யாரு நம்ம ஆப்பிளா இது? வேற மாதிரி வடிவமைப்புடன் சரியான விலையில் புதிய iPad..

|

ஆப்பிள் முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட iPadஐ அறிமுகம் செய்துள்ளது. அது என்ன முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐபாட் என்று கேள்வி வருகிறதா? முந்தைய மாடல் வடிவமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இந்த ஐபாட் இருக்கிறது. இதன் விலையும் அவ்வளவு உயர்வாக இல்லை என்பது கவனிக்கத்தக்க வேண்டிய ஒன்று.

10.9 இன்ச் அளவு டிஸ்ப்ளே உடன் புதிய ஐபேட்

10.9 இன்ச் அளவு டிஸ்ப்ளே உடன் புதிய ஐபேட்

ஹோம் பட்டன் இல்லாமல் 10.9 இன்ச் அளவு டிஸ்ப்ளே உடன் ஆப்பிள் புதிய ஐபேடை வெளியிட்டுள்ளது. ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் மினி போன்ற தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது இந்த புதிய ஐபேட்.

இந்த ஐபேட் ஆனது சில்வர், ப்ளூ, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இதில் பவர் சென்சார் ஆனது சாதனத்தின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது.

வித்தியாசமான இடத்தில் முன்பக்க கேமரா

வித்தியாசமான இடத்தில் முன்பக்க கேமரா

10-வது தலைமுறை ஐபேட் ஆக இந்த புதிய மாடல் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஐபேட் இல் ஆப்பிள் ஏ14 பயோனிக் எஸ்ஓசி, யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவு இருக்கிறது. சாதனத்தில் போர்ட்ரெய்ட் மோட் இன் மேற்புறத்தில் செல்பி கேமரா இருப்பதே வழக்கம். ஆனால் இந்த ஐபேட் இல் லேண்ட்ஸ்கேப் நோக்கநிலையில் முன்பக்க கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

iPad 2022 விலை

iPad 2022 விலை

புதிய மறுவடிவமைப்பு செய்யப்பட்ட iPad விலை குறித்து பார்க்கலாம். முதலில் Wi-Fi-மட்டும் உள்ள மாறுபாட்டின் விலையை பார்க்கலாம். 64GB Wi-Fi மாறுபாட்டின் விலை ரூ.44,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 256GB Wi-Fi மாறுபாட்டின் விலை ரூ.59,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Wi-Fi மற்றும் செல்லுலார் மாறுபாட்டின் விலை குறித்து பார்க்கையில், இதன் 64 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.59,900 எனவும் 256 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.74,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஐபேட் இன் ப்ரீ ஆர்டர் தொடக்கம்

புதிய ஐபேட் இன் ப்ரீ ஆர்டர் தொடக்கம்

புதிய மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐபேட் ஆனது iPad (2022) ஆகும். iPad (2022) ஆனது தற்போதே முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது. அக்டோபர் 26 முதல் பல நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் முந்தைய தலைமுறை ஐபேட்

குறைந்த விலையில் முந்தைய தலைமுறை ஐபேட்

10.2 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஏ13 பயோனிக் எஸ்ஓசி சிப் ஆதரவை கொண்ட 9-வது ஜென்(தலைமுறை) ஐபேட் ஆனது தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது மறுபுறம் கவனிக்கத்தக்க வேண்டிய ஒன்று.

அதாவது 9-வது தலைமுறை ஐபேட் இன் 64 ஜிபி வேரியண்ட் ரூ.33,900 எனவும் 256 ஜிபி வேரியண்ட் ரூ.48,900 எனவும் கிடைக்கிறது.

iPad (2022) சிறப்பம்சங்கள்

iPad (2022) சிறப்பம்சங்கள்

iPad (2022) சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஐபேட் ஆனது A14 Bionic SoC மூலம் இயக்கப்படுகிறது. முந்தைய தலைமுறை ஐபேடை விட இது 20 சதவீதம் அதிக செயல்திறன் மற்றும் 10 சதவீதம் அதிக கிராபிக்ஸ் திறனை வழங்கும் என கூறப்படுகிறது.

அதேபோல் பொதுவாக மீடியாடெக் வசதியுடன் கிடைக்கும் ஆண்ட்ராய்டு டேப்லெட்டை விட ஆப்பிள் 5 மடந்த சிறந்த செயல்திறனை வழங்கும் என கூறப்படுகிறது. குறிப்பிட்ட மாடலை விட என எந்த மாடலின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

புதிய ஐபேட் சிறந்த தேர்வாக இருக்கும்

உற்பத்தித்திறன், கல்வி, தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு தேவைக்காக டேப்லெட்டை வாங்க திட்டமிட்டிருந்தால் புதிய ஐபேட் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் உள்ள அனைத்து அம்சங்களும் மேம்பட்டதாக இருக்கிறது.

குறிப்பிடத்தக்க அம்சங்கள் இதுதான்

குறிப்பிடத்தக்க அம்சங்கள் இதுதான்

புதிய ஐபேட் ஆனது 10.9 இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1640x2360 பிக்சல் தெளிவுத்திறன் மற்றும் 500 நிட்ஸ் பிரைட்னெஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

போர்ட்ரெய்ட் நிலையில் இல்லாம் லேண்ட்ஸ்கேப்பில் நிலையில் முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 12 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல் ஐபேட் இன் பின்புறத்தில் 12 எம்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது. இந்த கேமரா ஆனது 4K வீடியோ பதிவு மற்றும் 120fps ஸ்லோ-மோஷன் வீடியோ உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவும் வேகமான சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இந்த புதிய ஐபேட் ஆனது ஐபேட் ஓஎஸ் 16 மூலம் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New Apple iPad 2022 Completely Redesigned From Previous Model: Check the Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X