Home
Gadgets

1-க்கு 2-ஆ வாங்கலாமே! வெறும் ரூ.899-க்கு 30 மணிநேர பேட்டரி, ENC, 360 டிகிரி சரவுண்ட் சவுண்ட், IPX5 ரேட்டிங்!

2025 ஆம் ஆண்டு தொடங்கியதும் ஐடெல் நிறுவனம் தொடர்ச்சியான முறையில் புதிய அறிமுகங்களை செய்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் ஐடெல் ஏ80 (Itel A80) மற்றும் ஐடெல் ஸெனோ 10 (Itel Zeno 10) என்கிற 2 புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

தற்போது ஐடெல் பிராண்ட் தனது புதிய டிடபுள்யூஎஸ் (TWS - True Wireless Stereo) இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. அது ஐடெல் எஸ்9 அல்ட்ரா இயர்பட்ஸ் (itel S9 Ultra earbuds) ஆகும். ஐடெல் ஸெனோ 10 ஸ்மார்ட்போனை போலவே இந்த புதிய இயர்பட்ஸும் ஜென்-ஸீ வாடிக்கையாளர்களை (Gen-Z Customers) மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ரூ.899-க்கு 30 மணிநேர பேட்டரி, ENC, 360 டிகிரி சரவுண்ட் சவுண்ட்!

ப்ளூடூத் 5.3 ஆதரவு (Bluetooth 5.3 Support), 30 மணிநேர பேட்டரி லைஃப், ஏஐ அடைப்படையிலான இஎன்சி (AI ENC) ஆதரவு, 360 டிகிரி சரவுண்ட் சவுண்ட், ஐபிஎக்ஸ்5 ரேட்டிங் மற்றும் பல முக்கிய அம்சங்களுடன் வரும் ஐடெல் எஸ்29 அல்ட்ரா இயர்பட்ஸ் விரிவான அம்சங்கள், விலை நிர்ணயம், கலர் ஆப்ஷன்கள் குறித்த விவரங்கள் இதோ:

ஐடெல் எஸ்9 அல்ட்ரா இயர்பட்ஸ் விரிவான அம்சங்கள்: ஐடெல்லின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸ் ஆனது பேர்லசன்ட் பினிஷ் (Pearlescent finish) மற்றும் டூயல்-டோன் டிசைன் (Dual-tone design) உடன் வருகிறது. இந்த ஃபுல்-இன்-இயர் இயர்பட்களில் (Full-in-ear earbuds) பொருத்தப்பட்டுள்ள 10 மிமீ டிரைவர்கள் ஆனது ஆழமான பாஸ்-ஐ (Deep BASS) வழங்குகிறது மற்றும் இதன் 360 டிகிரி சரவுண்ட் சவுண்ட் (360-degree surround sound) ஆனது அதிவேக ஆடியோ அனுபவத்தை உறுதி செய்கிறது

ஐடெல் எஸ்9 அல்ட்ரா இயர்பட்ஸில் ஏஐ இஎன்சி ஆதரவு உள்ளது. கூடவே டூயல் மைக்ரோஃபோன்களும் (Dual Microphones) உள்ளன. இவ்விரண்டும் சேர்ந்து பேக்கிரவுண்ட் நாய்ஸ்களை பில்டர் (Filter Background Noises) செய்து தெளிவான போன் கால்களை வழங்கும். மேலும் இதன் ப்ளூடூத் 5.3 கனெக்ட்விட்டி ஆனது வேகமான மற்றும் நிலையான இணைப்பை உறுதி செய்கிறது.

டச் கண்ட்ரோல்கள் (Touch Controls) மற்றும் வாய்ஸ் ஆக்டிவேஷன் (Voice Activation) ஆகிய வசதிகளை கொண்டுள்ள ஐடெல் எஸ்9 அல்ட்ரா இயர்பட்ஸ் ஆனது ஐபிஎக்ஸ்5 ரேட்டிங்கையும் (IPX5 Rating) கொண்டுள்ளது. இது வியர்வை மற்றும் லேசான நீர் தெறிப்புகளுக்கு (sweat and light splashes) எதிராக செயல்படும்.

பேட்டரியை பொறுத்தவரை ஒவ்வொரு பட்டிலும் 28mAh பேட்டரி உள்ளன மற்றும் இதன் கேஸில் 400mAh பேட்டரி உள்ளது. ஐடெல் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த இயர்பட்ஸ் மொத்தம் 30 மணிநேரம் வரையிலான பிளேடைமை (Total 30 Hrs Playtime) வழங்குகின்றன. அதாவது இது நாள் முழுவதும் நம்பகமான செயல்திறனை வழங்கும். இது டைப்-சி சார்ஜிங் போர்ட் உடன் பாஸ்ட் சார்ஜிங் திறன்களையும் கொண்டுள்ளது.

ஐடெல் எஸ்9 அல்ட்ரா இயர்பட்ஸ் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ரூ.899 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் எஸ்9 அல்ட்ரா இயர்பட்ஸ் ஆனது ஸ்டைல் ​​மற்றும் செயல்பாட்டின் (Style and Performance) சமநிலையை விரும்புவோருக்கான ஒரு மலிவான விருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்

ஐடெல் எஸ்9 அல்ட்ரா இயர்பட்ஸ் ஆனது நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகளின் வழியாக வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜென்-ஸீ வாடிக்கையாளர்களை இலக்காக கொண்ட இந்த இயர்பட்ஸ் 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: ஸ்பேஸ் க்ரே (Space Gray) மற்றும் டாஸில் பிளாக் (Dazzle Black). கடைசியாக, இது 1 வருட உத்தரவாத ஆதரவுடன் (1-year warranty support) வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New itel S9 Ultra earbuds with 30 hours battery AI ENC IPX5 Rating Launched in India Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X