இந்த 'மேட்டர்' தெரிஞ்சா.. புது TV வாங்குற பிளானை உடனே தள்ளி வச்சிடுவீங்க!

|

அது என்ன மேட்டர் என்றால்? இந்தியாவில் வாங்க கிடைக்கும் பெரும்பாலான பெஸ்ட் ஸ்மார்ட் டிவிகளை தன்வசம் கொண்டுள்ள சியோமி நிறுவனம், ஒரு தரமான புதிய 4K TV-யை அறிமுகம் செய்ய உள்ளது!

அது என்ன மாடல்? அது எப்போது அறிமுகம் ஆகும்? என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

என்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்?

என்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்?

அது சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் (Xiaomi Smart TV X) சீரீஸ் டிவி மாடல்கள் ஆகும். இது வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். அதே நாளில் Xiaomi NoteBook Pro 120G லேப்டாப்பும் அறிமுகமாகும் என்பது கூடுதல் தகவல்.

புதிய சியோமி ஸ்மார்ட் டிவிகளை பொறுத்தவரை, நிறுவனம் 'சீரீஸ்' என்கிற வார்த்தையை ட்வீட் செய்துள்ளதால், வரவிருக்கும் எக்ஸ் சீரீஸில் குறைந்தபட்சம் மூன்று டிவி மாடல்களையாவது நாம் எதிர்பார்க்கலாம்.

இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!

உறுதி செய்யபட்ட 4K டிஸ்ப்ளே ரேஸல்யோஷன்!

உறுதி செய்யபட்ட 4K டிஸ்ப்ளே ரேஸல்யோஷன்!

சியோமி நிறுவனத்தின் புதிய X சீரிஸின் கீழ் வரும் டிவி மாடல்களானது 4K ரெசல்யூஷன் டிஸ்ப்ளேக்களுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த டிவிகள் நேர்த்தியான மற்றும் "தடையில்லாத" வடிவமைப்பை கொண்டிருக்கும். இது தவிர்த்து, சியோமி நிறுவனம் அதன் வரவிருக்கும் தொலைக்காட்சிகள் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.

இருப்பினும் சியோமி நிறுவனம், ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக, அதன் எக்ஸ் சீரீஸ் டிவிகளின் பெரும்பாலான அம்சங்களை 'டீஸ்' செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டால்பி விஷன், எச்டிஆர்10+, 40W சவுண்ட் அவுட்புட் என்று லிஸ்டு போய்ட்டே இருக்கு!

டால்பி விஷன், எச்டிஆர்10+, 40W சவுண்ட் அவுட்புட் என்று லிஸ்டு போய்ட்டே இருக்கு!

ஆகஸ்ட் 31-இல் அறிமுகமாகும் புதிய Xiaomi Smart TV X சீரீஸ் ஆனது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகமான Mi TV 5X சீரீஸின் "மேம்படுத்தப்பட்ட வாரிசாக" வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம், 5எக்ஸ் சீரீஸ் மாடல்களில் 4K தெளிவுத்திறன், டால்பி விஷன் மற்றும் HDR10+ க்கான ஆதரவை நாம் கண்டோம். மேலும் அவைகள் 40W சவுண்ட் அவுட்புட் உடன் வந்தன.

உடன் Mi TV 5X சீரீஸ் டிவி மாடல்கள் ஆனது 2GB RAM மற்றும் 16GB ஸ்டோரேஜ் உடன் 64-பிட் குவாட் கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. ஆக 5எக்ஸ் சீரிஸில் உள்ள அம்சங்களை "மேம்படுத்தப்பட்ட முறையில்" புதிய எக்ஸ் சீரீஸ் மாடல்களில் காணலாம்!

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

Xiaomi Smart TV X Series என்ன விலைக்கு வரும்?

Xiaomi Smart TV X Series என்ன விலைக்கு வரும்?

நினைவூட்டும் வண்ணம், Mi TV 5X சீரிஸின் பேஸிக் வேரியண்ட் ஆனது ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக வரவிருக்கும் Xiaomi Smart TV X சீரீஸ் மாடலின் பேஸிக் வேரியண்ட்டும் ரூ.32,000 - ரூ.35,000-ஐ சுற்றிய விலை நிர்ணயத்தையே பெறும் என்று நம்புவதில் எந்த தவறும் இல்லை!

இது நல்ல மேம்படுத்தல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது சற்று அதிகமான ஆரம்ப விலைக் குறியீட்டை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

Xiaomi NoteBook Pro 120G லேப்டாப்பில் என்ன எதிர்பார்க்கலாம்?

Xiaomi NoteBook Pro 120G லேப்டாப்பில் என்ன எதிர்பார்க்கலாம்?

அதே ஆகஸ்ட் 30 ஆம் தேதி அறிமுகமாகும் சியோமி நோட்புக் ப்ரோ 120G லேப்டாப்பை பொறுத்தவரை, இது மெலிதான பெஸல்கள், ஃபுல்-ஸைஸ்டு கீபோர்டு மற்றும் பெரிய டிராக்-பேட் உடன் வரும்.

லேப்டாப்பின் மாடல் பெயரில் உள்ள '120G' ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரெட் ஆதரவை வழங்கும் டிஸ்பிளே அல்லது 12த் ஜென் இன்டெல் கோர் ப்ராசஸர்-ஐ குறிக்கலாம்.

Best Mobiles in India

English summary
New 4K Display Smart TV Series From Xiaomi Launch in India on 30 August

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X