Just In
- 35 min ago
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு (February 14) எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- 2 hrs ago
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- 2 hrs ago
ChatGPT க்கு ஆப்பு.. சுந்தர் பிச்சையின் சூப்பர் ஐடியா.. Google-ன் ஆட்டம் இனி வேற மாதிரி இருக்கும்!
- 2 hrs ago
"நேற்று வந்த பையன்" வரலாறு படைக்கும் ChatGPT! அடுத்தடுத்து உடைக்கப்படும் சாதனைகள்!
Don't Miss
- Sports
அஸ்வின் ஆஸி. மண்டைக்குள்ள போய்ட்டாரு.. பங்கமாக கலாய்த்த வசீம் ஜாபர்.. பேட்ஸ்மேன்களுக்கு யோசனை
- Movies
LEO: தீபாவளி ரேஸில் இருந்து விலகிய லியோ... விஜய் - லோகேஷின் மாஸ்டர் பிளான் இதுதானா?
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!
பெரிய சைஸ் டிவி ஒன்னு வாங்கி.. அதை வீட்டு ஹாலில் வைத்து.. அதற்கு முன்னாடி ஒரு சேர் போட்டு இல்லனா நல்ல சோஃபா செட் ஒன்னு போட்டு.. ஜம்மனு உட்காந்து.. தியேட்டர் எபெஃக்ட்ல ஒரு மூவியோ அல்லது வெப் சீரீஸையோ பார்க்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக நீங்கள் ஒரு Sony Smart TV விரும்பியா?

அப்போது அந்த ஆசை.. பேராசை ஆகட்டும்!
இந்தியாவில் அறிமுகமாகி உள்ள சோனி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவி ஒன்று, (மேற்கண்ட) உங்களின் "சாதாரண" ஆசையை ஒரு பேராசையாக மாற்றும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!
அப்படி என்ன டிவி? இந்த சோனி டிவியின் மாடல் பெயர் என்ன? இதன் டிஸ்பிளே சைஸ் என்ன? இதன் இந்திய விலை நிர்ணயம் என்ன? எதன் வழியாக வாங்க கிடைக்கும்? ஆசைகளை தூண்டும் அளவிற்கு இந்த டிவியில் அப்படி என்ன தான் ஸ்பெஷல்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்!

Sony நிறுவனத்தின் புதிய XR Master டிவி!
பிரபல ஸ்மார்ட் டிவி தயாரிப்பாளர் ஆன சோனி, இந்தியாவில் அதன் புதிய பிராவியா எக்ஸ்ஆர் மாஸ்டர் சீரிஸ் ஏ95கே ஓஎல்இடி ஸ்மார்ட் டிவி (Bravia XR Master Series A95K OLED Smart TV) மாடலை அறிமுகம் செய்துள்ளது.
சோனி நிறுவனத்தின் இந்த புதிய ஓஎல்இடி பேனல் ஸ்மார்ட் டிவி ஆனது காக்நிட்டிவ் ப்ராசஸர் எக்ஸ்ஆர் (Cognitive Processor XR) கொண்டு இயக்கப்படுகிறது.
நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த டிவியில் உள்ள காக்நிட்டிவ் ப்ராசஸர் எக்ஸ்ஆர் ஆனது முழு திறமையிலான பார்வை அனுபவத்தை வழங்குவதற்காக ஒரு "மனித மூளையை போல" சிந்திக்கும்!

எந்தவொரு Content-ஐயும் 4K-வாக மாற்றும் மாயாஜாலம்!
பிராவியா எக்ஸ்ஆர் மாஸ்டர் சீரிஸ் ஓஎல்இடி டிவி ஆனது "சிங்கிள்" 65-இன்ச் வேரியண்ட்டில் மட்டுமே வருகிறது. முன்னரே கூறியபடி, இதன் Cognitive Processor ஆனது மனிதர்கள் பார்க்கும் மற்றும் கேட்கும் விதத்தின் கீழ் கன்டென்ட்-ஐ Reproduce செய்யுமாம்.
இந்த ப்ராசஸர் எக்ஸ்ஆர் ட்ரைலுமினோஸ் மேக்ஸையும் (XR Triluminos Max) செயல்படுத்துகிறது, இது பரந்த அளவிலான Colour Palette-களை வழங்கும் என்று சோனி உறுதியளிக்கிறது. சுவாரசியமாக, நீங்கள் எந்த கன்டென்ட்-ஐ பார்த்தாலும் சரி, இந்த ப்ராசஸர் அதை 4K ரெசல்யூஷனுக்கு உயர்த்துமாம்!

ஸ்மூத் ஆன கேமிங்... தரமான சவுண்ட் சிஸ்டம்!
Google TV, Apple AirPlay 2 மற்றும் HomeKit ஆகியவற்றை ஆதரிக்கும் சோனியின் இந்த A95K OLED TV ஆனது HDMI 2.1 போர்ட்டுடன் வருகிறது.
இதன் டிஸ்பிளே 120fps அளவிலான 4K, வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate - VRR), ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode - ALLM), ஆட்டோ HDR டோன் ஆட்டோ கேம் மோட் போன்ற ஆதரவுகளையும் கொண்டு வருகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட் டிவி Dolby Vision, Dolby Atmos, IMAX என்ஹான்ஸ்டு மற்றும் Netflix அடாப்டி கேலிப்ரேடட் மோட் போன்றவைகளையும் ஆதரிக்கிறது. உடன் இந்த சோனி டிவி, 3D சரவுண்ட் அப்ஸ்கேலிங்குடன் (3D surround upscaling) Acoustic Surface Audio+ மற்றும் XR சரவுண்டிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

Bravia Core என்கிற ஸ்ட்ரீமிங் ஆப் உடன் வருகிறது!
இந்த Bravia XR Master Series A95K OLED ஸ்மார்ட் டிவி ஆனது பிராவியா எக்ஸ்ஆர் டிவிகளில் பிரத்தியேகமாக அணுக கிடைக்கும் ஸ்ட்ரீமிங் ஆப் ஆன பிராவியா கோர் உடன் வருகிறது.
Bravia Core ஆனது 10 புதிய ரிலீஸ்கள் மற்றும் 24 மாதங்கள் வரையிலான சிறந்த திரைப்படங்களின் வரம்பற்ற ஸ்ட்ரீமிங் போன்றவைகளுக்கான அணுகலை வழங்கும்.
மேலும் இதில் அணுக கிடைக்கும் Bravia Core Calibrated Mode ஆனது, வீட்டிலேயே திரைப்படம் பார்க்கும் அனுபவத்திற்கு உகந்த பிக்சர் செட்டிங்ஸ்-களையும் உங்களுக்காக உருவாக்கும்!

விலை மற்றும் விற்பனை?
XR-65A95K என்கிற மாடல் பெயரின் கீழ் வாங்க கிடைக்கும் Sony Bravia XR Master Series A95K OLED TV-யின் விலை ரூ.3,69,990 ஆகும்.
சோனி நிறுவனத்தின் இந்த புதிய டிவியின் இந்திய விற்பனை, நேற்று (ஆகஸ்ட் 8) முதலே தொடங்கி விட்டது. ஆர்வமுள்ளவர்கள், இந்தியாவில் உள்ள அனைத்து சோனி சென்டர்கள், முக்கிய எலக்ட்ரானிக் கடைகள் மற்றும் இ-காமர்ஸ் போர்டல்களின் வழியாக இந்த டிவியை சொந்தமாக்கி கொள்ளலாம்!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470