விரைவில் இந்தியாவில் களமிறங்கும் அமேஸ்பிட் ஜிடிஎஸ் 4: என்னென்ன அம்சங்கள்?

|

அமேஸ்பிட் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Amazfit GTS 4 மாடல்

Amazfit GTS 4 மாடல்

மேலும் கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அமேஸ்பிட் ஜிடிஎஸ் மற்றும் ஜிடிஆர் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதைதொடர்ந்து இந்தியாவில் விரைவில் Amazfit GTS 4 மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?

அமேசான்

அமேசான்

குறிப்பாக அமேசான் தளத்தில் புதிய அமேஸ்பிட் ஜிடிஎஸ் 4 மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் புது ஸ்மார்ட்வாட் விரைவில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமா?வியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமா?

வெளியீட்டு தேதி?

வெளியீட்டு தேதி?

அதேபோல் இந்த புதிய அமேஸ்பிட் ஜிடிஎஸ் 4 ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டு தேதி, விலை மற்றும் விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த Amazfit GTR 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..

அமேஸ்பிட் GTR 4

அமேஸ்பிட் GTR 4

அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் மாடல் பயோடிராக்கர் 4.0 PPG ஆப்டிக்கல் சென்சார் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஐந்து செயற்கைக்கோள் சிஸ்டம்களுடன் இணைந்து செயல்படும் ஆற்றல் மிக்க தனித்துவமான ஜிபிஎஸ் வசதி இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் வழங்கப்பட்டுள்ளது.

குழப்பம் வேண்டாம் நாங்க இருக்கோம்: குழப்பம் வேண்டாம் நாங்க இருக்கோம்: "டாப் அம்சம்"., தொழில் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான சிறந்த லேப்டாப்கள்!

1.4-இன்ச் AMOLED டிஸ்பிளே

1.4-இன்ச் AMOLED டிஸ்பிளே

அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் 1.4-இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. பின்பு பில்ட் இன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல். குறிப்பாக அமேஸ்பிட் GTR 4 வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!

 தரமான பிட்னஸ் அம்சங்கள்

தரமான பிட்னஸ் அம்சங்கள்

அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் ஆனது பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், தரமான பிட்னஸ் அம்சங்கள், செப் ஆப்மூலம் மேம்பட்ட கூடுதல் வசதிகள் எனப்பல்வேறு ஆதரவுகளை வழங்குகிறது. இதுதவிர புதிய கொல்ப் ஸ்விங் மோட், அடிடாஸ் ரன்னிங் வசதி,டிராக் ரன் மோட் ஆகிய சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..இது ஏன் பெஸ்ட்Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..இது ஏன் பெஸ்ட்

 ஸ்டார்வா சேவை

ஸ்டார்வா சேவை

இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஸ்டார்வா சேவைக்கான சப்போர்ட், புதிய அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு இதில் உள்ள செப் ஆப் மூலம் வழித்தடங்களை இம்போர்ட் செய்யும் வசதியும் உள்ளது.

கூர்மையான கத்தி போன்ற நகங்கள்..கோரமான தோற்றம்.. ஆனா இப்படி ஒரு குணமா? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..கூர்மையான கத்தி போன்ற நகங்கள்..கோரமான தோற்றம்.. ஆனா இப்படி ஒரு குணமா? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..

கிரே, பிளாக்

14 நாட்களுக்கான பேட்டரி லைஃப் வசதியைக் கொண்டுள்ளது புதிய அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச். மேலும் இந்த டிவைஸ் கிரே, பிளாக் மற்றும் பிரவுன் லெதர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்ன விலை?

என்ன விலை?

அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை €199.99 (இந்திய மதிப்பில் ரூ.15,932) ஆக உள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்வாட்ச் அனைத்து நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அமேஸ்பிட் ஜிடிஎஸ் 4 மாடல் சற்று குறைவான விலையில் வெளிவரும்என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Amazfit GTS 4 will soon be launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X