Just In
- 1 hr ago
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- 1 hr ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 1 hr ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 1 hr ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
Don't Miss
- News
"மீன் நழுவுதே".. இதான் காரணமா.. பாஜகவின் "சதுரங்க ஆட்டம்".. டெல்லி பறந்த மேட்டர்.. எடப்பாடிக்கு பிளஸ்
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Finance
அதானி குழுமத்தின் தணிக்கை குழு சர்ச்சை.. அதானி சொல்லும் விளக்கத்தை பாருங்க!
- Lifestyle
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எவராலும் செய்ய முடியாத அசாத்திய சாதனையை செய்துள்ளார்... என்ன சாதனை தெரியுமா?
- Movies
ஷாலினிக்காக அஜித் அப்படி பண்ணது சான்ஸே இல்ல... அதுல அவருதான் கில்லி: பிரேம் பிளாஷ்பேக்
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
55-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த கையோடு தள்ளுபடி வழங்கி அதிர வைத்த OnePlus.!
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அசத்தலான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

55-இன்ச் ஸ்மார்ட் டிவி
ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

10-பிட் கலர் டெப்த் வசதி
OnePlus TV 55 Y1S ப்ரோ ஆனது 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவியில் 10-பிட் கலர் டெப்த் வசதி இருப்பதால் தெளிவாக நிறங்கள் பார்க்க முடியும். அதேபோல் தெளிவான வீடியோவை காண உதவுகிறது இந்த அட்டகாச தொழில்நுட்பம்.

காமா எஞ்சின்
குறிப்பாக இந்த 55-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் காமா எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது real-time image quality optimisation மற்றும் டைனமிக் கான்ட்ராஸ்ட் மற்றும் தெளிவான உள்ளடக்கத்தை வழங்க காட்சிகளை ஸ்மார்ட் ட்யூன் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிறந்த தரமான வீடியோக்களை பார்க்க உதவுகிறது இந்த காமா எஞ்சின்.

தியேட்டர் தர அனுபவத்தை கொடுக்கும்
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட OnePlus TV 55 Y1S Pro ஆனது HDR10+, HDR10 மற்றும் HFL ஃபார்மேட்-ஐ ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இது தியேட்டர் தர அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

கிட்ஸ் மோட் அம்சம்
புதிய ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ மாடல் ஆண்ட்ராய்டு டிவி 10.0 மூலம் இயங்குகிறது. பின்பு இதில் OnePlus Connect 2.0 பயன்பாட்டுடன் கிட்ஸ் மோட் அம்சம் உள்ளது. மேலும் நீங்கள் இந்த புதிய OnePlus டிவியை OnePlus பட்ஸுடன் இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய 55-இன்ச் ஸ்மார்ட் டிவியில் OnePlus Connect software (2.0)உள்ளது. குறிப்பாக இதன் மூலம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றை இந்த டிவியுடன் இணைக்கலாம். அதாவது இந்த டிவியை இயக்குவது மற்றும் ஆஃப் செய்வதற்கு ஒன்பிளஸ் போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை பயன்படுத்தலாம்.

டால்பி ஆடியோ ஆதரவு
ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ மாடல் OxygenPlay 2.0 2.0 வசதியைக் கொண்டுள்ளது. மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.
அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

தள்ளுபடி கிடைக்கும்..
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் ஈதர்நெட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் 5.0 போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.
OnePlus TV 55 Y1S Pro மாடலின் விலை ரூ.39,999-ஆக உள்ளது. பின்பு அமேசான், பிளிப்கார்ட், ஒன்பிளஸ்.இன் தளங்களில் வரும் டிசம்பர் 13-ம் தேதி வாங்க முடியும். மேலும் டிசம்பர் 25-ம் தேதி வரை தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.3000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470