எங்க சுத்தினாலும் இங்க தான் வரணும் பாணியில்.. ஒரே நேரத்தில் 9 புது HP லேப்டாப் அறிமுகம்.. Model, Price லிஸ்ட்!
பிரபல லேப்டாப் பிராண்டுகள் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் புதிய லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக ஆசஸ் மற்றும் எச்பி நிறுவனங்கள். இந்த வரிசையில் எச்பி நிறுவனம் அதன் ஆம்னிபுக் 5 லேப்டாப் சீரீஸை (HP OmniBook 5 Laptop Series) தொடர்ந்து மேலும் பல மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
எச்பி நிறுவனம் தனது எலைட்புக் (EliteBook), ப்ரோபுக் (ProBook) மற்றும் ஆம்னிபுக் (OmniBook) சீரிஸ் லேப்டாப்களின் லேட்டஸ்ட் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எச்பி எலைட்புக் மற்றும் ப்ரோபுக் சீரீஸ்-ன் கீழ் எச்பி எலைட்புக் 8 (G1i, G1a), எச்பி எலைட்புக் 6 (G1q G1a), மற்றும் எச்பி ப்ரோபுக் 4 G1q மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

எச்பி ஆம்னிபுக் சீரிஸில் ஆம்னிபுக் அல்ட்ரா 14, ஆம்னிபுக் 5 16, ஆம்னிபுக் 7 ஏரோ 13, மற்றும் ஆம்னிபுக் எக்ஸ் பிளிப் 14 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எச்பி நிறுவனத்தின் இந்த புதிய கோபைலட் பிளஸ் பிசிக்கள், சமீபத்திய இன்டல் கோர் அல்ட்ரா 200 வி சீரீஸ், ஏஎம்டி ரைசென் ஏஐ 300 சீரீஸ் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ் சீரிஸ் ப்ராசஸர்களால் இயக்கப்படுகின்றன.
எச்பி எலைட்புக் 8 (G1i, G1a), எச்பி எலைட்புக் 6 (G1q G1a), மற்றும் எச்பி ப்ரோபுக் 4 G1q விலை விவரங்கள்:
எச்பி எலைட்புக் 8 ஆரம்ப விலை - ரூ.1,46,622
எச்பி எலைட்புக் 6 G1q ஆரம்ப விலை - ரூ.87,440
எச்பி ப்ரோபுக் 4 G1q ஆரம்ப விலை - ரூ.77,200
எச்பி எலைட்புக் 8 G1a மற்றும் எச்பி எலைட்புக் 67 G1a க்கான விலை இன்னும் வெளியிடப்படவில்லை
எச்பி ஆம்னிபுக் அல்ட்ரா 14, ஆம்னிபுக் 5 16, ஆம்னிபுக் 7 ஏரோ 13, மற்றும் ஆம்னிபுக் எக்ஸ் பிளிப் 14 விலை விவரங்கள்:
எச்பி ஆம்னிபுக் அல்ட்ரா 14 - விலை ரூ.1,86,499
எச்பி ஆம்னிபுக் எக்ஸ் பிளிப் 14 - விலை ரூ.1,14,999
எச்பி ஆம்னிபுக் 7 ஏரோ 13 - விலை ரூ.87,499
எச்பி ஆம்னிபுக் 5 16 - ரூ.78,999
முன்னதாக எச்பிஓ ஆம்னிபுக் 5 லேப்டாப் சீரீஸ்-ன் கீழ் 2 மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ஏஎம்டியின் ரைஸன் ஏஐ 300 சீரீஸ் சிப்கள் (AMD Ryzen AI 300 Series) சிப்கள் உள்ளன. ஒன்று - ரைஸன் ஏஐ 5 340 (Ryzen AI 5 340) மாடல் ஆகும். இதன் விலை ரூ.75,990 ஆகும். இன்னொன்று ரைஸன் ஏஐ 7 350 (Ryzen AI 7 350) மாடல் ஆகும். இதன் விலை ரூ.87,990 ஆகும்.
இதற்கும் முன்பாக எச்பி எலைட்புக் சீரீஸின் கீழ் 4 புதிய லேப்டாப் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன:
1. 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஏ (HP EliteBook X G1a)
2. 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஐ (HP EliteBook X G1i)
3. 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் பிளிப் ஜி1ஐ (HP EliteBook X Flip G1i)
4. 14-இன்ச் எச்பி எலைட்புக் அல்ட்ரா ஜி1ஏ (HP EliteBook Ultra G1i)
எச்பி எலைட்புக் சீரீஸ் லேப்டாப் மாடல்களின் விலை விவரங்கள்: 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஏ (HP EliteBook X G1a Price in India) ஆனது இந்தியாவில் ரூ 2,21,723 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஐ (HP EliteBook X G1i Price in India) இந்தியாவில் ரூ 2,22,456 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் பிளிப் ஜி1ஐ (HP EliteBook X Flip G1i Price in India) இந்தியாவில் ரூ 2,58,989 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 14-இன்ச் எச்பி எலைட்புக் அல்ட்ரா ஜி1ஏ (HP EliteBook Ultra G1i Price in India) இந்தியாவில் ரூ 2,67,223 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து புதிய லேப்டாப் மாடல்களுமே ஹெச்பி ஆன்லைன் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








