ஏப்ரல் 14 வரை எந்த ஸ்மார்ட் டிவியும் வாங்காதீங்க: வருகிறது சூப்பரான OnePlus டிவி.!
கடந்த ஆண்டு ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் டிவி 43 Y1S மற்றும் ஒன்பிளஸ் டிவி 32 Y1S ஆகிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு இப்போதும் கூட நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus TV 40 Y1S மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது இந்த புதிய ஒன்பிளஸ் டிவி 40 Y1S மாடல் ஆனது வரும் ஏப்ரல் 14-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் அம்சங்கள் வெளிவந்துள்ளன. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது இந்த ஒன்பிளஸ் Y1S 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எல்இடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். பின்பு 1920 × 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, எச்டிஆர் 10 ஆதரவு, எச்எல்ஜி, உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஒன்பிளஸ் Y1S 40-இன்ச் ஸ்மார்ட் டிவியில் Gamma Engine ஆதரவு உள்ளது. குறிப்பாக இதன் மூலம் டைனமிக் கான்ட்ராஸ்ட், கலர் ஸ்பேஸ் மேப்பிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைப் பெறமுடியும். மேலும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது பெசல்-லெஸ் டிசைனுடன் பிரீமியம் தோற்றத்தை வழங்கும்.
64-பிட் மீடியாடெக் எம்டி9216 பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரும். பின்பு இந்த ஸ்மார்ட் டிவியில் OxygenPlay 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதள வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இந்த ஸ்மார்ட் டிவியில் நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸடோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் Y1S 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி வெளிவரும். பின்பு டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்.
வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல், ஈதர்நெட் எனப் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் டிவி 40 Y1S மாடல். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவி ரூ.21,999-விலையில் விற்பனைக்கு வரும். குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட், உள்ளிட்ட தளங்களில் இந்த ஸ்மார்ட் டிவி வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








