Just In
- 48 min ago
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- 1 hr ago
அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
- 2 hrs ago
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
- 2 hrs ago
அடேங்கப்பா.. கூகுள் மேப்-க்கு மாற்றாக இத்தனை செயலிகள் இருக்குதா? வாங்க பார்ப்போம்.!
Don't Miss
- News
அடேங்கப்பா.. 6 கோடி வருசம் பழசாம்! அயோத்தி கோயிலில் ராமர், சீதை சிலைக்கு நேபாளத்திலிருந்து வந்த பாறை
- Sports
தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Movies
விஜய் சூப்பர் ஸ்டாரா? வில்லங்கமான கேள்வி கேட்ட செய்தியாளர்.. டென்ஷனான எஸ்.ஏ.சந்திரசேகர்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நம்பமுடியாத கம்மி விலையில் அறிமுகமான boAt ஸ்மார்ட்வாட்ச்.! நம்பி தாராளமாக வாங்கலாம்.!
தற்போது பல முன்னணி நிறுவனங்கள் கம்மி விலையில் அசத்தலான ஸ்மார்ட்வாட் மாடல்களை அறிமுகம் செய்துவருகின்றன. அதேபோல் ஸ்மார்ட்போன், டேப்லெட் சாதனங்களை விட இப்போது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எனவே இதைக் கருத்தில் கொண்டு பல முன்னணி நிறுவனங்கள் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்கின்றன.

போட் நிறுவனம்
இந்நிலையில் பிரபலமான போட் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது போட் வேவ் எலெக்ட்ரா (boAt Wave Electra) என்று அழைக்கப்படும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.81-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு HD ரெசல்யூஷன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது IP 68 தர டஸ்ட், ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதாவது போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் அலுமினியம் அலாய் டிசைன்-ஐ அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இதயத் துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் போன்ற பல அசத்தலான அம்சங்களை வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்.

100-க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்கள்
அதேபோல் பிரீதிங் டிரெயினிங்,ஹைட்ரேஷன் அலர்ட், ஆக்டிவிட்டி டிராக்கர் மற்றும் 100-க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் இதில் உள்ளன. பின்பு பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி
இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அதிகபட்சமாக 50 காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து வைத்து எளிமையாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும். கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
குறிப்பாக மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல், வானிலை விவரங்கள், ஃபைண்ட் மை போன் போன்ற பல வசதிகளை வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச. பின்பு இதில் உள்ள பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்த 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் நீங்கள் இதில் அதிகமாக ப்ளூடூத் வசதியை பயன்படுத்தினால் 2 நாட்களுக்கு பேக்கப் வழங்கும்.

போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் விலை
போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் ஆனது பிளாக், புளூ மற்றும் பின்க் ஆகிய நிறங்களில் கிடைக்கும். இதன் விற்பனை வரும் டிசம்பர் 24-ம் தேதிஅமேசான் தளத்தில் தொடங்குகிறது. குறிப்பாக இதன் அறிமுக சலுகையாக ரூ.1,799-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470