருந்தபோதிலும் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொடுக்கிறது சோனி நிறுவனம்.

இந்நிலையில் சோனி நிறுவனம் இந்தியாவில் சோனி பிராவியா எக்ஸ்75எல் (Sony BRAVIA X75L) 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளுக்கும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்போம்.
சோனி நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள சோனி பிராவியா எக்ஸ்75எல் 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன. மேலும்3840 x 2160 பிக்சல்ஸ், 4கே எக்ஸ்-ரியா ரியாலிட்டி ப்ரோ, லைவ் கலர் டெக்னாலஜி, மோஷன்ஃப்ளோ எக்ஸ்ஆர், ஃபிரேம் டிமிங் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த நான்கு ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன.
சோனி நிறுவனம் அறிமுகம் செய்த நான்கு ஸ்மார்ட் டிவிகளுக்கும் எச்டிஆர்10 மற்றும் எச்எல்ஜி ஆதரவைக் கொண்டுள்ளன. அதேபோல் இந்த சோனி ஸ்மார்ட் டிவிகள் 4கே பிராசஸர் X1 ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சோனி நிறுவனம்.
அதேபோல் இந்த டிவிகள் ஆண்ட்ராய்டு டிவி மற்றும் கூகுள் டிவி இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன இந்த சோனி ஸ்மார்ட் டிவிகள். பின்பு ஆட்டோ எச்டிஆர் டோன் மேப்பிங், ஆட்டோ ஜெனர் பிக்சர் மோட், பிஎஸ்5 உள்ளிட்ட பல்வேறு கேமிங் அம்சங்களை கொண்டுள்ளன இந்த நான்கு சோனி ஸ்மார்ட் டிவிகள்.
குறிப்பாக 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு சோனி பிராவியா எக்ஸ்75எல் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. குரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட், அலெக்சா, ஆப்பிள் ஏர்ப்ளே2, ஆப்பிள் ஹோம்கிட் போன்ற தரமான அம்சங்கைள கொண்டுள்ளன இந்த நான்கு புதிய ஸ்மார்ட் டிவிகள். மேலும் ஓபன் Baffle ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள்.

வைஃபை 802.11, எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட், யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.0, ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன புதிய சோனி ஸ்மார்ட் டிவிகள். அதேபோல் சோனி பிராவியா எக்ஸ்75எல் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.69,900-ஆக உள்ளது. பின்பு இதன் 50-இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.85,900-விலையிலும், 65-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.1,39,900-விலையிலும் அறிமுகம் செய்துள்ளது சோனி நிறுவனம். குறிப்பாக இந்த மூன்று டிவிகளுக்கும் ஏப்ரல் 24-ம் தேதி விற்பனைக்கு வரும்.
ஆனால் சோனி பிராவியா எக்ஸ்75எல் 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் விற்பனை விவரத்தைச் சோனி நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. விரைவில் இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலையும் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சோனி நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவிக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications