Home
Gadgets

அட்டகாசமான Amazfit GTR 4 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்: விலையை சொன்னா நம்புவீங்களா?

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நுகர்வோர் மின்சாதன கண்காட்சியான 2022 ஐஎப்ஏ விழா இன்று தொடங்குகிறது. குறிப்பாக இந்த விழாவில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.

 அமேஸ்பிட் GTR 4

அமேஸ்பிட் GTR 4

அதேபோல் அமேஸ்பிட் நிறுவனமும் இன்று தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலுக்கு அமேஸ்பிட் GTR 4 என்று பெயரிடப்பட்டுள்ளது.

அட்டகாசமான அம்சங்கள்

அட்டகாசமான அம்சங்கள்

குறிப்பாக அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் தான் வெளிவந்துள்ளது. இப்போது புதிய சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் மாடல் பயோடிராக்கர் 4.0 PPG ஆப்டிக்கல் சென்சார்
வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தனித்துவமான ஜிபிஎஸ்

தனித்துவமான ஜிபிஎஸ்

மேலும் ஐந்து செயற்கைக்கோள் சிஸ்டம்களுடன் இணைந்து செயல்படும் ஆற்றல் மிக்க தனித்துவமான ஜிபிஎஸ் வசதி இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

குறிப்பாக அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் 1.4-இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. பின்பு பில்ட் இன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

தரமான பிட்னஸ் அம்சங்கள்

தரமான பிட்னஸ் அம்சங்கள்

அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் ஆனது பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், தரமான பிட்னஸ் அம்சங்கள், செப் ஆப்மூலம் மேம்பட்ட கூடுதல் வசதிகள் எனப்பல்வேறு ஆதரவுகளை வழங்குகிறது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம்.

இதுதவிர புதிய கொல்ப் ஸ்விங் மோட், அடிடாஸ் ரன்னிங் வசதி,டிராக் ரன் மோட் ஆகிய சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

 வழித்தடங்களை இம்போர்ட் செய்யும் வசதி

வழித்தடங்களை இம்போர்ட் செய்யும் வசதி

அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஸ்டார்வா சேவைக்கான சப்போர்ட், புதிய அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு இதில் உள்ள செப் ஆப் மூலம் வழித்தடங்களை இம்போர்ட் செய்யும் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி வசதி

பேட்டரி வசதி

14 நாட்களுக்கான பேட்டரி லைஃப் வசதியைக் கொண்டுள்ளது புதிய அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச். மேலும் இந்த டிவைஸ் கிரே, பிளாக் மற்றும் பிரவுன் லெதர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 விலையை சொன்னா நம்புவீங்களா?

விலையை சொன்னா நம்புவீங்களா?

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாகவே உள்ளன. ஆனால் இதன் விலை மட்டும் தான் சற்று அதிகம். அதாவது புதிய அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை €199.99 (இந்திய மதிப்பில் ரூ.15,932) ஆக உள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்வாட்ச் அனைத்து நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Amazfit GTR 4 with dual-band GPS SmartWatch Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X