GPS, ப்ளூடூத் காலிங் உடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான புதிய Realme Watch!
இந்தியாவில், ரியல்மி நிறுவனத்தின் (Realme) லேட்டஸ்ட் ஸ்மார்ட் வாட்ச் ஆக ரியல்மி வாட்ச் 3 ப்ரோ (Realme Watch 3 Pro) இன்று, அதாவது செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? எப்போது முதல் வாங்க கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

"வாவ்" சொல்ல வைக்கும் முக்கிய அம்சங்கள்!
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது நிறுவனத்தின் TechLife Ecosystem-இன் ஒரு பகுதியாகும் என்று Realme கூறுகிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.78-இன்ச் அளவிலான AMOLED டிஸ்ப்ளே, மல்டி-சிஸ்டம் ஸ்டாண்டலோன் ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் காலிங், AI நாய்ஸ் ரிடெக்ஷன் அல்காரிதம் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

அவ்ளோதானா? என்று கேட்டால்.. இல்லை, இன்னும் இருக்கிறது!
விரிவான அம்சங்களை பொறுத்தவரை, புதிய Realme Watch 3 Pro ஆனது 368 x 448 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 1.78-இன்ச் அளவிலான கர்வ்டு AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இது 'டைனமிக் மற்றும் ஸ்டேடிக் ஒன்ஸ் (Dynamic and static ones) மற்றும் ஆல்பம் வாட்ச் ஃபேசஸ் (Album watch faces) உட்பட 100க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்களுக்கான ஆதரவை வழங்குகிறது.
சுவாரசியமாக, இந்த வாட்ச் 'லோ பவர் கன்சம்ப்ஷன்' உடனான இரண்டுரெஸ்ட் ஸ்க்ரீன் கிளாக் டிஸ்பிளேக்களுடனும் வருகிறது.

இந்த விலையில் இதுவே முதல் முறை!
ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் 3 ப்ரோ மாடல் ஆனது இந்த விலைப்பிரிவின் கீழ் அறிமுகமாகும் முதல் மல்டி சிஸ்டம் ஸ்டாண்டலோன் ஜிபிஎஸ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் வாட்ச் ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் கூற்றுப்படி, இது தொடர்ச்சியான ஜிபிஎஸ் செயல்பாட்டின் கீழ், 20 மணி நேர பேட்டரி லைஃப்-ஐ வழங்கும்.

ப்ளூடூத் காலிங் வேற!
இந்த ஸ்மார்ட் வாட்ச் ஐந்து GNSS சிஸ்டம்களுடன் வருகிறது, இது லொக்கேஷன் தொடர்பான கண்காணிப்பின் போது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட் வாட்சில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் - ப்ளூடூத் காலிங் ஆகும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது ஒரு இன்பில்ட் ஸ்மார்ட் பவர் ஆம்ப்ளிஃபையருடன் வருகிறது

ஆரோக்கியத்தை கண்காணிக்க எக்கச்சக்கமான சென்சார்கள்!
ரியல்மி வாட்ச் 3 ப்ரோவில் ஹார்ட் ரேட் மற்றும் SpO2 அளவை கண்காணிக்கும் சென்சார்கள் உள்ளன. மேலும் ஸ்டெப்ஸ் கவுண்ட் மற்றும் ஸ்லீப் மானிட்டரிங்க்கான சென்சார்களும் உள்ளன.
இது தவிர்த்து, ஸ்ட்ரெஸ் மானிட்டரிங், ஸ்லீப் குவாலிட்டி மானிட்டரிங், ஃபீமேல் ஹெல்த் மானிட்டரிங், மற்றும் தவாட்டர் ட்ரிங்கிங் ரீமைண்டர் போன்றவைகளையும் வழங்கும்.

110 க்கும் மேற்பட்ட மோட்ஸ்!
உடற்பயிற்சி தொடர்பான அம்சங்களை பொறுத்த வரை, Realme Watch 3 Pro ஆனது 110 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களுடன் வருகிறது. உடற்பயிற்சி தொடர்பான புள்ளிவிவரங்களை Realme ஆப் வழியாக பெறலாம்.
345mAh பேட்டரி உடன் வரும் இந்த ஸ்மார்ட் வாட்ச், சிங்கிள் சார்ஜில் 10 நாட்கள் வரை பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Realme Watch 3 Pro-வின் விலை:
இந்தியாவில் ரியல்மி வாட்ச் 3 ப்ரோவின் விலை ரூ.4,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் Realme.com, Flipkart மற்றும் மெயின்லைன் சேனல்கள் வழியாக விற்பனைக்கு வரும்
இந்த ரியல்மி வாட்ச் ஆனது பிளாக் மற்றும் க்ரே என மொத்தம் 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

Realme C33 மற்றும் Realme Buds Air 3S TWS இயர்போன்களும் அறிமுகம்!
நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் வாட்ச் உடன், ரியல்மி சி 33 என்கிற பட்ஜெட் ஸ்மார்ட்போனும், ரியல்மி ஏர் 2எஸ் என்கிற புதிய இயர்போன்ஸும் அறிமுகம் செய்யப்பட்டது.
ரியல்மி யின் புதிய இயர்போன்ஸ் ஆனது ரூ.2,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 14 அன்று மதியம் 12 மணி முதல் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications