Home
Gadgets

இதை விட கம்மி விலையில் புதிய Fastrack ஸ்மார்ட்வாட்ச் கிடைக்காது.! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியாவில் தற்போது ஸ்மார்ட்போன்கள் போன்றே அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஃபாஸ்டிராக் நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ஃபாஸ்டிராக் நிறுவனம் இப்போது புதிய லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இதை விட கம்மி விலையில் புதிய Fastrack  ஸ்மார்ட்வாட்ச் கிடைக்காது.!

புதிய ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.95-இன்ச் ஹாரிசான் கவர் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 240x296 பிக்சல் ரெசல்யூஷன், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அடுத்த தலைமுறை ஏடிஎஸ் சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம். பின்பு ப்ளூடூத் 5.3 வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக் ஆதரவைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த புதிய ஸ்மார்வாட்ச் ஆனது சிங்கில் சின்க் ப்ளூடூத் காலிங் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 150 அதிகமான வாட்ச் ஃபேஸ்கள் ஆதரவு மற்றும் 100-க்கு அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் பிஸி௧ ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

இதை விட கம்மி விலையில் புதிய Fastrack  ஸ்மார்ட்வாட்ச் கிடைக்காது.!

ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உடல்நல டிராகிங் அம்சங்களான ஸ்டிரெஸ் டிராகிங், ஸ்லீப் டிராகிங் மற்றும் 24x7 ஹார்ட் ரேட் டிராகிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. கண்டிப்பாக இந்த உடல்நல டிராகிங் அம்சங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். அதேபோல் மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை தனித்துவமான அம்சங்கள் மற்றும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பில்ட்-இன் அலெக்சா சப்போர்ட் வசதி உள்ளது. மேலும் ஹெல்த் சூட் மற்றும் ஃபாஸ்டிராக் ரிப்லெக்ஸ் வொர்ல்டு ஆப் அணுகலைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல். குறிப்பாக பிளாக், புளூ மற்றும் பின்க் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

இதை விட கம்மி விலையில் புதிய Fastrack  ஸ்மார்ட்வாட்ச் கிடைக்காது.!

இந்த ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 300 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த ஸ்மாரட்வாட்ச் மாடலை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஃபாஸ்டிராக் லிமிட்லெஸ் FS1 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.1995-ஆக உள்ளது. அமேசான் தளத்தில் ஏப்ரல் 11-ம் தேதி இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Fastrack Limitless FS1 Smartwatch Launched in India at Low Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X