சலுகையுடன் OnePlus நிறுவனத்தின் முதல் டேப்லெட் வாங்க ரெடியா? விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியானது.!
ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் முதல் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக ஒன்பிளஸ் பேட் எனப்படும் புதிய டேப்லெட் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இந்நிலையில் ஒன்பிளஸ் டேப்லெட் மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியாகியுள்ளன.
அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் பேட்-ஐ ரூ.37,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.39,999-ஆக உள்ளது. குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர், ஒன்பிளஸ் ஆஃப்லைன் ஸ்டோர் உள்ளிட்ட பல தளங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும்.

வரும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் மாடலை வாங்க முடியும். சில குறிப்பிட்ட தளங்களில் வரும் மே 2-ம் தேதி முதல் இந்த ஒன்பிளஸ் பேட்-ஐ வாங்க முடியும். அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வாங்கும் பயனர்களுக்கு ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வாங்கும் பயன்களுக்கு இன்னும் பல சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும்.
இப்போது இந்த புதிய ஒன்பிளஸ் டேப் மாடலின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 2.5டி கர்வ்டு எட்ஜ் கிளாஸ் டிசைன் உடன் 11.61 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 144Hz வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 2800x2000 பிக்சல்ஸ், டால்பி விஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஒன்பிளஸ் பேட் வெளிவந்துள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 9000 ப்ராசஸர் வசதியைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த ப்ராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒன்பிளஸ் பேட் ஆனது 5ஜி கனெக்டிவிட்டியையும் (5G Connectivity) ஆதரிக்கிறது. இருப்பினும், இந்த டேப்லெட் செல்லுலார் கனெக்டிவிட்டி சப்போர்ட் (Cellular connectivity support) உடன் வராது.

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் பேட். மேலும் ஆக்ஸிஜென் 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
13எம்பி சிங்கிள் ரியர் கேமராவைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல். அதேபோல் 30fps வேகத்தில் 4கே வீடியோக்களை (4K Video) பதிவு செய்யும் திறன் கொண்டது இந்த ஒன்பிளஸ் டேப்லெட்.

9510எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் பேட். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். குறிப்பாக 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் பேட். மேலும் டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் டால்பி அட்மோஸை (Dolby Atmos) கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் வெளிவந்துள்ளது. அதேபோல் ஒன்பிளஸ் பேட் ஆனது ஹாலோ கிரீன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications