Home
Gadgets

13 இன்ச் டிஸ்பிளே.. எம்2 சிப்.. லேண்ட்ஸ்கேப் கேமரா.. வெளியானது நியூ ஐபாட் ஏர் டேப்லெட்.. விலை எப்படி?

ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்வில் (Apple Let Loose Event) 13 இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்பிளே, ஸ்பாஷியல் ஆடியோ, எம்2 சிப் போன்ற பீச்சர்களுடன் நியூ ஐபாட் ஏர் (New iPad Air) வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்வில் நியூ ஐபாட் ஏர், நியூ ஐபாட் ப்ரோ (iPad Pro), நியூ ஆப்பிள் பென்சில் ப்ரோ (New Apple Pencil Pro) மற்றும் ஆப்பிள் எம்4 சிப் (Apple M4 Chip) ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இதில் 13 இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்பிளேவுடன் நியூ ஐபாட் ஏர் கவனம் பெற்றுள்ளது.

13 இன்ச் டிஸ்பிளே.. எம்2 சிப்.. லேண்ட்ஸ்கேப் கேமரா.. நியூ ஐபாட் ஏர்!

நியூ ஐபாட் ஏர் அம்சங்கள் (New iPad Air Specifications): இந்த ஐபாட் மாடலில் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் டிஸ்பிளே கொண்ட 2 வேரியண்ட்களில் வெளியாகி இருக்கின்றன. லிக்விட் ரெடினா டிஸ்பிளே (Liquid Redina Display) கொண்டுள்ளது. ஏர் மாடல்களிலேயே இந்த 13 இன்ச் மிகப்பெரிய டிஸ்பிளே மாடலாகும்.

ஓஎல்இடி டிஸ்பிளே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவே கொடுக்கப்பட்டுள்ளது. ஐபாட் ஓஎஸ் (iPadOS) மற்றும் எம்2 சிப் (M2 Chip) கொண்டிருக்கிறது. இது எம்1 சிப்பைவிட 50 சதவீதம் ஃபாஸ்டர் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும். அதேபோல ஏ2 பயோனிக் சிப்பைவிட 3 மடங்கு அதிக பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.

ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) வருகிறது. 12 எம்பி லேண்ட்ஸ்கேப் செல்பீ கேமரா மற்றும் 12 எம்பி ரியர் கேமரா வருகிறது. டச் ஐடி (Touch ID) கொண்டிருக்கிறது. இந்த நியூ ஐபாட் ஏர் மாடலின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 6ஈ (Wi-Fi 6E) மற்றும் 5ஜி கொண்டிருக்கிறது.

13 இன்ச் டிஸ்பிளே.. எம்2 சிப்.. லேண்ட்ஸ்கேப் கேமரா.. நியூ ஐபாட் ஏர்!

அதேபோல மேஜிக் கீபோர்ட் (Magic Keyboard) மற்றும் ஆப்பிள் பென்சில் (Apple Pencil) சப்போர்ட்டும் கொண்டிருக்கிறது. நியூ ப்ளூ (Blue), நியூ பர்பிள் (New Purple), ஸ்டார்லைட் (Starlight) மற்றும் ஸ்பேஸ் கிரே (Space Gray) ஆகிய 4 கலர்களில் வெளியாகி இருக்கிறது.

இந்த நியூ ஐபாட் ஏர் மாடலில் 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஆகிய 4 ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. 11 இன்ச் வேரியண்ட் 599 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.49,996) ஆரம்ப விலையிலும், 13 இன்ச் வேரியண்ட் 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.66,689) ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு வர இருக்கின்றன.

இப்போது, ப்ரீ ஆர்டர் தொடங்கி இருக்கிறது. அடுத்த வாரத்தில் இருந்து விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நியூ ஐபாட் ஏர் மாடலானது, 6ஆவது ஜெனரேஷன் வெர்ஷனாக இருந்தாலும், முந்தைய மாடல்களை போலவே பிளாட் ஃப்ரேம், டாப் டச் ஐடி பட்டன் டிசைனையே கொண்டுள்ளது.

இருப்பினும், செல்பீ கேமரா வலது புறம் நகர்த்தி பில்ட் செய்யப்பட்டுள்ளது. இது டேப்லெட்டை லேண்ட்ஸ்கேப் பயன்பாட்டுக்கு மாற்ற செய்யப்பட்டுள்ளது. ஆகவே, எம்2 சிப், 13 இன்ச் டிஸ்பிளே மற்றும் லேண்ட்ஸ்கேப் கேமரா இந்த புதிய ஐபாட் ஏர் மாடலில் புதிதாக இருக்கிறது. இந்திய விலை விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New iPad Air Launched With M2 Chip, 128GB Storage Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X