40 மணிநேரம் பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் நெக்பேண்ட் இயர்பட்ஸ் அறிமுகம்: குறைந்த விலை.!
மிகவும் பிரபலமான விங்ஸ் நிறுவனம் இந்தியாவில் பேண்டம் 210 எனும் பெயரில் புதிய நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது.

விங்ஸ் நிறுவனம்
இந்த புதிய இயர்பட்ஸ் ஆனது டூயல் பேரிங் 50ms லேக்-ஃபிரீ ஆடியோ சின்க், 40 மணி பேட்டரி பேக்கப் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த இயர்பட்ஸ் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விங்ஸ் நிறுவனம்.

குறைந்த எடை
அதேபோல் விங்ஸ் பேண்டம் 210 மாடல் ஆனது குறைந்த எடையுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது. பின்பு இந்த இயர்பட்ஸ் IPX5 கேசிங் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலிகான் மற்றும் ABS பிளாஸ்டிக்
மேலும் இந்த புதிய இயர்பட்ஸ் மாடல் மென்மையான சிலிகான் மற்றும் ABS பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இயர்பட்ஸ்-இன் இரு இயர்பட்களிலும் 13 மில்லிமீட்டர் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இயர்போனில் எல்இடி ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் V5.3 சிப்
ப்ளூடூத் V5.3 சிப் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த பேண்டம் 210 மாடல். இது அதிவேக டூயல் பேரிங் வசதியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இது 15 மீட்டர்கள் வரை சீரான கனெக்டிவிட்டியை உறுதிப்படுத்துகிறது.

நாய்ஸ் கேன்சலேஷன்
விங்ஸ் பேண்டம் 210 இயர்பட்ஸ் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகிறது. குறிப்பாக இந்த இயர்பட்ஸ் சிறந்த ஆடியோ அனுபவத்தைக் கொடுக்கும் என நிறுவனம் கூறுகிறது.

40 மணி நேரம் பேட்டரி பேக்கப்
இந்த விங்ஸ் பேண்டம் 210 இயர்பட்ஸ் மாடலின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால், அது பேட்டரி பேக்கப் தான். அதாவது இயர்போன் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த இயர்பட்ஸ் மாடலுக்கு யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

விலை?
புதிய விங்ஸ் பேண்டம் 210 நெக்பேண்ட் கேமிங் இயர்பட்ஸ் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த சாதனத்துக்கு அறிமுக சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது ரூ.899-விலையில் விங்ஸ் பேண்டம் 210 நெக்பேண்ட் மாடலை வாங்க முடியும்.

புதிய விங்ஸ் பேண்டம் 210 நெக்பேண்ட் கேமிங் இயர்பட்ஸ் மாடல் பிளாக், புளூ மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு விங்ஸ் நிறுவனம் விரைவில் பல்வேறு தரமான இயர்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications