Home
Gadgets

பிப்.19 முதல் குட்டி டிவிக்கு குட்பை.. அல்டிமேட் விலையில் 75-inch ஸ்மார்ட் TV.. Xiaomi-யின் புது 2026 மாடல்!

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் தனது எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2025 ஸ்மார்ட் டிவி சீரீஸை (X Pro QLED 2025 Smart TV Series) கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட் டிவி சீரீஸின் கீழ் தற்போது 43-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் உள்ளிட்ட மூன்று டிஸ்பிளே அளவுகளில் உள்ள ஸ்மார்ட் டிவி மாடல்கள் வாங்க கிடைக்கிறது.

நான்காவது மாடல்: இதற்கிடையில் ​​சீன தொழில்நுட்ப நிறுவனமான ஷாவ்மீ - இன்னும் சில நாட்களில் - அதன் எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி டிவி சீரிஸின் கீழ் இன்னும் பெரிய டிஸ்பிளே சைஸ் கொண்ட ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அது 75 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆகும்.

அல்டிமேட் விலையில் 75-inch ஸ்மார்ட் TV.. Xiaomi-யின் புது 2026 மாடல்!

எப்போது அறிமுகம்? எக்ஸ் (X) தளம் வழியாக - ஷாவ்மீ நிறுவனம் அதன் புதிய ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2026 ஸ்மார்ட் டிவி (Xiaomi X Pro QLED 2026 Smart TV) மாடல் ஆனது வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

எப்போது முதல் விற்பனை? இந்த அறிவிப்பை தொடர்ந்து வரவிருக்கும் ஸ்மார்ட் டிவிக்கான பிரத்யேக மைக்ரோசைட் இப்போது ஷாவ்மீ இந்தியா (Xiaomi India) ஆன்லைன் ஸ்டோரில் நேரலையில் உள்ளது. இதன் மூலம் பிப்ரவரி 16 அறிமுகத்திற்கு பின்னர் குறிப்பிட்ட 75 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது ஷாவ்மீ நிறுவனத்தின் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் என்பது உறுதியாகிறது.

என்னென்ன அம்சங்கள்? இந்த புதிய மாடலின்பெரும்பாலான முக்கிய அம்சங்கள் இன்னும் மறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த டிவி சினி மேஜிக்யூ (CineMagiQ) மற்றும் மேக்ஸ் மேஜிக்யூ (MaxMagiQ) அம்சங்களுடன் (இது 2025 மாடல்களிலும்உள்ளது) வரும் என்றும், ஒப்பீட்டளவில் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்றும் ஷாவ்மீ நிறுவனம் கூறுகிறது.

என்ன விலைக்கு வரலாம்? முன்னரே குறிப்பிட்டபடி ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2026 மாடல் ஆனது கடந்த ஏப்ரல் 2025 இல் அறிமுகமான ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2025 மாடல்களின் அறிமுகத்திற்கு பிறகு வருகிறது. ஆக நிச்சயம் இது 2025 சீரிஸின் 65 இன்ச் மாடலின் விலையை விட அதிகமாகவே இருக்கும்

நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2025 சீரீஸின் 43 இன்ச் மாடல் ரூ.31,999 க்கும், 55 இன்ச் மாடல் ரூ.44,999 க்கும் மற்றும் 65 இன்ச் மாடல் ரூ.64,999 க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக புதிய 2026 சீரிஸின் கீழ் வரும் 65 இன்ச் மாடலின் விலை நிச்சயமாக ரூ.70000 க்கு மேலான பட்ஜெட்டில் தான் இருக்கும்.

இந்த புதிய 75 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது ஒரு ஸ்டாண்டுடன் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இது வால் மவுண்ட் (Wall Mount) விருப்பத்தையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலதிக விவரங்கள் ஷாவ்மீ இந்தியா வலைத்தளம் வழியாக விரைவில் வெளியிடப்படலாம்.

ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2025 மாடல்களின் முக்கிய அம்சங்கள்: அனைத்து மாடல்களுமே 4K (3,840x2,160 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன் மற்றும் 178 டிகிரி வியூவிங் ஆங்கிள், டால்பி விஷன், HDR10+ ஆதரவு மற்றும் 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய டிஸ்பிளேக்களை கொண்டுள்ளன. மேலும் இந்த சீரிஸ் ஷாவ்மீ நிறுவனத்தின் விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) மற்றும் DLG (டூயல் லைன் கேட் - Dual Line Gate) தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது.

முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை 65-இன்ச் மாடலில் 34W ஸ்பீக்கர் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது, இது ஷாவ்மீ சவுண்ட் (Xiaomi Sound), டால்பி ஆடியோ (Dolby Audio), DTS:X மற்றும் DTS விர்ச்சுவல்: X தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இது குவாட் கோர் A55 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது; மாலி-G52 MC1 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 2GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜையும் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New 75 inch Xiaomi X Pro QLED 2026 Smart TV Launching in India on February 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X