ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 24W ஸ்பீக்கர்கள் உடன் கம்மி விலையில் புதிய 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!
TCL இன் iFFALCON பிராண்ட் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது iFFALCON எஸ்53 32-இன்ச் ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் அறிமுகம் செய்துள்ளது iFFALCON நிறுவனம். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவி தனித்துவமான வடிவமைப்புடன் அசத்தலான அம்சங்களை வழங்குகிறது.
தற்போது இந்திய சந்தையில் சியோமி, ஒன்பிளஸ் ஸ்மர்ரட் டிவிகளை போன்று இந்த iFFALCON ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது புதிய iFFALCONஎஸ்53 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது iFFALCON எஸ்53 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு எச்டிஆர் ஆதரவு, 230 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
குவாட்-கோர் 64-பிட் பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய iFFALCON எஸ்53 32-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் இந்த பிராசஸர் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த புதிய டிவி ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது புதிய iFFALCON எஸ்53 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். பின்பு இதற்குத் தகுந்தபடி வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட்.
டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டு இந்த புதிய iFFALCON எஸ்53 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். பின்பு இந்த ஸ்மார்ட் டிவியில் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன்புட், ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு இந்த புதிய iFFALCON எஸ்53 32-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் பெசல்-லெஸ் டிசைன் மற்றும் ஃபுல் எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளதால் இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.

புதிய iFFALCON எஸ்53 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அறிமுக சலுகையாகத் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்ட இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
iFFALCON பிராண்ட் விரைவில் 55-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவி பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அசத்தலான அம்சங்களுடன் இந்நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications