Home
Gadgets

ரஃபேல் ஸ்பெஷல் எடிஷன்-ஐ விடுங்க மக்களே.! தரமான வசதிகளுடன் அறிமுகமான புதிய smartwatch-ஐ பாருங்க.!

தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது ரஃபேல் ஸ்பெஷல் எடிஷன் வாட்ச். உண்மையாகவே ரஃபேல் விமான பாகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கடிகாரம் தானா? இதன் விலை என்ன? போன்ற கேள்விக்கான பதில்கள் கூகுளில் (Google) தேடப்பட்டு வருகிறது. ஆனால் ரஃபேல் விமானத்தின் பாகங்கள் இந்த வாட்சில் உள்ளது என்பது தொடர்பான சரியான விவரங்கள் எங்கும் இல்லை. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் பிரபலமான ஃபிட்ஷாட் நிறுவனம் அனைத்து மக்களும் பயன்படுத்தகூடிய வகையில் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை கம்மி விலையில் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ஃபிட்ஷாட் நிறுவனம் இந்தியாவில் மகளிருக்கான தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஃபிட்ஷாட் ஃபிளேர் என்று அழைக்கப்படும் என்று புதிய ஸ்மார்ட்வாட்ச் அருமையான வடிவமைப்புடன் தரமான அம்சங்களை வழங்குகிறது என்றே கூறலாம். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நினைச்சு பார்க்க முடியாத அம்சங்களுடன் அறிமுகமான புதிய ஸ்மார்ட்வாட்ச்.!

அதாவது ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் பாங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு 1.43-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச். பின்பு 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது புதிய ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் இததில் டேலைட் ஸ்கிரீன், 60-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், UV சென்சார்கள் ஆதரவுடன் இந்த ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இதில் உள்ள UV சென்சார்கள் பயனர்களுக்கு UV பற்றி எச்சரிக்கை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரியனின் UV இண்டெக்ஸ் பயன்படுத்தி பயனர்கள் தொப்பி, கண் கண்ணாடி அணிந்து கொள்ள பரிந்துரைக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் பெண்களுக்கு தேவையான வெல்னஸ் டிராக்கர் போன்றும் செயல்படுகிறது. மேலும் இதில் இதய துடிப்பு, உடல் வெப்பநிலை, SpO2, UV லைட், மென்ஸ்டுரேஷன் டிராக்கர் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் அனைத்து மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இதுதவிர கால் ரிமைண்டர்கள், ஷெட்யுல் ரிமைண்டர்கள், அலாரம், நோட்டிபிகேஷன், ஆப் புஷ் ரிமைண்டர்கள் போன்ற பல அட்டகாசமான வசதிகளை கொண்டுள்ளது இந்த ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் பயனர்களுக்கு வழங்கும் அழைப்புகள் அல்லது குறுந்தகவல் போன்றவற்றிக்கு இதில் உள்ள குயிக் மெசேஜ் அம்சம் முதல் பதில் அளிக்க முடியும்.

இந்த ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் மிகவும் சிறப்பான வசதி என்னவென்றால் அது பேட்டரி வசதிதான். அதாவது 300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இதை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக சிறந்த பேட்டரி பேக்கப் வழங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

புதிய ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் மாடல் பின்க், புளூ மற்றும் கிரீன் ஆகிய நிறங்களில கிடைக்கிறது. பினபு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்வாட்ச் மாடலை ரூ.1,999-விலையில் வாங்க முடியும். இதுதவிர ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஃபிட்ஷாட் நிறுவனம் அடுத்த வருடம் தொடக்கத்தில் பல்வேறு அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
New Fitshot Flair smartwatch with 10-day battery life launched in India: check Price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X