Home
Gadgets

இனி வீட்டுக்குள்ள தியேட்டர்.. 55-இன்ச் டிவிகளை ஓரங்கட்டும் விலையில் 65-இன்ச், 75-இன்ச் MiniLED 4K TV அறிமுகம்!

என்னப்பா 40-இன்ச், 55-இன்ச்னு பேசிக்கிட்டு.. இந்தாங்க வச்சிக்கோங்க 65-இன்ச் மற்றும் 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் என்று கூறும்படியாக ஏசர் நிறுவனம் தனது எம் சீரிஸ் ஹைப்ரிட் க்யூஎல்இடி பிளஸ் மினிஎல்இடி 4கே ஸ்மார்ட் டிவிகளை (Acer M Series hybrid QLED + MiniLED 4K smart TV) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரீஸில் 65 இன்ச் மற்றும் 75 இன்ச் ஸ்க்ரீன் சைஸ்கள் கொண்ட 2 மாடல்கள் உள்ளன

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, 65 இன்ச் (65 inch) மற்றும் 75 இன்ச் (75 inch) ஆகிய இரண்டு மாடல்களின் டிஸ்பிளே பேனல்களுமே டால்பி விஷன் ஆதரவுடன் (Dolby Vision Support) வருகின்றன. கூடவே நெட்ஃபிளிக்ஸ் (Netflix), ப்ரைம் வீடியோ (Prime Video), யூட்யூப் (YouTube) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான (Disney plus Hotstar) ஹாட்கீஸை உள்ளடக்கிய ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote) உடன் அனுப்பப்படுகின்றன.

வீட்டுக்குள்ள தியேட்டர்.. 65-இன்ச், 75-இன்ச் MiniLED 4K TV அறிமுகம்!

மேலும் மிகவும் குறுகிய பெசல்களை (Narrow bezels) கொண்டுள்ள இவ்விரு மாடல்களுமே 60W அவுட்புட் மற்றும் டால்பி அட்மோஸ் உடன் 2.1-சேனல் ஸ்பீக்கர் சிஸ்டமை (2.1-channel speaker system) கொண்டுள்ளன. விரிவான அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட் டிவிகள் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் 1,400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1400nits of peak brightness) உடனான க்யூஎல்இடி மற்றும் மினி எல்இடி ஹைப்ரிட் டிஸ்பிளேக்களுடன் வருகின்றன.

மேலும் டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10 ஆதரவையும் (HDR10 support) கொண்டுள்ளன. இந்த ஸ்மார்ட் டிவிகள் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுங் இணைக்கப்பட்ட ஏஐ ஆதரவு கொண்ட டூயல் ப்ராசஸர் ஆர்கிடெக்சர் (AI-backed dual-processor architecture - A77 + A55) மூலம் இயக்கப்படுகின்றன.

ஏசர் நிறுவனத்தின் இந்த எம் சீரிஸ் ஹைப்ரிட் மினிஎல்இடி டிவிகள் ஆனது டிவிக்கான ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் கூகுள் டிவி (Google TV) மூலம் இயக்கப்படுகின்றன. இவைகள் இன்பில்ட் க்ரோம்காஸ்ட் ஆதரவையும் (Inbuilt Chromecast support) கொண்டுள்ளன மற்றும் டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2, எச்டிஎம்ஐ மற்றும் யூஎஸ்பி ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களையும் கொண்டுள்ளன.

முன்னரே குறிப்பிட்டபடி இந்த டிவிகள், வாய்ஸ் எனேபிள்டு ஸ்மார்ட் ரிமோட் (Voice enabled Smart Remote) உடன் வருகின்றன, இதில் நெட்ஃபிளிக்ஸ், ப்ரைம் வீடியோ, யூட்யூப் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஹாட்கீஸ் உள்ளன. ஏசர் எம் சீரிஸ் ஹைப்ரிட் மினிஎல்இடி ஸ்மார்ட் டிவிகள் ஒவ்வொன்றும் 60W அவுட்புட் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் 2.1 சேனல் ஸ்பீக்கர் சிஸ்டமை கொண்டுள்ளன

மேலும் இரண்டு மாடல்களுமே டேபிள் (Table) மற்றும் வால் மவுண்ட் (Wall Mount) ஆதரவை வழங்குகின்றன. இந்த 2 ஸ்மார்ட் டிவிகளுமே குறுகிய மெட்டல் ஃபிரேம்கள் உடனான மெலிதான வடிவமைப்பை கொண்டுள்ளன. 65 இன்ச் மாடல் ஆனது அளவீட்டில் 70 x 1448 x 838 மிமீ உளள்து; மறுகையில் உள்ள 75 இன்ச் மாடல் ஆனது 74 x 1658 x 965 மிமீ உள்ளது.

ஏசர் எம் சீரிஸ் ஹைப்ரிட் மினிஎல்இடி 4கே ஸ்மார்ட் டிவிகளின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 65-இன்ச் அளவிலான ஏசர் எம் சீரிஸ் ஹைப்ரிட் மினிஎல்இடி 4கே ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.89,999 கும், 75-இன்ச் மாடல் ரூ.1,39,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு பதிப்புகளுமே தற்போது அமேசான் இந்தியா வலைத்தளம் (Amazon India Website) வழியாக வாங்க கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
New 65 inch 75 inch Google TV Launched in India Acer M Series Hybrid QLED MiniLED 4K Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X