மார்ச் 14 வரை எந்த ஒரு ஸ்மார்ட் டிவியும் வாங்காதீங்க.! ஏனெனில் வருகிறது புதிய Redmi ஸ்மார்ட் டிவி.!
இந்தியாவில் சாம்சங், எல்ஜி,ஒன்பிளஸ் நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை விட ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக ரெட்மி நிறுவனம் தனித்துவமான மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்வதால் அதிக வரவேற்பு உள்ளது.
புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்
இந்நிலையில் வரும் மார்ச் 14-ம் தேதி புதிய Fire OS 7 வசதியை கொண்ட புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் இப்போது ஒரு ஸ்மார்ட் டிவியை வாங்க இருந்தால் இப்போதைக்கு அதை தள்ளி வைக்கவும். இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி அறிமுகத்திற்குப் பிறகு வாங்குவது நல்லது.

அதாவது ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய ஸ்மார்ட் டிவிகள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள ஸ்மார்ட் டிவிகள் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் அளவுகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
4கே டிஸ்பிளே வசதி
ரெட்மி அறிமுகம் செய்ய உள்ள புதிய ஸ்மார்ட் டிவிகள் 4கே டிஸ்பிளே மற்றும் எச்டிஆர்10/எச்எல்ஜி ஆதரவுகளுடன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த திரை அனுபவம் வழங்கும். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளில் Fire OS 7 உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த டிவிகளில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
விரைவில் அறிமுகமாகும் ரெட்மி ஸ்மார்ட் டிவிகள் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன. பின்பு குவாட்-கோர் பிராசஸர் உடன் Mali-G52 GPU ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகமாகும். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் பெசல்-லெஸ் டிசைன் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் புதிய ரெட்மி ஸமார்ட் டிவிகளின் டால்பி ஆடியோவுடன் கூடிய தரமான ஸ்பீக்கர் உள்ளன. மேலும் புளூடூத் வி5.0, வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட் டிவிகள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.
32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி
மேலும் இப்போது அமேசான் தளத்தில் 32-இன்ச் ரெட்மி ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது அமேசான் தளத்தில் இந்த ரெட்மி 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு 56 சதவீதம் தள்ளுபடிவழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.
இப்போது விலை குறைக்கப்பட்ட இந்த 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைப் பார்ப்போம். அதாவது இந்த 32-இன்ச் ரெட்மி ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி ஆனது 1366 x 768 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட் டிவி.

32-இன்ச் ரெட்மி ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி மாடலில் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸட் ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 32-இன்ச் ரெட்மி டிவி.


Click it and Unblock the Notifications








