46 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச்: விலையை சொன்னா நம்புவீங்களா?

|

தற்போது உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களை விட ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது பல்வேறு சிறப்பான சேவைகளை வழங்குகிறது ஸ்மார்ட்வாட்ச். எனவே தான் தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கார்மின் எண்டியுரோ 2

கார்மின் எண்டியுரோ 2

இந்நிலையில் கார்மின் என்ற நிறுவனம் கார்மின் எண்டியுரோ 2 எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் நாம் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

ஹையோ! மவுஸாப்பா இது.. பார்த்தாலே தொட தோணுதே.! புது ASUS MD100 Marshmallow விலை என்ன?ஹையோ! மவுஸாப்பா இது.. பார்த்தாலே தொட தோணுதே.! புது ASUS MD100 Marshmallow விலை என்ன?

கார்மின் எண்டியுரோ 2 அம்சங்கள்

கார்மின் எண்டியுரோ 2 அம்சங்கள்

கார்மின் எண்டியுரோ 2 ஸ்மார்ட்வாட்ச் ஆனது தற்போது அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும்அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மலை ஏறுதல், நீச்சல், ஓட்டம், ஹைக்கிங் என சாகசங்கள் நிறைந்த விளையாட்டுகளின் போது பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான்
இந்த கார்மின் எண்டியுரோ 2 ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இது சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. வேற லெவல் போன்! Xiaomi MIX Fold 2 அறிமுகம் தேதி இது தான்!இது சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. வேற லெவல் போன்! Xiaomi MIX Fold 2 அறிமுகம் தேதி இது தான்!

தனித்துவமான வடிவமைப்பு

தனித்துவமான வடிவமைப்பு

தற்போது அறிமுகமான கார்மின் எண்டியுரோ 2 ஸ்மார்ட்வாட்ச் ஆனது குறைந்த எடை கொண்ட டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

பின்பு டச் ஸ்கிரீன் மற்றும் சஃபயர் லென்ஸ் பாதுகாப்பு, நைலான் பேண்ட் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த எண்டியுரோ 2 ஸ்மார்ட்வாட்ச் மாடல்.எனவே இது ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 46 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள பேட்டரி லைஃப்-ஐ ஜிபிஎஸ் மோடில் 150 மணி நேரம் வரை அதிகரித்துக் கொள்ளலாம் என்பது
குறிப்பிடத்தக்கது.

போன்கள் மீது 25% முதல் 50% வரை தள்ளுபடி: டாப் பெஸ்ட் Amazon சலுகை இது தான்! மிஸ் பண்ணாம பாருங்க!போன்கள் மீது 25% முதல் 50% வரை தள்ளுபடி: டாப் பெஸ்ட் Amazon சலுகை இது தான்! மிஸ் பண்ணாம பாருங்க!

 சன் சார்ஜிங்

சன் சார்ஜிங்

புதிய கார்மின் எண்டியுரோ 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலில் சன் சார்ஜிங் மற்றும் SatIQ தொழில்நுட்ப வசதியும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பில்ட்-இன் எல்இடி பிளாஷ்லைட் உள்ளது. இதை அவசரக் காலத்தில் பயன்படுத்தலாம்.

IRCTC அலர்ட்: இனி பெர்த் காலியாக இருந்தால் உடனே இன்ஸ்டன்ட் புக்கிங் செய்யலாமா? எப்படி?IRCTC அலர்ட்: இனி பெர்த் காலியாக இருந்தால் உடனே இன்ஸ்டன்ட் புக்கிங் செய்யலாமா? எப்படி?

பேஸ் ஆப்ஷன்

பேஸ் ஆப்ஷன்

மேலும் கார்மின் எண்டியுரோ 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலில் டோபோ ஆக்டிவ் மேப்ஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர விஷூவல் ரேஸ் பிரெடிக்டர், நெக்ஸ்ட் ஃபோர்க், கிரேடு-அட்ஜஸ்ட் செய்யப்பட்ட பேஸ் ஆப்ஷன் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச்.

Ai ரோபோவுடன் மியூசிக் கம்போஸ் செய்த ஏ.ஆர். ரஹ்மான்! ஹை-டெக் அனுபவம் எப்படி இருந்தது?Ai ரோபோவுடன் மியூசிக் கம்போஸ் செய்த ஏ.ஆர். ரஹ்மான்! ஹை-டெக் அனுபவம் எப்படி இருந்தது?

மியூசிக் ஸ்டோரேஜ்

மியூசிக் ஸ்டோரேஜ்

முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இருக்கும் பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கார்மின் எண்டியுரோ 2 ஸ்மார்ட்வாட்ச். அதாவது ஹார்ட் ரேட், பாடி பேட்டரி, பிட்னஸ் ஏஜ், ஸ்டிரெஸ், SpO2, ஸ்லீப் டிராக்கிங் போன்ற அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

50எம்பி கேமராவுடன் களமிறங்கும் Moto G62 போன்: எப்போது அறிமுகம் தெரியுமா?50எம்பி கேமராவுடன் களமிறங்கும் Moto G62 போன்: எப்போது அறிமுகம் தெரியுமா?

 என்ன விலை?

என்ன விலை?

அதேபோல் கார்பின் பே, இன்சிடெண்ட் டிடெக்‌ஷன் மற்றும் மியூசிக் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த கார்மின் எண்டியுரோ 2 ஸ்மார்ட்வாட்ச். புதிய கார்மின் எண்டியுரோ 2 மாடலின் விலை 1,099.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.87,511).

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New flagship smartwatch Garmin Enduro 2 launched Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X