மொத்த இந்தியாவும் வாங்குமே.. 8.8-இன்ச் டிஸ்பிளே + 8000mAh பேட்டரி உடன் புது OnePlus மினி டேப்லெட்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் மிகவும் சமீபத்தில் தான் அதன் லேட்டஸ்ட் டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் 4 (OnePlus Pad 4) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போது கூடிய, விரைவில் இன்னொரு காம்பாக்ட் / மினி டேப்லெட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஒன்பிளஸ் நிறுவனமானது, இந்தியாவில் பிரீமியம் பிளாக்ஷிப் மற்றும் பட்ஜெட் போன்ற பல்வேறு விலைப்பிரிவுகளுக்கு ஏற்றவாறு பல டேப்லெட்டுகளை கொண்டுள்ளது. ஒரு புதிய மினி டேப்லெட் மூலம், ஸ்மால் ஸ்க்ரீன் கொண்ட டேப்லெட்டை விரும்பும் வாடிக்கையாளர்களையும் ஈர்க்க விரும்புவது போல் தெரிகிறது.

ஒன்பிளஸ் காம்பாக்ட் டேப்லெட் எப்போது அறிமுகமாகும்? எக்ஸ் (X) தளத்தில், டிப்ஸ்டர் டெபயனின் வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி, ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கொண்ட 8.8-இன்ச் ஓஎல்இடி டேப்லெட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த டேப்லெட் இந்தியாவில் மூன்றாம் காலாண்டில், அதாவது ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை எந்தவொரு காம்பாக்ட் டேப்லெட்டையும் அறிமுகம் செய்ததில்லை. இப்போதைக்கு இந்நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் மிகச்சிறிய டிஸ்பிளேவை கொண்ட டேப்லெட் 11-இன்ச் ஒன்பிளஸ் பேட் லைட் (OnePlus Pad Lite) மாடல் தான். இதையும், புதிய மாடலையும் ஒன்றாக வைத்து பார்க்க மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
லீக் ஆன விவரங்களின் அடிப்படையில், வரவிருக்கும் புதிய மினி / காம்பாக்ட் ஒன்பிளஸ் டேப்லெட் ஆனது, கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ பேட் மினி (OPPO Pad Mini) டேப்லெட் மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக (rebrand) இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த லீக்உண்மையாக இருந்தால், ஸ்க்ரீன் அளவும், சிப்செட்டும் ஒரே மாதிரியாக இருக்கும். இதில் (ஒன்பிளஸ் ஒரு ஒப்போ டேப்லெட்டை அறிமுகப்படுத்துவதில்) இந்தத் ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இந்த உத்தி இரு பிராண்டுகளுக்கும் இடையே பொதுவானது தான். இதன் அடிப்படையில் ஒன்பிளஸ் காம்பாக்ட் டேப்லெட்டில் கீழ்வரும் அம்சங்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது:
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 8.8-இன்ச் 2.5கே ஓஎல்இடி டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்
- 13MP ரியர் கேமரா
- 8MP செல்பீ கேமரா
- 8000mAh பேட்டரி
- 67W ஃபாஸ்ட் சார்ஜிங்
சீனாவில் அறிமுகமான ஒப்போ பேட் மினி ஆனது அதன் கச்சிதமான வடிவமைப்பிற்காக மட்டுமல்லாமல், அதன் திறமையான ஹார்டுவேருக்காகவும் தனித்து நிற்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5, இதை ஒரு முதன்மை நிலை செயல்திறன் கொண்ட சக்திவாய்ந்த டேப்லெட்டாக மாற்றுகிறது. இதன் டிஸ்பிளேவும், கச்சிதமாக இருந்தாலும், 144ஹெர்ட்ஸ்ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 2.5K OLED பேனலாகும், இது டேப்லெட்டுகளில் அரிதான ஒன்றாகும். டேப்லெட்டின் ஒட்டுமொத்த அளவைக் கருத்தில் கொள்ளும்போது, 8000mAh பேட்டரி ஒரு கணிசமான கொள்ளளவாகும்.
ஒன்பிளஸ் நிறுவனம் மேற்கண்ட அம்சங்களுடன் ஒரு காம்பாக்ட் ஆன டேப்லெட்டை அறிமுகப்படுத்தினால், அது 8.3-இன்ச் டிஸ்பிளே கொண்ட ஆப்பிளின் ஐபேட் மினியுடன் நேரடியாக போட்டியிடும். இது, குறிப்பாகப் படிப்பதற்கும், கன்டென்ட்களை பார்ப்பதற்கும், மற்றும் சாதாரண பயன்பாட்டிற்கும் ஒரு கச்சிதமான டேப்லெட்டை விரும்பும் நபர்களுக்கு, ஐபேட் மினிக்கு ஒரு சிறந்த ஆண்ட்ராய்டு மாற்றாக ஒன்பிளஸ் டேப்லெட்டை மாற்றும். இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், நீங்கள் ஒரு சிறிய டேப்லெட்டை வாங்க விரும்பினால், சிறிது காலம் காத்திருப்பது ஒரு நல்ல யோசனையாக இருக்கலாம்.
ஒப்போ இன்னொரு புதிய மினி டேப்லெட்டை அறிமுகம் செய்யவுள்ளது: இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதியிலோ அல்லது மூன்றாம் காலாண்டிலோ ஒப்போ நிறுவனமும் இந்தியாவில் ஒரு டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக. ஒப்போவின் இந்த டேப்லெட் ஒன்பிளஸ் மினி டேப்லெட்டை போலவே இருக்கும், ஆனால் வேறுபட்ட சிப்செட்டுடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications