Home
Gadgets

ஆளுக்கு 2 வாங்கும் விலை.. 54 மணிநேர பேட்டரி, IP55, 3D ஆடியோ.. OnePlus-ன் புதிய பட்ஜெட் இயர்பட்ஸ்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை இயர்பட்ஸ் ஆக ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் (OnePlus Nord Buds 3r) மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. என்னென்ன அம்சங்கள்? என்ன விலை? எப்போது முதல் விற்பனை? அறிமுக சலுகை ஏதேனும் உண்டா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் விலை: ஆரா பிளாக் (Aura Blue) மற்றும் ஆஷ் பிளாக் (Ash Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் மாடல் ஆனது ரூ.1,799 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விற்பனையின் போது லிமிடட் டைம் ஆபர் ஆக ரூ.1,599 க்கு வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுக்கு 2 வாங்கும் விலை.. 54 மணிநேர பேட்டரி, IP55, 3D ஆடியோ!

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் விற்பனை மற்றும் சலுகை விவரங்கள்: ஒன்பிளஸ்-ன் புதிய நோர்ட் பட்ஸ் 3ஆர் மாடல் ஆனது வருகிற செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் ஒன்பிளஸ்.இன் (OnePlus.in), ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் (OnePlus Store App), அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும்.

மேலும் ஆன்லைன் வழியாக மிந்த்ரா (Myntra), க்ரோமா (Croma), ரிலையன்ஸ் (Reliance), விஜய் சேல்ஸ் (Vijay Sales), பாஜாஜ் எலெக்ட்ரானிக்ஸ் (Bajaj Electronics) மற்றும் ஆஃப்லைனில் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள் (OnePlus Experience Stores) வழியாகவும் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் வாங்க கிடைக்கும்

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் முக்கிய அம்சங்கள்: ஒன்பிளஸ்-ன் இந்த ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) ஹெட்செட் ஆனது சார்ஜிங் கேஸ் உட்பட மொத்தம் 54 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் சி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி55 ரேட்டிங்கையும் கொண்டுள்ளன.

கூடவே 12.4மிமீ டைட்டானியம் டைனமிக் டிரைவர்கள், ஏஐ ஆதரவு உடனான கால் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி உடனும் வருகிறது. மேலும் இந்த இயர்போன்கள் நிகழ்நேர ஏஐ மொழிபெயர்ப்பு மற்றும் 360-டிகிரி ஒன்பிளஸ் 3டி ஆடியோ மற்றும் பைண்ட் மை இயர்பட்ஸ் (Find My Earbuds) அம்சத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் விரிவான, முழு அம்சங்கள்:
- 12.4மிமீ டைட்டானியம்-கோடட் டிரைவர்ஸ்
- மூன்று ப்ரீசெட் இக்யூ (EQ) மோட்கள்
- சவுண்ட் மாஸ்டர் இக்யூ (Sound Master EQ) அம்சத்தை பயன்படுத்தி கஸ்டமைஸ் செய்யக்கூடிய சிக்ஸ்-பேண்ட் ஈக்வலைஸர்

- ஒன்பிளஸ் 3டி ஆடியோவை ஆதரவு - இது ஒரு அதிவேக 360-டிகிரி சவுண்ட்ஸ்டேஜை வழங்குவதாக கூறப்படுகிறது.
- ஏஐ ஆல் ஆதரிக்கப்படும் டூயல் மைக் அமைப்புடன், இது தெளிவான கால்களுக்கு சுற்றுச்சூழலில் உள்ள இரைச்சலை ரத்து செய்யும் திறன்கொண்டதாக உள்ளது

- ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் கூகுள் பாஸ்ட் பேர் (Google Fast Pair) கனெக்டிவிட்டி
- டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி
- பில்ட்-இன் கேமிங் மோட்-ஐ பயன்படுத்தும் போது 47ms வரை லோ லேடன்சி
- டேப் சைகை மூலம் வாய்ஸ் அசிஸ்டன்ட் உடன் கனெக்ட் ஆகும் ஆதரவு
- சப்போர்ட் உள்ள ஸ்மார்ட்போன்களில் நிகழ்நேர ஏஐ மொழிபெயர்ப்பு

- டேப் 3 டேக் (Tap 2 Take) அம்சத்துடன் புகைப்படங்களை எடுக்கலாம் (டபுள் டேப்)
- பைண்ட் மை இயர்பட்ஸ் (Find My Earbuds) அம்சமானது தவறான இடத்தில் வைக்கப்பட்ட பட்ஸ்-ஐ கண்டறிய உதவும்.
- சார்ஜிங் கேஸுடன் சேர்த்து 54 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- TÜV Rheinland பேட்டரி ஹெல்த் சான்றிதழ்
- (இயர்போன்ஸ்-க்கு மட்டுமான) தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP55 ரேட்டிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
New OnePlus Earbuds OnePlus Nord Buds 3r Launched in India Price Features Sale From September 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X