தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்த புதிய OnePlus ஸ்மார்ட் டிவி: எவ்வளவு நாள் இந்த சலுகை இருக்கும்?

|

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்தது என்று தான் கூறவேண்டும்.

ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ ஸ்மார்ட் டிவி விலை

ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ ஸ்மார்ட் டிவி விலை

அமேசான், ஒன்பிளஸ் உட்பட சில வலைத்தளங்களில் டிசம்பர் 13-ம் தேதி ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வந்தது. குறிப்பாக இந்த OnePlus TV 55 Y1S Pro மாடலின் விலை ரூ.39,999-ஆக உள்ளது.

POCO C31 போனை இலவசமாக வழங்கும் பிளிப்கார்ட்: ஒன்னுமே வேணாம் உள்ள வந்தா மட்டும் போதும்.!POCO C31 போனை இலவசமாக வழங்கும் பிளிப்கார்ட்: ஒன்னுமே வேணாம் உள்ள வந்தா மட்டும் போதும்.!

எவ்வளவு நாள் சலுகை இருக்கும்?

எவ்வளவு நாள் சலுகை இருக்கும்?

ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ மாடலை தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கினால் ரூ.3000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக இந்த சிறப்பு சலுகை வரும் டிசம்பர் 25-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Avatar 2 விடுங்க மக்களே.! தங்க டிராகன் முட்டையுடன் விற்பனைக்கு வந்த Oppo Reno 8 பாருங்க.! விலை இவ்வளவு தானா?Avatar 2 விடுங்க மக்களே.! தங்க டிராகன் முட்டையுடன் விற்பனைக்கு வந்த Oppo Reno 8 பாருங்க.! விலை இவ்வளவு தானா?

 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே

4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே

OnePlus TV 55 Y1S ப்ரோ ஆனது 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவியில் 10-பிட் கலர் டெப்த் வசதி இருப்பதால் தெளிவாக நிறங்கள் பார்க்க முடியும். அதேபோல் தெளிவான வீடியோவை காண உதவுகிறது இந்த தொழில்நுட்பம்.

சரியான நேரத்தில் தரமான Price Cut.. இனிமேல் இந்த Samsung 5G போன் ரூ.11,000 பட்ஜெட்டில் கிடைக்கும்!சரியான நேரத்தில் தரமான Price Cut.. இனிமேல் இந்த Samsung 5G போன் ரூ.11,000 பட்ஜெட்டில் கிடைக்கும்!

தரமான வீடியோக்களை பார்க்க உதவுகிறது

தரமான வீடியோக்களை பார்க்க உதவுகிறது

இந்த 55-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் காமா எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது real-time image quality optimisation மற்றும் டைனமிக் கான்ட்ராஸ்ட் மற்றும் தெளிவான உள்ளடக்கத்தை வழங்க காட்சிகளை ஸ்மார்ட் ட்யூன் செய்கிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிறந்த தரமான வீடியோக்களை பார்க்க உதவுகிறது இந்த காமா எஞ்சின்.

9 வருட குஷியில் OnePlus.! தள்ளுபடியை தாராளமாக வழங்கி அசத்தல்.! இப்படி ஒரு சான்ஸ் இனி கிடைக்காது.!9 வருட குஷியில் OnePlus.! தள்ளுபடியை தாராளமாக வழங்கி அசத்தல்.! இப்படி ஒரு சான்ஸ் இனி கிடைக்காது.!

கிட்ஸ் மோட் அம்சம்

கிட்ஸ் மோட் அம்சம்

OnePlus TV 55 Y1S Pro ஆனது HDR10+, HDR10 மற்றும் HFL ஃபார்மேட்-ஐ ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இது தியேட்டர் தர அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். புதிய ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ மாடல் ஆண்ட்ராய்டு டிவி 10.0 மூலம் இயங்குகிறது. பின்பு இதில் OnePlus Connect 2.0 பயன்பாட்டுடன் கிட்ஸ் மோட் அம்சம் உள்ளது. மேலும் நீங்கள் இந்த புதிய OnePlus டிவியை OnePlus பட்ஸுடன் இணைக்கலாம்.

எங்க வந்து யாரு சீன் போடுறது? ஆன்டி-இந்தியன் வேலையை பார்த்த பாகிஸ்தான்.. செஞ்சி விட்ட இந்திய அரசு!எங்க வந்து யாரு சீன் போடுறது? ஆன்டி-இந்தியன் வேலையை பார்த்த பாகிஸ்தான்.. செஞ்சி விட்ட இந்திய அரசு!

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச்

புதிய 55-இன்ச் ஸ்மார்ட் டிவியில் OnePlus Connect software (2.0)உள்ளது. குறிப்பாக இதன் மூலம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றை இந்த டிவியுடன் இணைக்கலாம். அதாவது இந்த டிவியை இயக்குவது மற்றும் ஆஃப் செய்வதற்கு ஒன்பிளஸ் போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை பயன்படுத்தலாம்.

டால்பி ஆடியோ ஆதரவு

டால்பி ஆடியோ ஆதரவு

ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ மாடல் OxygenPlay 2.0 2.0 வசதியைக் கொண்டுள்ளது. மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி. அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

டூயல் பேண்ட் வைஃபை

டூயல் பேண்ட் வைஃபை

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் ஈதர்நெட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் 5.0 போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.குறிப்பாக ஒரு நல்ல 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை வாங்குவது நல்லது.

Best Mobiles in India

English summary
New OnePlus TV 55 Y1S Pro Smart TV is on sale with a discount of Rs.3000: Check Price and specifications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X