Home
Gadgets

புதிய ஆப்பிள் டிவி 4கே அறிமுகம்.. A19 சிப், Siri AI என அசத்தும் புதிய வசதிகள்.. என்ன விலை?

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஆப்பிள் டிவி 4கே (Apple TV 4K) சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட பிராசஸர், கைகளைப் பயன்படுத்தாமல் குரல் மூலம் கட்டுப்படுத்தும் வசதி, ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் சிறந்த இணைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட சரவுண்ட் சவுண்ட் வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் பயனர்கள் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இன்னும் சிறந்த அனுபவத்துடன் பார்த்து ரசிக்க முடியும்.

புதிய ஆப்பிள் டிவி 4கே சாதனத்தில், Siri AI என்ற மேம்படுத்தப்பட்ட வாய்ஸ் அசிஸ்டண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எளிதாகத் தேடலாம். மேலும், படம் பார்க்கும்போதே அதில் நடித்த நடிகர்கள் யார், அந்தப் படம் எந்த வயதினருக்கு ஏற்றது போன்ற கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெறலாம். பொது அறிவு தொடர்பான கேள்விகளுக்கும் Siri AI உதவும்.

புதிய ஆப்பிள் டிவி 4கே அறிமுகம்: A19 சிப்.. என்ன விலை?

மேலும், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் வசதி கொண்ட ஐபோனை ஆப்பிள் டிவி 4கே உடன் இணைத்தால், பயனருக்குப் பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பரிந்துரைக்க முடியும். குறிப்பாக இந்த புதிய சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

echo- கேன்சலேஷன்

புதிய ஆப்பிள் டிவி 4கே சாதனத்தில், மேம்படுத்தப்பட்ட வன்பொருள் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், மூன்று இன்-பில்ட் மைக்ரோஃபோன்கள் இடம்பெற்றுள்ளன. இவை echo- கேன்சலேஷன் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், பயனர்கள் பேசும் குரலைச் சாதனம் தெளிவாகக் கண்டறிய முடியும்.

ரிமோட்டைப் பயன்படுத்தாமலேயே "Siri" அல்லது "Hey Siri" என்று குரல் கொடுத்து Siri அசிஸ்டண்ட்-ஐ செயல்படுத்தலாம். வீடியோ அல்லது திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போதும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். இதனால், ஆப்பிள் டிவி 4கே சாதனத்தைக் குரல் மூலமாகவே எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.

இந்த ஆப்பிள் டிவி 4கே சாதனத்தில், A19 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலைவிட 50 சதவீதம் வேகமான CPU செயல்திறனையும், இருமடங்கு GPU செயல்திறனையும் வழங்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், செயலிகள் வேகமாக இயங்குவதுடன், வீடியோக்களைப் பார்ப்பதிலும் சிறந்த அனுபவம் கிடைக்கும்.

அதுவும் இந்தச் சாதனத்தில் AV1 வீடியோ தொழில்நுட்பத்திற்கான பிரத்யேக வன்பொருள் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குறைந்த இணைய வேகத்திலும் குறைந்த டேட்டாவைப் பயன்படுத்தி வீடியோக்களைச் சீராக ஸ்ட்ரீமிங் செய்ய உதவும். இதனால், இணையத்தில் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது வீடியோ அனுபவம் மேலும் மேம்படும்.

சிரி ரிமோட்

அதேபோல் சாதனத்துடன் வழங்கப்படும் சிரி ரிமோட் (Siri Remote)-இன் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆனால், அதில் Find My என்ற புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொலைந்துபோன ரிமோட்டை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். மேலும், இதில் உள்ள Precision Finding தொழில்நுட்பம், ரிமோட் இருக்கும் திசையைக் காட்ட உதவுகிறது. ஒலி எழுப்பும் வசதியும் இருப்பதால், சோபா அல்லது வீட்டின் வேறு இடங்களில் தவறவிட்ட ரிமோட்டை எளிதாகத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.

ஆப்பிள் டிவி 4கே சாதனத்தில், ஹோம் தியேட்டர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் நான்கு ஸ்பீக்கர்களுடன் சரவுண்ட் சவுண்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நான்கு HomePod mini 2 ஸ்பீக்கர்கள் அல்லது இரண்டாம் தலைமுறை HomePod ஸ்பீக்கர்கள் நான்கை இணைத்துப் பயன்படுத்தலாம். முன்புறம் இரண்டு ஸ்பீக்கர்களையும், பின்புறம் இரண்டு ஸ்பீக்கர்களையும் அமைத்து, சிறந்த ஒலி அனுபவத்தைப் பெறலாம். மேலும், அறையின் அமைப்பு மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு ஏற்ப ஒலியின் அளவையும் நேரத்தையும் சாதனம் தானாகவே சரிசெய்யும். இதனால், வீட்டிலேயே திரையரங்கில் படம் பார்ப்பது போன்ற அனுபவம் கிடைக்கும்.

இந்த ஆப்பிள் டிவி 4கே சாதனத்தை ஸ்மார்ட் ஹோம் கட்டுப்பாட்டு மையமாகவும் பயன்படுத்தலாம். இது Wi-Fi மற்றும் Thread வசதிகளுடன், HomeKit மற்றும் Matter சாதனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. மேலும், வீட்டில் உள்ள பாதுகாப்பு கேமராக்களின் வீடியோ தகவல்களைச் சுருக்கமாகக் காட்டவும் உதவுகிறது. வீடியோ டோர்பெல்லை இணைத்தால், தொலைக்காட்சித் திரையிலேயே வாசலில் இருப்பவரைப் பார்க்கவும், அவர்களுடன் பேசவும், கதவின் பூட்டைத் திறக்கவும் முடியும்.

புதிய ஆப்பிள் டிவி 4கே அறிமுகம்: A19 சிப்.. என்ன விலை?

ஆப்பிள் டிவி 4கே சாதனத்தில், பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மைக்ரோஃபோன் மூலம் பெறப்படும் குரல் தகவல்களைப் பாதுகாக்க A19 சிப்பில் சிறப்பு பாதுகாப்பு வசதி உள்ளது. மேலும், Siri AI மூலம் அனுப்பப்படும் கோரிக்கைகளைப் பாதுகாப்பாகச் செயல்படுத்த ஆப்பிளின் தனிப்பட்ட கிளவுட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், HomeKit பாதுகாப்பு கேமராக்களின் வீடியோக்களும் முழுமையான குறியாக்க முறையில் பாதுகாக்கப்படுகின்றன.

30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த புதிய சாதனத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் இந்த சாதனம் நவம்பர் 13-ம் தேதி விற்பனைக்கு வரும். குறிப்பாக ஆப்பிள் டிவி 4கே சாதனத்தில் விலை ரூ.39,900-ஆக உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த ஆப்பிள் டிவி 4கே மாடலை முன்பதிவு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
New Apple TV 4K Launched: Features, Specifications and India Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X