அடிச்சு புடிச்சு ஆர்டர்.. 7 இன்ச் டிஸ்பிளே.. 12 வாரங்கள் பேக்கப்.. 16GB ஸ்டோரேஜ்.. புது கிண்டில் மாடல்!
இந்திய மார்கெட்டில் இருக்கும் கிண்டில் பிரியர்களை அடிச்சு புடிச்சு ஆர்டர் போட வைக்கும்படியான பீச்சர்களுடன் அமேசான் கிண்டில் பேப்பர்வைட் (Amazon Kindle Paperwhite) களமிறங்கி இருக்கிறது. வாட்டர் ப்ரூப் சப்போர்ட் கொண்ட 7 இன்ச் டிஸ்பிளே, 12 வாரங்கள் பேக்கப் கொடுக்கும் பேட்டரி, 16 ஜிபி ஸ்டோரேஜ் போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்பும் இந்த அமேசான் கிண்டில் பேப்பர்வைட் மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
புத்தக பிரியர்களுக்கு டிஜிட்டல் வெர்ஷனாக அமேசான் கிண்டில் மாடல்கள் கிடைக்கின்றன. புத்தகங்களை போலவே பேப்பர்-லைக் அவுட்புட் கொண்ட டிஸ்பிளே, ஆன்டி-கிளார் மற்றும் வெயிட்-லெஸ் போன்ற பீச்சர்ளுடன் கிடைப்பதால், கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதே நேரத்தில் இதில் லட்சக்கணக்கான புத்தகங்களையும் டவுன்லோட் செய்து படிக்க முடியும்.

இதனால், அதற்காக வரவேற்பும் அதிகமாக இருக்கிறது. இப்போது, கூடுதல் பீச்சர்களுடன் அமேசான் கிண்டில் பேப்பர்வைட் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. 12ஆவது ஜெனரேஷன் மாடலாக இருப்பதால், பீச்சர்கள் மட்டுமல்லாமல், டியூரபிலிட்டியும் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. இப்போது முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் கிண்டில் பேப்பர்வைட் அம்சங்கள் (Amazon Kindle Paperwhite Specifications): இந்த கிண்டில் மாடலில் கிளார்-ப்ரீ (Glare-free) சப்போர்ட் கொண்ட 7 இன்ச் டிஸ்பிளே கிடைக்கிறது. பேப்பர்வைட் அவுட்புட் கிடைக்கும்படி ஆக்சைடு தின்-ஃபிளிம் டிரான்ஸ்சிஸ்டர் (Oxide Thin-film Transistor) டிஸ்பிளே டெக்னாலஜி கிடைக்கிறது. ஆகவே, ரீடிங் எக்ஸ்பிரீயன்ஸ் ரியலாக இருக்கும்.
நேரவ்வேர் பார்டர்கள் மற்றும் பெரிய டிஸ்பிளே சைஸ் கிடைப்பதால் புத்தகத்தின் பீல் எதிர்பார்க்கலாம். 300 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ஆகவே, பிரைட் லைட்டிலும் அவுட்புட் பக்காவாக இருக்கும். இதுபோக வார்ம் லைட் (Warm Light) மற்றும் டார்க் மோட் (Dark Mode) டிஸ்பிளே மோட்கள் கிடைக்கின்றன. லைட்-வெயிட் டிசைனில் கிடைக்கிறது.
ஆகவே, ஹேண்டில் செய்யவும் எளிதாக இருக்கும். 16 ஜிபி ஸ்டோரேஜ் சப்போர்ட் கிடைக்கிறது. இது 4ஜி கனெக்டிவிட்டி மாடல் கிடையாது. வை-பை மட்டுமே உள்ளது. இந்த அமேசான் கிண்டில் பேப்பர்வைட் மாடலில் பில்ட்-இன் டிஸ்னரி (Built-in Dictionary) சப்போர்ட் கிடைக்கிறது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சப்போர்ட் கொடுக்கும்படி கிண்டில் ஆப் (Kindle app) சப்போர்ட் கிடைக்கிறது. டியூரபிலிட்டி பக்காவாக இருக்கிறது.
ஏனென்றால், இந்த அமேசான் கிண்டில் பேப்பர்வைட் மாடலில் வாட்டர் ப்ரூப் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, வெட் டச் சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல ஸ்பிளாஷ் சப்போர்ட் வருகிறது. இதில் பேக்கப் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. அதாவது, ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்துவிட்டால் 12 வாரங்களுக்கு பேக்கப் கொடுக்கிறது.
ஆகவே, டிராவல் செய்யும் புத்தக பிரியர்களுக்கு இந்த மாடல் பக்கா ஆப்ஷனாக இருக்கிறது. இதற்கு கிண்டில் அன்லிமிடெட் (Kindle Unlimited) அக்சஸ் இருக்கிறது. இதை பெற்றுவிட்டால், 20 லட்சம் புத்தங்களை இலவசமாக படித்து கொள்ளலாம். அதேபோல அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு ரோட்டேடிங் கேட்டாலாக் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த அமேசான் கிண்டில் பேப்பர்வைட் மாடலில் பிளாக் (Black), மரைன் கிரீன் (Marine Green) மற்றும் டுலிப் பிங்க் (Tulip Pink) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. அமேசான் தளத்தில் மட்டுமே ஆர்டருக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. முந்தைய வெர்ஷன்களைவிட குவாலிட்டி மற்றும் டிஸ்பிளே எக்ஸ்பிரீயன்ஸ் வேண்டுமானால், இதை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








