சத்தமின்றி 50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த OPPO: என்ன விலை?

|

சியோமி, சாம்சங், சோனி போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக ஒப்போ நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான அம்சங்களுடன் தான் வெளிவருகிறது.

ஒப்போ கே9எக்ஸ்

ஒப்போ கே9எக்ஸ்

இந்நிலையில் புதிய ஒப்போ கே9எக்ஸ் (OPPO K9x) எனும் 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி நாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

விரைவில் ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட் டிவி அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஸ்மார்ட்
டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஐபோன்களே பொறாமைப்படும் அளவுக்கு தரமான அம்சங்களுடன் Samsung Galaxy Z Flip போன் அறிமுகம்.!ஐபோன்களே பொறாமைப்படும் அளவுக்கு தரமான அம்சங்களுடன் Samsung Galaxy Z Flip போன் அறிமுகம்.!

சிறந்த பாதுகாப்பு வசதி

சிறந்த பாதுகாப்பு வசதி

ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட் டிவி ஆனது 50-இன்ச் ஸ்கிரீன் மற்றும் LED-backlit பேனல் ஆதரவைக்
கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவி 4கே ரெசல்யூசன் ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் ஒரு நல்ல திரை அனுபவத்தை கொடுக்கும்.

மேலும் கண்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொடுக்கும் blue-light reducing தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளது இந்தஅசத்தலான ஒப்போ ஸ்மார்ட் டிவி.

27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!

 16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

அதேபோல் இந்த ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட் டிவி 280 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் எச்டிஆர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.

உலகின் நம்பர் 1 தலைவர்- 1 கோடி சந்தாதாரர்களை கடந்த பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்: எப்படி தெரியுமா?உலகின் நம்பர் 1 தலைவர்- 1 கோடி சந்தாதாரர்களை கடந்த பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்: எப்படி தெரியுமா?

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

புதிய ஒப்போ ஸ்மார்ட் டிவியில் நாம் எதிர்பார்த்த சிப்செட் வசதி உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த ஸ்மார்ட் டிவி மாடலில் தரமான குவாட்-கோர் மீடியாடெக் சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..

ஆடியோ எப்படி?

ஆடியோ எப்படி?

20W power rating ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட் டிவி. மேலும் இது டால்பி சவுண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி உங்களுக்கு ஒரு தனித்துவமான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!

  கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

50-இன்ச் ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட் டிவி ஆனது ColorOS மூலம் இயங்குகிறது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட் போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ ஸ்மார்ட் டிவி.

அவ்வளவுதான் பூமி, எவ்வளவு அழகு- விண்வெளியில் எடுத்த அரேபிய தீபகற்பத்தின் புகைப்படம்- பகிர்ந்த விண்வெளி வீரர்!அவ்வளவுதான் பூமி, எவ்வளவு அழகு- விண்வெளியில் எடுத்த அரேபிய தீபகற்பத்தின் புகைப்படம்- பகிர்ந்த விண்வெளி வீரர்!

என்ன விலை?

என்ன விலை?

50-இன்ச் கொண்ட ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட் டிவியின் விலை 1399 Yuan (இந்திய மதிப்பில் ரூ.16,400) ஆக உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவி சீனாவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என்றுதகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New OPPO K9x Smart TV with 50-inch 4K display Launched: Specs, Price, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X