தரமான 55-இன்ச் டிவியை வாங்க ஐடியா இருக்கா? வெயிட் பண்ணுங்க வருது OnePlus பிரமாண்டம்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மற்றும் ஆடியோ சாதனங்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஒன்பிளஸ்

ஒன்பிளஸ்

குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 50-இன்ச் கொண்ட ஒன்பிளஸ் 50 ஒய்1எஸ் ப்ரோ (OnePlus TV 50 Y1S Pro) எனும் ஸ்மார்ட் டிவியை
இந்தியாவில் அறிமுகம் செய்தது.

WhatsApp வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸை Record செய்வது எப்படி? ரொம்ப ஈஸியான டிப்ஸ்.!WhatsApp வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸை Record செய்வது எப்படி? ரொம்ப ஈஸியான டிப்ஸ்.!

 55-இன்ச் ஸ்மார்ட் டிவி

55-இன்ச் ஸ்மார்ட் டிவி

இந்நிலையில் 55-இன்ச் டிஸ்பிளே கொண்ட புதிய ஸ்மார்ட் டிவியை பட்ஜெட் விலையில் வரும் வாரங்களில் அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மா சமீபத்தில் தெரிவித்தது என்னவென்றால் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 55-இன்ச் ஸ்மார்ட் டிவி விரைவில் வெளியிடப்படும்.

Nothing Phone (1) இருக்கா.. உங்க காட்டில் மழைதான்- தீயா உழைக்கிறாங்க!Nothing Phone (1) இருக்கா.. உங்க காட்டில் மழைதான்- தீயா உழைக்கிறாங்க!

 4கே ஸ்கிரீன்

4கே ஸ்கிரீன்

குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 55-இன்ச் ஸ்மார்ட் டிவி 4கே ஸ்கிரீன், MEMC மற்றும் Dolby Audio ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய 55-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது தரமான மென்பொருள் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த டிவியின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் தெரியவில்லை. இருந்தபோதிலும் விரைவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பட்ஜெட் விலையில் 108MP கேமராவுடன் தரமான Moto G72 ரெடி.! 3 நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க.!பட்ஜெட் விலையில் 108MP கேமராவுடன் தரமான Moto G72 ரெடி.! 3 நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க.!

ஒன்பிளஸ் 50 ஒய்1எஸ் ப்ரோ

ஒன்பிளஸ் 50 ஒய்1எஸ் ப்ரோ

அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 50 ஒய்1எஸ் ப்ரோ (OnePlus TV 50 Y1S Pro) மாடலின் விலை மற்றும் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

OnePlus TV 50 Y1S Pro ஆனது பெசல்லெஸ் வடிவமைப்பு, 4K ரெசல்யூஷனை கொண்ட 50 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் அட்வான்ஸ்டு காமா எஞ்சின், MEMC (மோஷன் எஸ்டிமேஷன் மோஷன் காம்பென்சேஷன்) தொழில்நுட்பம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

ப்ரொபெஷனல் Gamer ஆக வேண்டுமா? இந்த டாப் பெஸ்ட் Smartphone ப்ளூடூத் கேமிங்பேட் வாங்குங்க.!ப்ரொபெஷனல் Gamer ஆக வேண்டுமா? இந்த டாப் பெஸ்ட் Smartphone ப்ளூடூத் கேமிங்பேட் வாங்குங்க.!

அருமையான ஆடியோ வசதி

அருமையான ஆடியோ வசதி

குறிப்பாக OnePlus TV 50 Y1S Pro ஸ்மார்ட் ஆனது HDR10+, HDR10 மற்றும் HLG ஃபார்மெட்டிற்கான ஆதரவையும் வழங்குகிறது. எனவே பயனர்கள் சிறந்த திரை அனுபவத்தை பெறமுடியும்.

இந்த 50-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது Dolby Audio ஆதரவுடன் 2 ஃபுல்-ரேன்ஜ் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. இதன் மொத்த அவுட்புட் 24W ஆகும். எனவே இந்த டிவி ஒரு சிறந்த தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம்.

ஆண்ட்ராய்டு டிவி 10.0

ஆண்ட்ராய்டு டிவி 10.0

OnePlus TV 50 Y1S Pro மாடல் ஆனது ஆண்ட்ராய்டு டிவி 10.0 மூலம் இயக்கப்படுகிறது. ஆக இந்த டிவியை "கட்டுப்படுத்த" நீங்கள் Google Assistant-ஐயும் செயல்படுத்தலாம். மேலும் இதில் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் ஸ்பெஷல் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) ஒன்றும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம்.

குழப்பமே வேணாம்.. சிறந்த தள்ளுபடி விலையில் OnePlus ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!குழப்பமே வேணாம்.. சிறந்த தள்ளுபடி விலையில் OnePlus ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

இந்த 50-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை உங்களது ஒன்பிளஸ் பட்ஸ் மற்றும் ஒன்பிளஸ் வாட்ச்-ஐ 'கனெக்ட்' செய்ய முடியும். பின்பு ஒன்பிளஸ் வாட்ச் பயன்படுத்தும் பயனர்கள் இந்த டிவியை ஒரே கிளிக்கில் ஆன் மற்றும் ஆஃப் செய்ய முடியும்.

அதேபோல் நீங்கள் டிவி பார்க்கும் போதே தூங்கிவிட்டதை உங்கள் ஒன்பிளஸ் வாட்ச் உணரும்போது,டிவியை அது தானாகவே ஆஃப் செய்து விடும். குறிப்பாக தனித்துவமான மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

என்ன விலை?

என்ன விலை?

OnePlus TV 50 Y1S Pro ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.32,999-ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிக்கு தற்போது இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவிக்கு ஒன்பிளஸ் இணையதளத்தில் தற்போது சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
new 55-inch LED OnePlus Smart TV will be launched in India soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X