ஸ்டைலான லுக் & நம்பகமான அம்சங்களுடன் களமிறங்கும் Realme Watch 3 Pro.!
சாம்சங், ஒன்பிளஸ், போட் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக ரியல்மி நிறுவனமும் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.

ரியல்மி வாட்ச் 3 ப்ரோ
அதன்படி இந்த ரியல்மி நிறுவனம் விரைவில் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதாவது இந்நிறுவனம் ரியல்மி வாட்ச் 3 ப்ரோ எனும் மாடலை தான் அறிமுகம் செய்ய உள்ளது.

எப்போது அறிமுகம்?
வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் 3 ப்ரோ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மெட்டல் பாடி
ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடல் ஆனது ரியல்மி வாட்ச் 2 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என்று கூறப்படுகிறது. பின்பு சமீபத்தில் வெளியான
டீசரில் இந்த புதிய மாடல் மெட்டல் பாடி வலது புறத்தில் ஒற்றை பட்டன் கொண்டு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

பெரிய டிஸ்பிளே
ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது பெரிய AMOLED டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும். எனவே இதைப்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மிநிறுவனம்.

ப்ளூடூத் மூலம் வாய்ஸ் காலிங் வசதி
மேலும் ஜிபிஎஸ், ப்ளூடூத் மூலம் வாய்ஸ் காலிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடல்.மேலும் முந்தைய வாட்ச் 2 ப்ரோ மாடலை விட பல்வேறு புதிய சிறப்பு அம்சங்கள் இந்த ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடலில் இடம்பெறும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன விலை?
அதேபோல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி வாட்ச் 2 ப்ரோ மாடலின் விலை ரூ.4,999-ஆக உள்ளது. பின்பு விரைவில் அறிமுகம்
செய்யப்படும் ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடல் அதைவிட சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடல் உடன் ரியல்மி 9ஐ 5ஜி (Realme 9i 5G) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி 9ஐ 5ஜி
ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி 9ஐ 5ஜி மாடல்.

அருமையான சிப்செட்
ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 810 5ஜி சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட்செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளது.

அட்டகாசமான கேமரா
ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50எம்பி ரியர் கேமரா இருப்பதால்தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் இன்-டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன்.

பட்ஜெட் விலை
5000 எம்ஏஎச் பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 6ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்தரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ரூ.15,000-க்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications