கம்மி விலையில் AMOLED காஸ்மிக் டிஸ்பிளேவுடன் அறிமுகமான ஸ்மார்வாட்ச்.!
இந்திய சந்தையில் பிட்ஷாட் (FitShot) நிறுவனம் புதிய கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் தனித்துவமான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளது.

கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச்
இப்போது இந்த கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச்-இன் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.8 இன்ச் AMOLED காஸ்மிக் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ப்ளூடூத் காலிங் வசதி
புதிய பிட்ஷாட் கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் ஆனது அட்வான்ஸ்டு ப்ளூடூத் காலிங் மற்றும் சோலோசின்க் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும்இந்த ஸ்மார்ட் வாட்ச் மாடலை ஹவோபிட் (HaWoFit) செயலியுடன் சின்க் செய்து கொள்ளலாம் என்று பிட்ஷாட் நிறுவனம் கூறுகிறது.

இன்பில்ட் ஸ்பீக்கர்
அதேபோல் இன்பில்ட் ஸ்பீக்கர், மைக், ரேபிட் டயலர் போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இதன் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது பிட்ஷாட் நிறுவனம்.

டிஸ்பிளே அம்சங்கள்
அதாவது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 368x448 பிக்சல் ரெசல்யூஷன், 560 நிட்ஸ் பிரைட்னஸ் போன்ற பல டிஸ்பிளே அம்சங்களுடன் வெளிவந்துள்ளதுஇந்த பிட்ஷாட் கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடல்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது பெரிய சதுரங்க வடிவம் கொண்ட டயல் மற்றும் பக்கவாட்டில் ரோடரி பட்டன் ஆதரவைவழங்குகிறது.

ஸ்லீப் டிராக்கர்
குறிப்பாக 100-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச். இதுதவிர பில்ட்-இன் 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், ஸ்டெப் கவுண்ட்டர், ஸ்லீப் டிராக்கர் போன்ற பல ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த பிட்ஷாட் கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச்.

சிறந்த பேட்டரி பேக்கப்
இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு ஸ்டான்ட்-பை கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இதுதவிர வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்குகிறது இந்த அட்டகாசமான பிட்ஷாட் கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச்.

நிறங்கள்
புதிய பிட்ஷாட் கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் ஆனது கிரீன்,பிளாக், கிரே நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புமிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன விலை?
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட பிட்ஷாட் கிரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.2,999-ஆக உள்ளது. வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி மதியம் பிளிப்கார்ட் தளத்தில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும்.
குறிப்பாக இந்திய சந்தையில் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








